ஐபிஎல் 2025 கிரிக்கெட் தொடரில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி மே மூன்றாம் தேதி நடைபெற்ற 52வது போட்டியில் பெங்களூருவிடம் 2 ரன்கள் வித்தியாசத்தில் தோற்றது. அதையும் சேர்த்து 9வது தோல்வியை சந்தித்த சென்னை புள்ளிப்பட்டியலில் கடைசி இடத்தை வலுவாக பிடித்துள்ளது. அந்தப் போட்டியில் 214 ரன்களை துரத்திய சென்னை வெற்றிக்கு இளம் வீரர் ஆயுஸ் மாத்ரே அதிரடியாக விளையாடி 94 ரன்கள் குவித்து போராடினார்.
அவருடன் ரவீந்திர ஜடேஜா 77* ரன்கள் அடித்தும் மற்ற வீரர்கள் அசத்தத் தவறியதால் சென்னை பரிதாபமாக தோற்றது. இந்நிலையில் ஆயுஷ் மாத்ரே டி20 கிரிக்கெட்டில் மிகச்சிறப்பாக செயல்படுத்துவதற்கு தேவையான அனைத்து தகுதிகளையும் கொண்டுள்ளதாக சிஎஸ்கே பயிற்சியாளர் ஸ்டீபன் பிளமிங் பாராட்டியுள்ளார். மேலும் சிஎஸ்கே அணிக்காக வருங்காலத்தில் அசத்தக்கூடிய வீரராக அவர் கிடைத்துள்ளதாகவும் பிளமிங் தெரிவித்துள்ளார்.
பொருத்தமான ஆயுஷ்:
இது பற்றி அவர் பேசியது பின்வருமாறு. “அவரிடம் திறமை இருக்கிறது. ஒருங்கிணைந்த கண்களைக் கொண்டுள்ள அவர் அழகான ஸ்விங், ஆக்ரோசத்தை கொண்டுள்ளார். நவீன கிரிக்கெட்டில் நாங்கள் விரும்பக்கூடிய டி20 வீரருக்கு தேவையான அனைத்து தகுதிகளும் அவரிடம் இருக்கிறது. என்னைக் கொடுத்த வரை பயிற்சியைப் போலவே மிகப்பெரிய அழுத்தமான போட்டியிலும் அவர் தனது திறன்களை செயல்படுத்தியது மிகவும் கவரும் வகையில் இருந்தது”
“நிறைய ஷாட்டுகளை வைத்திருப்பது ஒரு விஷயம். ஆனால் அதை உலகின் மிகச்சிறந்த வீரர்கள் இருக்கும் அழுத்தமான பெரிய போட்டியில் வெற்றிகரமாக செயல்படுத்தும் திறன் அபாரமானது. அதைத்தான் நான் அவரிடம் ரசித்தேன். அவர் விளையாடும் விதத்தை விவரிப்பது கடினமானது. ஆனால் அவர் செய்யும் விஷயங்களில் தரம் இருக்கிறது”
பிளமிங் மகிழ்ச்சி:
“இது ஆரம்பக்கட்ட நாட்கள் என்றாலும் பயிற்சியில் பார்த்தது முதல் தற்போது வரை அவருடைய திறன்களை நாங்கள் விரும்புகிறோம். எங்கள் அணியுடன் அவர் முதல் நாளிலிருந்தே கச்சிதமாக இணைந்துள்ளார். எங்கள் அணியும் அவருடன் நன்றாக இணைந்துள்ளது. அவருடன் உறவு நீண்ட காலம் நீடிக்கும் என்று நம்புகிறேன்” எனக் கூறினார்.
இதையும் படிங்க: அம்பின்னு நினைக்காதீங்க.. கிங் கோலி அந்நியன் என்பதற்கு இதான் சாம்பிள்.. விமர்சகர்களுக்கு பதான் பதிலடி
அப்போட்டியில் தரமான புவனேஸ்வர் குமாருக்கு எதிராக 4, 4, 4, 6, 4, 4 என ஒரே ஓவரில் 26 ரன்கள் அடித்தது ஆயுஷ் திறமைக்கு ஒரு சான்றாக பார்க்கப்படுகிறது. அத்துடன் ஐபிஎல் தொடரில் சிஎஸ்கே அணிக்காக இளம் வயதில் சதத்தை அடித்த வீரர் என்ற சாதனையையும் ஆயுஸ் படைத்துள்ளார். இதற்கு முன் சுரேஷ் ரெய்னா 21 வயதில் அந்த சாதனையைப் படைத்திருந்தது குறிப்பிடத்தக்கது.



