- Advertisement -
உலக கிரிக்கெட்

பிஎஸ்எல்ல ஆடுன அப்றம் பாகிஸ்தானுக்கு என்ன தான் ஆச்சு? அந்த மேஜிக் எங்க போச்சு.. கெவின் பீட்டர்சன்

வங்கதேசத்துக்கு எதிராக நடைபெற்ற முதல் டெஸ்ட் போட்டியில் 10 விக்கெட் வித்தியாசத்தில் பாகிஸ்தான் கிரிக்கெட் அணி தோல்வியை சந்தித்தது. அதனால் டெஸ்ட் கிரிக்கெட்டில் முதல் முறையாக வங்கதேசத்துக்கு எதிராக பாகிஸ்தான் வரலாற்றுத் தோல்வியை சந்தித்தது. அத்துடன் வங்கதேசத்துக்கு எதிராக டிக்ளர் செய்த பின்பும் தோல்வியை சந்தித்த முதல் அணியாக பாகிஸ்தான் படுமோசமான உலக சாதனை படைத்தது.

1992 சாம்பியனான பாகிஸ்தான் சமீபத்திய வருடங்களாகவே இப்படி தடுமாற்றமாக விளையாடி வருகிறது. குறிப்பாக 2021 டி20 உலகக் கோப்பையில் இந்தியாவை 10 விக்கெட் வித்தியாசத்தில் பாகிஸ்தான் தோற்கடித்தது. அதைத் தவிர்த்து 2017 சாம்பியன்ஸ் ட்ராபிக்கு பின் பாகிஸ்தான் சொல்லிக் கொள்ளும் படியாக பெரிய வெற்றிகளை பெறவில்லை.

- Advertisement -

கெவின் பீட்டர்சன் ஏமாற்றம்:

சொல்லப்போனால் 2022 டி20 உலகக் கோப்பையில் ஜிம்பாப்வேவிடம் தோல்வியை சந்தித்த பாகிஸ்தான் 2023 உலகக் கோப்பையில் ஆப்கானிஸ்தானிடம் தோற்றது. அதே போல 2024 டி20 உலகக் கோப்பையில் அமெரிக்காவிடம் சூப்பர் ஓவரில் தோற்ற பாகிஸ்தான் தற்போது வங்கதேசத்திடம் சொந்த மண்ணில் மண்ணை கவ்வியுள்ளது. மேலும் 2021க்குப்பின் சொந்த மண்ணில் விளையாடிய 9 டெஸ்ட் போட்டிகளில் பாகிஸ்தான் ஒரு வெற்றியைக் கூட பதிவு செய்யவில்லை.

அந்த வகையில் இப்போதெல்லாம் கத்துக்குட்டி அணிகளிடம் கூட வெற்றி பெற முடியாத அளவுக்கு பாகிஸ்தான் தரத்தை இழந்து பாதாளத்திற்கு சரிந்துள்ளது. அதை விட பிறந்து வளர்ந்த சொந்த ஊரில் கூட வெற்றி பெற முடியாத பாகிஸ்தான் மிகப்பெரிய வீழ்ச்சியை சந்தித்துள்ளது அந்நாட்டு ரசிகர்களின் வேதனையில் ஆழ்த்தியுள்ளது. இந்நிலையில் பிஎஸ்எல் தொடரில் தாம் விளையாடிய காலங்களில் பாகிஸ்தான் சிறந்த கொண்டிருந்ததாக இங்கிலாந்தின் கெவின் பீட்டர்சன் தெரிவித்துள்ளார்.

- Advertisement -

என்ன ஆச்சு:

ஆனால் தற்போது பாகிஸ்தான் இவ்வளவு வீழ்ச்சியை சந்தித்துள்ளது தமக்கு ஆச்சரியத்தை கொடுப்பதாகவும் பீட்டர்சன் தெரிவித்துள்ளார். இது பற்றி தனது ட்விட்டரில் அவர் பதிவிட்டுள்ளது பின்வருமாறு. “பாகிஸ்தானில் கிரிக்கெட்டுக்கு என்னவாயிற்று? அங்கே நான் பிஎஸ்எல் தொடரில் விளையாடிய போது அத்தொடரின் தரம் அற்புதமாக இருந்தது”

இதையும் படிங்க: பயம் வந்துடுச்சு.. என்னால தோனி மாதிரி முடியாது.. சீக்கிரமே கிளம்பப் போறேன்.. ராகுல் வெளியிட்ட அறிவிப்பு

“வீரர்கள் நல்ல வேலை நெறிமுறைகளை பின்பற்றினார்கள். இளம் வீரர்களிடம் மேஜிக் போன்ற செயல்பாடுகள் வெளிப்பட்டது. தற்போது அங்கே என்ன நடக்கிறது?” என்று கூறினார். பாகிஸ்தானின் இந்த வீழ்ச்சிக்கு கேப்டன்ஷிப் பதவி காரணமாக பாபர் அசாம், சாகின் அப்ரிடி போன்றவர்களிடம் அணிக்குள் ஒற்றுமை இல்லாதது முக்கிய காரணமாக பார்க்கப்படுகிறது. அத்துடன் பாபர் அசாம் போன்ற வீரர்கள் தொப்பை வெளியே தெரியும் அளவுக்கு ஃபிட்னெஸ் கடை பிடிக்காததும் வீழ்ச்சிக்கு வித்திட்டுள்ளது.

- Advertisement -