- Advertisement -
உலக கிரிக்கெட்

அந்த 5 பேரை தவிர்த்து ஆஸி மட்டுமில்ல.. இந்தியாவையும் ஜெய்க்க முடியாது.. இங்கிலாந்தை விசாரிப்பது பற்றி பீட்டர்சன்

வரலாற்று சிறப்புமிக்க ஆஷஸ் கிரிக்கெட் தொடரின் 2025/26 கோப்பையை 4 – 1* (5) என்ற கணக்கில் ஆஸ்திரேலியா வென்றது. அதன் வாயிலாக இங்கிலாந்தை தங்களது சொந்த மண்ணில் தொடர்ந்து 15வது வருடமாக தோற்கடித்த ஆஸ்திரேலியா கோப்பையை வென்று சாதனை படைத்தது. மறுபுறம் பஸ்பால் அணுகுமுறையில் விளையாடி வெல்வோம் என்று சவால் விட்ட தலைகுனியும் தோல்வியை சந்தித்தது.

குறிப்பாக 4வது போட்டியில் வென்ற இங்கிலாந்து தொடர்ந்து 15 வருடங்கள் 16 தோல்விகளுக்கு பின் ஆஸ்திரேலிய மண்ணில் ஒரு வெற்றி பெற்றது. அதைத் தவிர்த்து ஆஸ்திரேலியாவில் மீண்டும் சுமாராக விளையாடிய இங்கிலாந்து மற்றுமொரு தோல்வியை சந்தித்தது. அதற்கு முன் 2024இல் இந்தியாவில் நடைபெற்ற டெஸ்ட் தொடரிலும் 4 – 1 (5) என்ற கணக்கில் இங்கிலாந்து தோல்வியை சந்தித்தது.

- Advertisement -

ஆஸி மட்டுமில்ல இந்தியாவையும்:

2025ஆம் ஆண்டு சுப்மன் கில் தலைமையிலான இளம் இந்திய அணிக்கு எதிராக சொந்த மண்ணில் 2 – 2 (5) என்ற கணக்கில் இங்கிலாந்து தொடரை சமன் மட்டுமே செய்தது. அது போக சொந்த மண்ணில் நடைபெற்ற 2023, 2025 உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப் போட்டிகளுக்கும் இங்கிலாந்து தகுதி பெறவில்லை. அந்த வகையில் பஸ்பால் அணுகு முறையில் இங்கிலாந்து பெரிதாக எந்த வெற்றிகளையும் பெறவில்லை.

எனவே பஸ்பால் அணுகுமுறையை உருவாக்கிய ப்ரெண்டன் மெக்கல்லம் பயிற்சியாளர் பதவியிலிருந்து நீக்கப்பட வேண்டும் என்று முன்னாள் இங்கிலாந்து கேப்டன்கள் விமர்சிக்கத் துவங்கியுள்ளனர். இந்நிலையில் ஸ்டோக்ஸ், ரூட், ஆர்ச்சர், ப்ரூக், பெத்தல் ஆகியோரை தவிர்த்து இங்கிலாந்து அணியில் தரமான வீரர்கள் இல்லை என்று கெவின் பீட்டர்சன் தெரிவித்துள்ளார். இப்படிப்பட்ட அணியை வைத்துக்கொண்டு ஆஸ்திரேலியா மட்டுமின்றி இந்தியாவையும் நம்மால் தோற்கடிக்க முடியாது என்று அவர் தெரிவித்துள்ளார்.

- Advertisement -

உதவிக்கு தயார்:

எனவே அணியில் எங்கே பிரச்சனை இருக்கிறது என்பதைப் பற்றி விரைவில் இங்கிலாந்து வாரியம் துவக்கும் விசாரணைக்கு தாமும் உதவத் தயாராக இருப்பதாக பீட்டர்சன் தெரிவித்துள்ளார். இது பற்றி ட்விட்டரில் அவர் பதிவிட்டுள்ளது பின்வருமாறு. “இங்கிலாந்து வாரியம் என் முன்னெடுக்கவுள்ள விசாரணை முழுக்க இலவசமாக உதவுவதற்கு நான் தயாராக இருக்கிறேன்”

இதையும் படிங்க: இந்தியாவுடன் மோதாதீங்க.. வங்கதேசம் தகுதி அறிந்து இதை செய்யலனா 10 வருசம் பின்னாடி போய்ரும்.. தமீம் எச்சரிக்கை

“பென் ஸ்டோக்ஸ், ஜோ ரூட், ஜோப்ரா ஆர்ச்சர், ஜேக்கப் பெத்தல், மூளையுடன் ஹாரி ப்ரூக் ஆகியோரை தவிர்த்து இங்கிலாந்து அணி ஆஸ்திரேலியா அல்லது இந்தியாவுடன் போட்டியிட போதுமானதாக இல்லை. அது நிறைய முக்கிய வீரர்கள் இல்லாத ஆஸ்திரேலியாவுக்கு எதிரான இந்தத் தொடரில் நிரூபணமாகியுள்ளது. தொடருக்கு முந்தைய பேச்சுக்கள், கட்டுப்பாடான பேச்சுக்கள், தற்போது விசாரணைகள் இவை அனைத்தும் வெறும் திசை திருப்பல்களாக இருக்கிறது” என்று கூறினார்.

- Advertisement -