தோனி தலைமையிலான சென்னை சூப்பர் கிங்ஸ் அணியானது இந்தியாவில் நடைபெற்று வரும் நடப்பு ஐபிஎல் கிரிக்கெட் தொடரில் ஏற்கனவே முதல் 10 போட்டிகள் முடிவடைந்த வேளையில் 8 தோல்விகளை சந்தித்து பிளே ஆப் சுற்றிற்கான வாய்ப்பை இழந்த வேளையில் நேற்று பெங்களூரு அணிக்கு எதிராக நடைபெற்ற தங்களது 11-ஆவது லீக் ஆட்டத்திலும் தோல்வியை சந்தித்து இந்த தொடரில் தங்களது ஒன்பதாவது தோல்வியை பெற்று கடைசி இடத்திலேயே நீடிக்கிறது.
கலீல் அகமது நிகழ்த்திய மோசமான சாதனை :
அதன்படி நேற்று நடைபெற்ற 52-வது லீக் ஆட்டத்தில் பெங்களூரு மற்றும் சென்னை ஆகிய அணிகள் மோதின. இந்த போட்டியில் டாசில் வெற்றி பெற்ற சென்னை அணியானது முதலில் பந்துவீசுவதாக அறிவித்தது. அதனை தொடர்ந்து முதலில் விளையாடிய பெங்களூரு அணியானது நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்களின் முடிவில் 5 விக்கெட்டுகளை இழந்து 213 ரன்களை குவித்தது.
பின்னர் 214 ரன்கள் அடித்தால் வெற்றி என்ற இலக்குடன் விளையாடிய சென்னை அணி 20 ஓவர்களின் முடிவில் 5 விக்கெட்டுகளை இழந்து 211 ரன்கள் மட்டுமே குவிந்ததால் 2 ரன்கள் வித்தியாசத்தில் பெங்களூரு அணி பெற்றது.
இந்த போட்டியின் போது ஒரு கட்டத்தில் சென்னை அணி பந்துவீச்சில் கடைசி இரண்டு ஓவர்களில் 50 ரன்களை வாரி வழங்கியதும், பேட்டிங்கின் போது கடைசி இரண்டு ஓவர்களில் அதிரடி காட்டாததும் அந்த அணியின் தோல்விக்கு மிக முக்கியமான காரணமாக மாறியது. இந்நிலையில் இந்த போட்டியின் போது சென்னை அணி சார்பாக விளையாடிய வேகப்பந்து வீச்சாளர் கலீல் அகமது சிஎஸ்கே வீரராக ஒரு மோசமான சாதனையில் முதலிடத்திற்கு சென்றுள்ளார்.
அதாவது நேற்றைய போட்டியில் 3 ஓவர்களை வீசிய அவர் 65 ரன்கள் விட்டுக் கொடுத்து மோசமான பந்துவீச்சை வெளிப்படுத்தினார். அதிலும் குறிப்பாக அவர் சிஎஸ்கே அணிக்காக நிகழ்த்திய மோசமான சாதனை யாதனில் : ஐபிஎல் போட்டிகளில் சென்னை அணி சார்பாக ஒரு ஓவரில் அதிக ரன்களை விட்டுக் கொடுத்த வீரர்களாக லுங்கி இங்கிடி மற்றும் சாம் கரன் ஆகியோர் இருந்தனர்.
இதையும் படிங்க : அதைப்பாத்து ஆச்சர்யப் பட்டேன்.. எல்லாத் தகுதியுடைய ஆயுஷ் சிஎஸ்கே வருங்காலமா கிடைச்சுருக்காரு.. பிளேமிங் மகிழ்ச்சி
அவர்கள் இருவரும் ஒரு ஓவரில் 30 ரன்கள் விட்டுக் கொடுத்திருந்தனர். இந்நிலையில் நேற்றைய 19 ஓவரை வீசிய கலீல் அகமது அந்த ஓவரில் 33 ரன்கள் விட்டுக் கொடுத்து ஒரே ஓவரில் அதிக ரன்களை விட்டுக் கொடுத்த சிஎஸ்கே வீரர் என்ற மோசமான சாதனையை நிகழ்த்தினார்.



