- Advertisement -
இந்திய கிரிக்கெட்

ரெடியா இருக்கேன்.. இந்திய அணியின் பேட்டிங் பயிற்சியாளராக சம்மதம் சொன்ன பீட்டர்சன்.. பிசிசிஐ ஏற்குமா

இந்திய கிரிக்கெட் அணி வரலாற்றிலேயே முதல் முறையாக டெஸ்ட் சாம்பியன்ஷிப் பைனலுக்கு தகுதி பெறாமல் வெளியேறியது. அதற்கு சமீபத்தில் நியூசிலாந்துக்கு எதிராக சொந்த மண்ணில் முதல் முறையாக ஒரு டெஸ்ட் தொடரில் இந்தியா ஒயிட் வாஸ் தோல்வியை சந்தித்தது வித்திட்டது. அதே போல சமீபத்தில் ஆஸ்திரேலிய மண்ணில் நடைபெற்ற டெஸ்ட் தொடரில் தோற்ற இந்தியா 10 வருடங்கள் கழித்து பார்டர் கவாஸ்கர் கோப்பையை கோட்டை விட்டது.

அந்த அடுத்தடுத்த தோல்விகளுக்கு பேட்டிங் துறை சுமாராக செயல்பட்டது முக்கிய காரணமாக அமைந்தது. குறிப்பாக நியூசிலாந்துக்கு எதிராக சொந்த மண்ணில் 46க்கு ஆல் அவுட்டான இந்தியா அத்தொடர் முழுவதுமே சுமாராக பேட்டிங் செய்தது. அதே போல ஆஸ்திரேலிய மண்ணிலும் முதல் போட்டியை தவிர்த்து மற்ற போட்டிகளில் இந்தியா சுமாரான பேட்டிங்கை வெளிப்படுத்தியது.

- Advertisement -

பேட்டிங் பயிற்சியாளர்:

அவை அனைத்தையும் விட நம்பிக்கை நட்சத்திரம் விராட் கோலி பெரிய அனுபவத்தைக் கொண்டிருந்தும் தொடர்ந்து அவுட் சைட் ஆஃப் ஸ்டம்ப் பந்துகளில் தம்முடைய விக்கெட்டை பரிசாக கொடுத்தார். அதை தீர்க்க முடியாத அளவுக்கு இந்திய அணியின் பேட்டிங் பயிற்சியாளர் என்ன செய்கிறார் என்று சுனில் கவாஸ்கர் விமர்சித்தார்.

இந்நிலையில் பிசிசிஐ இந்திய அணிக்காக புதிய பேட்டிங் பயிற்சியாளரை நியமிக்க விரும்புவதாக க்ரிக்பஸ் இணையத்தில் செய்தி வெளியாகியுள்ளது. குறிப்பாக இந்திய அணியில் தலைமை பயிற்சியாளர் கௌதம் கம்பீர், பவுலிங் பயிற்சியாளர் மோர்னே மோர்கெல், துணைப் பயிற்சியாளர்கள் அபிஷேக் நாயர், ரியான் டஸ்சேட் ஆகியோர் உள்ளனர். ஆனால் பேட்டிங் பயிற்சியாளர்கள் யாருமே இல்லை.

- Advertisement -

தயாராக பீட்டர்சன்:

அத்துடன் ஏற்கனவே உள்ள அந்த நால்வரின் மேற்பார்வையில் இந்திய அணி பேட்டிங் துறையில் சிறப்பாக செயல்படவில்லை என்று பிசிசிஐ கருதுகிறது. எனவே இந்திய அணிக்காக விளையாடிய ஏதேனும் அனுபவமிக்க முன்னாள் பேட்ஸ்மேனை பேட்டிங் பயிற்சியாளராக நியமிக்க பிசிசிஐ விரும்புவதாக தெரிகிறது. இந்த செய்தியை ட்விட்டரில் பார்த்த முன்னாள் இங்கிலாந்து வீரர் கெவின் பீட்டர்சன் “அவைலபல்” என்று பதிலளித்துள்ளார்.

இதையும் படிங்க: டிராவிட், சாஸ்திரி மாதிரி இல்லாத கம்பீர்.. இதை செய்யலன்னா ரசிகர்கள் விமர்சிப்பாங்க.. கபில் தேவ்

அதாவது இந்திய அணிக்கு பேட்டிங் பயிற்சியாளராக தாம் தயாராக இருக்கிறேன் என்று அவர் கூறியுள்ளார். அதை பிசிசிஐ ஏற்குமா என்பதை பொறுத்திருந்து பார்க்க வேண்டும். குறிப்பாக ஜூன் மாதம் இங்கிலாந்து மண்ணில் நடைபெறும் டெஸ்ட் தொடருக்கு அவர் பேட்டிங் பயிற்சியாளராக வந்தால் இந்திய அ

- Advertisement -