டிராவிட், சாஸ்திரி மாதிரி இல்லாத கம்பீர்.. இதை செய்யலன்னா ரசிகர்கள் விமர்சிப்பாங்க.. கபில் தேவ்

- Advertisement -

இந்திய கிரிக்கெட் அணியின் தலைமை பயிற்சியாளராக கௌதம் கம்பீர் செயல்பட்டு வருகிறார். அவருடைய தலைமையில் இந்திய அணி டி20 கிரிக்கெட்டில் இலங்கை, வங்கதேசம், தென்னாப்பிரிக்காவுக்கு எதிராக வென்றது. ஆனால் ஒருநாள் கிரிக்கெட்டில் இலங்கைக்கு எதிராக 27 வருடங்கள் கழித்து இந்தியா படுதோல்வியை சந்தித்தது. அதை விட நியூஸிலாந்துக்கு எதிராக இந்தியா சொந்த மண்ணில் முதல் முறையாக வரலாறு காணாத ஒயிட் வாஸ் தோல்வியை பெற்றது.

அப்படியே ஆஸ்திரேலியாவில் நடைபெற்ற டெஸ்ட் தொடரிலும் இந்தியா தோல்வியை சந்தித்து 10 வருடங்கள் கழித்து பாரடர் – கவாஸ்கர் கோப்பையை கோட்டை விட்டது. அதன் காரணமாக டெஸ்ட் சாம்பியன்ஷிப் ஃபைனலுக்கு முதல் முறையாக தகுதி பெறாமல் இந்தியா வெளியேறியது. அதனால் இந்திய ரசிகர்கள் கௌதம் கம்பீரை கடுமையாக விமர்சித்து வருகிறார்கள்.

- Advertisement -

கேள்வி கேட்பாங்க:

இந்நிலையில் பயிற்சியாளர்கள் களத்திற்கு சென்று விளையாட முடியாது என்றாலும் களத்திற்கு வெளியே திட்டங்களை துல்லியமாக தீட்டுவது அவசியம் என ஜாம்பவான் கபில் தேவ் தெரிவித்துள்ளார். அதை செய்யவில்லை எனில் இந்திய ரசிகர்கள் கேள்விகளை எழுப்பத் தான் செய்வார்கள் என்றும் அவர் கூறியுள்ளார். மேலும் ரவி சாஸ்திரி, ராகுல் டிராவிட் போல கம்பீர் பொறுமையானவர் கிடையாது என்றும் அவர் விமர்சித்துள்ளார்.

எனவே இங்கிருந்தாவது கௌதம் கம்பீர் இந்திய அணியை வெற்றிப் பாதையில் நடக்க வைக்க வேண்டும் என்றும் அவர் கேட்டுக் கொண்டுள்ளார். இது பற்றி கபில் தேவ் அவர்கள் பேசியது பின்வருமாறு. “இந்தியாவில் எதிர்பார்ப்புகள் எப்போதும் அதிகமாக இருக்கும். பயிற்சியாளர்கள் களத்தில் இருக்க மாட்டார்கள். கேப்டன் மற்றும் அணி தான் களத்தில் விளையாடுவார்கள்”

- Advertisement -

கபில் தேவ் கருத்து:

“புதிய பயிற்சியாளர் அவர்களுக்கு தகுந்தார் போல் தன்னுடைய சொந்த வழியில் ஐடியாக்களை கொண்டு வந்து நாட்டை சிறந்த வழியில் நடத்த வேண்டும். இல்லையென்றால் மக்கள் தங்களுடைய கைகளை உயர்த்துவார்கள். கம்பீர் கொஞ்சம் சுபாவம் உள்ள நபர். அவர் ராகுல் டிராவிட் மற்றும் ரவி சாஸ்திரி ஆகியோரை விட வித்தியாசமானவர்”

இதையும் படிங்க: அஸ்வின் கொஞ்சம் அவசரப்படாம இதை செஞ்சுருக்கலாம்.. பாதியில் ஓய்வானது சோகமா இருக்கு.. கபில் தேவ் வருத்தம்

“ஒவ்வொரு பயிற்சியாளர்களும் தங்களுடைய சொந்த வழியில் சிந்திக்கக் கூடியவர்கள். எனவே கம்பீர் தனது வழியில் நல்லது செய்வார் என்று நம்புகிறேன்” எனக் கூறினார். அடுத்ததாக சாம்பியன்ஸ் டிராபி தொடரில் இந்தியா விளையாட உள்ளது. அந்த முக்கியமான தொடரில் கௌதம் கம்பீர் இந்திய அணியை வெற்றிப் பாதைக்கு திரும்ப வைக்க வேண்டிய கட்டாயத்தில் இருப்பது குறிப்பிடத்தக்கது.

Advertisement