Ashes 2023 : ஜோ ரூட் இப்டி வித்யாசமாக பேட்டிங் செய்வதற்கு இந்தியாவுக்கு போய்ட்டு வந்ததே காரணம் – பீட்டர்சன் பாராட்டு

Kevin Pieterson
- Advertisement -

ஆஸ்திரேலியாவுக்கு எதிராக சொந்த மண்ணில் நடைபெற்று வரும் ஆஷஸ் 2023 கிரிக்கெட் தொடரின் முதல் போட்டியில் டாஸ் வென்று முதலில் பேட்டிங் செய்த இங்கிலாந்து அதிரடியாக செயல்பட்டு 393/8 ரன்கள் குவித்து முதல் நாளிலேயே டிக்ளர் செய்தது. அதிகபட்சமாக நம்பிக்கை நட்சத்திரம் ஜோ ரூட் சதமடித்து 118* ரன்களும் ஜானி பேர்ஸ்டோ 78 ரன்களும் எடுத்த நிலையில் ஆஸ்திரேலிய சார்பில் அதிகபட்சமாக நேதன் லயன் 4 விக்கெட்டுகளை சாய்த்தார். அதைத் தொடர்ந்து களமிறங்கிய ஆஸ்திரேலியா முடிந்தளவுக்கு போராடியும் முதல் இன்னிங்ஸில் 386 ரன்கள் மட்டுமே எடுத்தது.

- Advertisement -

அந்த அணிக்கு அதிகபட்சமாக தொடக்க வீரர் உஸ்மான் கவாஜா சதமடித்து 141 ரன்களும் அலெக்ஸ் கேரி 66 ரன்களும் எடுக்க இங்கிலாந்து சார்பில் அதிகபட்சமாக ஓலி ராபின்சன் மற்றும் ஸ்டூவர்ட் பிராட் ஆகியோர் தலா 3 விக்கெட்டுகளை சாய்த்தனர். அதைத் தொடர்ந்து 7 ரன்கள் முன்னிலையுடன் களமிறங்கிய இங்கிலாந்து 2வது இன்னிங்ஸில் நிதானத்தை காட்டாமல் அதே அதிரடியான அணுகுமுறையுடன் செயல்பட்டு 273 ரன்களுக்கு ஆல் அவுட்டானது. அதிகபட்சமாக மீண்டும் நம்பிக்கை நட்சத்திரம் ஜோ ரூட் மற்றும் ஹாரி ப்ரூக் ஆகியோர் தலா 46 ரன்கள் எடுத்த நிலையில் ஆஸ்திரேலியா அதிகபட்சமாக கேப்டன் கமின்ஸ் மற்றும் நேதன் லயன் ஆகியோர் தலா 4 விக்கெட்டுகள் எடுத்தனர்.

இந்தியா தான் காரணம்:
அதை தொடர்ந்து களமிறங்கிய ஆஸ்திரேலியாவுக்கு வார்னர் 36, லபுஸ்ஷேன் 13, ஸ்மித் 6 என முக்கிய வீரர்கள் குறைந்த ரன்களில் அவுட்டாகிய ஏமாற்றத்தை கொடுத்த நிலையில் கவாஜா 34* ரன்களை எடுத்து சவாலை கொடுப்பதால் 4வது நாள் முடிவில் 107/3 ரன்கள் எடுத்துள்ளது. அந்த அணியின் வெற்றிக்கு கடைசி நாளில் 174 ரன்கள் தேவைப்படும் நிலையில் இங்கிலாந்துக்கு 174 ரன்கள் தேவைப்படுகிறது.

முன்னதாக இந்த போட்டியில் முதல் இன்னிங்ஸில் சிறப்பான சதமடித்த ஜோ ரூட் தன்னை நவீன கிரிக்கெட்டின் நாயகன் என்று மீண்டும் நிரூபித்த நிலையில் 2வது இன்னிங்ஸில் 4வது நாளின் முதல் ஓவரிலேயே பட் கமின்ஸ்க்கு எதிராக ரிவர்ஸ் ஸ்கூப் அடிக்க முயற்சித்தது அனைவருக்கும் ஆச்சரியமாக அமைந்தது. குறிப்பாக 0 ரன்களில் இருந்தும் 3 ஃபீல்டர்கள் வரிசையாக கேட்ச் பிடிப்பதற்கு நின்றும் அசராத அவர் அடுத்த சில பந்துகளில் விக்கெட் கீப்பர் தலைக்கு மேலே சிக்சரை பறக்க விட்டு அடுத்த சில ஓவர்களில் தேர்ட் மேன் திசையில் பவுண்டரியையும் அடித்தது அனைவருக்கும் ஆச்சரியமாக அமைந்தது.

