நீங்க யாராவேனா இருங்க. ஆனா ஒழுங்கா கிரிக்கெட் விளையாடுங்க – சி.எஸ்.கே வீரரை கிழித்து தொங்கவிட்ட பீட்டர்சன்

Pieterson-1
- Advertisement -

இந்த ஐ.பி.எல் சீசனில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி தொடர்ந்து படுதோல்வியை சந்தித்து வருகிறது. எப்போதும் பெங்களூரு அணிக்கு எதிராக மிக எளிதாக வெற்றி பெற்றுவிடும் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி சில தினங்களுக்கு முன்னர் நடைபெற்ற போட்டியில் 37 ரன்கள் வித்தியாசத்தில் மோசமாக தோற்றுவிட்டது. இந்த போட்டியில் டாஸ் வென்ற பெங்களூரு அணி முதலில் பேட்டிங் செய்து 20 ஓவர்களின் முடிவில் 169 ரன்கள் எடுத்தது அதிகபட்சமாக அந்த அணியின் கேப்டன் விராட் கோலி 90 ரன்கள் விளாசினார்.

Kohli 1

இதனையடுத்து 170 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் களமிறங்கிய சென்னை அணி பெரிதாக ரன் சேர்க்கவில்லை அந்த அணியிடம் உத்வேகமும் இல்லை. வெற்றிக்கான வேட்கையும் இல்லை. அம்பத்தி ராயுடு 40 பந்துகளில் 42 ரன்களும் ஜெகதீசன் 28 பந்துகளில் 33 ரன்களும் எடுத்தனர் இறுதியாக 20 ஓவர்களின் முடிவில் 8 விக்கெட் இழப்பிற்கு 133 ரன்கள் மட்டுமே எடுத்து தோல்வி அடைந்தனர்.

- Advertisement -

இந்த தோல்வி குறித்து பேசி உள்ள முன்னாள் இங்கிலாந்து வீரர் கெவின் பீட்டர்சன் ராயுடுவை கடுமையாக விமர்சித்துள்ளார். குறிப்பாக அம்பத்தி ராயுடு ஆடுகளத்தில் ஓடாமல் பாகுபாட்டுடன் நடந்து கொண்டார் இது குறித்து பேசிய கெவின் பீட்டர்ர்சன் கூறுகையில் …

out

அம்பத்தி ராயுடு இது போன்று எல்லாம் செய்யக்கூடாது. ரன்களை ஓட மறுப்பது முற்றிலும் தவறானது. உலகின் தலைசிறந்த வீரர்கள் ஆடுகளத்தில் எப்படி இருக்கிறார்கள் என்பது குறித்து அவர் கற்றுக் கொள்ள வேண்டும். ஒவ்வொருவரும் ஒவ்வொரு ரன்னும் ஐபிஎல் தொடரில் எவ்வளவு முக்கியம் என்பது அறிந்து வேகமாக ஓடுவார்கள்.

Rayudu 3

நீங்கள் யாராக இருந்தாலும் பரவாயில்லை இதனை நீங்கள் கற்றுக்கொண்டே தீரவேண்டும் என்று தெரிவித்துள்ளார். மேலும் அப்படி உங்களுக்கு தெரியவில்லை என்றால் கோலி, டிவில்லியர்ஸ், வார்னர், ஸ்மித், பேர்ஸ்டோ ஆகியோரை பார்த்து ரன்களை எவ்வாறு ஓடுவது என்று ராயுடு கற்றுக்கொள்ளவேண்டும் என்றும் பீட்டர்சன் கடுமையாக பேசியுள்ளார்.

Advertisement