- Advertisement -
இந்திய கிரிக்கெட்

ஆரம்பத்தில் சொதப்பினாலும் இறுதியில் நல்லபெயரை எடுத்து அணியை காப்பாற்றிய வீரர் – விவரம் இதோ

இந்திய அணி பங்களாதேஷ் அணியுடனான டி20 தொடரில் 2 – 1 என்ற கணக்கில் தொடரை கைப்பற்றியது. இதற்கு அடுத்ததாக வங்கதேச அணிக்கு எதிரான டெஸ்ட் தொடரில் பங்கேற்று விளையாட இந்திய அணி தயாராகி வருகிறது.

இந்நிலையில் இந்திய அணியின் இளம் வேகப்பந்து வீச்சாளரான கலீல் அகமது முதல் 2 போட்டிகளிலும் ரன்களை வாரி இறைத்து ரசிகர்களின் கேள்விக்கு உள்ளானார். மேலும் அவரை நீக்கிவிட்டு மற்றொரு பந்துவீச்சாளரை தேர்வு செய்யுங்கள் என்றும் இடதுகை பந்துவீச்சாளர் என்பதாலேயே அவருக்கு தொடர்ந்து வாய்ப்பளிக்காமல் அவருக்கு பதிலாக சிறப்பாக பந்து வீசும் வலதுகை பந்து வீச்சாளர்களுக்கு வாய்ப்பு வழங்கலாம் என்றும் ரசிகர்கள் ஏகத்துக்கும் கருத்துகளை பகிர்ந்து வந்தனர்.

- Advertisement -

இந்நிலையில் தொடரை முடிவு செய்யும் இறுதி போட்டியான நாக்பூர் போட்டியில் கலீல் அகமது அது ஓரளவு சிறப்பாகவே செயல்பட்டு 4 ஓவர்களில் 27 ரன்கள் மட்டுமே விட்டுக்கொடுத்தார். எனவே திடீரென ரசிகர்களுக்கு அவர் மீது முதல் இரண்டு போட்டியிகளையும் விட சிறப்பாக செயல்பட்டார் என்றும் கடைசி போட்டியில் தனது பொறுப்பை உணர்ந்து ஓரளவு சிறப்பாக பந்து வீசினார் என்றும் பகிர்ந்து வருகின்றனர்.

இந்திய அணி தேர்வுக்குழுவினர் இளம் வீரர்களை ஆதரித்து அவர்களுக்கான வாய்ப்பை தொடர்ந்து வழங்கி வருகிறார்கள். இதனை பயன்படுத்திக் கொண்டு கலீல் அகமது தனது சிறப்பான பந்துவீச்சை வெளிப்படுத்தினால் அவருக்கு நல்லது என்றும் மேலும் அடுத்தாண்டு நடைபெற உள்ள டி20 உலகக் கோப்பைக்கு முன்னர் அவரது திறமையை அவர் காட்டினால் மட்டுமே அவருக்கு இந்திய அணியில் இடம் கிடைக்கும் என்பதும் உறுதி.

- Advertisement -
Published by