- Advertisement -

சொல்லப்போனால் க்ளாஸ் நிறைந்த வீரராக கருதப்படும் அவர் இப்படியும் அடிப்பாரா என்று வியக்கும் அளவுக்கு சமீப காலங்களாகவே இது போன்ற வித்தியாசமான பேட்டிங் ஸ்டைலை கடைப்பிடித்து வருகிறார். இருப்பினும் இது போன்ற ஷாட்களை அதிகமாக அடிப்பதை வழக்கமாக வைத்திருந்த ப்ரெண்டன் மெக்கல்லம் இங்கிலாந்தின் பயிற்சியாளராக வந்த பின் அவருடைய பேட்டிங்கில் இப்படி ஒரு மாற்றம் ஏற்பட்டுள்ளது. அந்த வகையில் அவருடைய இந்த பேட்டிங்கிற்கு மெக்கல்லம் முக்கிய காரணமாக பார்க்கப்படுகிறார்.

Joe-Root

இந்நிலையில் ஐபிஎல் தொடரில் ராஜஸ்தான் அணிக்காக விளையாடியதே ஜோ ரூட் பேட்டிங்கில் இந்த மாற்றம் நிகழ்வதற்கான காரணம் என்று முன்னாள் இங்கிலாந்து வீரர் கெவின் பீட்டர்சன் கூறியுள்ளார். குறிப்பாக பெரும்பாலான போட்டிகளில் விளையாடவில்லை என்றாலும் அந்த டி20 தொடரில் அதிரடியாக விளையாடும் அணுகுமுறையை ரூட் நன்றாக கற்று வந்துள்ளதாக தெரிவிக்கும் அவர் இது பற்றி ஸ்கை ஸ்போர்ட்ஸ் தொலைக்காட்சியில் பேசியது பின்வருமாறு.

- Advertisement -

“ரூட் இந்த போட்டியை தனதாக்கி வெற்றிகரமாக நடத்தி தரமாக விளையாடுகிறார். குறிப்பாக தான் நினைத்தது போல் ஃபீல்டிங்கை ஆஸ்திரேலியா வலுக்கட்டாயமாக மாற்ற வேண்டிய சூழ்நிலையை ஏற்படுத்திய அவர் இந்த போட்டியில் மாஸ்டர் கிளாஸ் இன்னிங்ஸ் விளையாடினார். எனவே நல்ல மூளையை கொண்டு உழைக்கும் அவருக்கு வானம் தான் எல்லையாகும். ஏற்கனவே 11000 ரன்கள் அடித்துள்ள அவர் இந்த போட்டியில் சதமடித்து விட்டு அடுத்த நாள் கூலாக வந்து இதர வீரர்களுடன் கால்பந்து விளையாடினார்”

Pietersen

இதையும் படிங்க:TNPL 2023 : பலப்பரீட்சை நடத்திய நடப்பு சாம்பியன்கள் – சாய் சுதர்சன் ஹாட்ரிக் அதிரடியில் சேப்பாக் வீழ்ந்தது எப்படி

“ஒவ்வொரு தருணத்திலும் அவர் முன்னேற விரும்புகிறார். எனவே அவரைப் போன்ற மாஸ்டர் பேட்ஸ்மேன் நீண்ட காலம் விளையாடுவதையே நான் விரும்புகிறேன். மேலும் ஐபிஎல் தொடரில் ராஜஸ்தான் அணியில் 2 மாதங்கள் இருந்த போது தான் அவரது பேட்டிங்கில் இது போன்ற வித்தியாசமான ஷாட்களை யுக்திகள் வேரூன்றியிருக்கும்” என்று கூறினார்.

Advertisement