பாவங்க ஜடேஜாவை விட்ருங்க.. 2024 டி20 உலகக் கோப்பைக்கு இதுக்கும் சம்மந்தம் இல்ல.. பீட்டர்சன் பேட்டி

Kevin Pieterson 2
- Advertisement -

ரசிகர்களை மகிழ்வித்து வரும் ஐபிஎல் 2024 டி20 கிரிக்கெட் தொடரில் நடப்பு சாம்பியன் சென்னை சூப்பர் கிங்ஸ் முதல் 8 போட்டிகளில் 4 வெற்றி 4 தோல்விகளை பதிவு செய்துள்ளது. குறிப்பாக லக்னோவுக்கு எதிராக நடைபெற்ற போட்டியில் பேட்டிங்கில் அசத்திய சென்னை 211 ரன்களை இலக்காக நிர்ணயித்தது. அதை சேசிங் செய்த லக்னோவுக்கு மார்கஸ் ஸ்டோய்னிஸ் அபாரமான சதமடித்து 124* ரன்கள் குவித்து வெற்றி பெற வைத்தார்.

அதனால் சேப்பாக்கத்தில் அதிகபட்ச இலக்கை வெற்றிகரமாக சேசிங் செய்த அணியாக லக்னோ சாதனை படைத்தது. அத்துடன் ஐபிஎல் வரலாற்றில் சேசிங் செய்த போட்டியிலும் சென்னை அணிக்கு எதிராகவும் அதிகபட்ச ஸ்கோர் பதிவு செய்த வீரராக மார்க்கஸ் ஸ்டோய்னிஸ் இரட்டை சாதனைகளை படைத்து லக்னோவை வெற்றி பெற வைத்தார்.

- Advertisement -

பீட்டர்சன் ஆதரவு:
இருப்பினும் அந்த போட்டியில் நட்சத்திர வீரர் ரவீந்திர ஜடேஜா 4வது இடத்தில் பேட்டிங் செய்து 19 பந்துகளை எதிர்கொண்டு வெறும் 16 ரன்கள் மட்டுமே எடுத்தார். அதே போல பந்து வீச்சில் 2 ஓவர்கள் வீசிய அவர் விக்கெட் எடுக்காமல் 16 ரன்கள் கொடுத்து சுமாராகவே செயல்பட்டார். அப்படி சொதப்பலாக செயல்பட்டதால் விரைவில் தேர்வு செய்யப்பட உள்ள 2024 டி20 உலகக் கோப்பை இந்திய அணியில் ஜடேஜாவுக்கு இடம் கிடைக்குமா என்பது சந்தேகமாக பார்க்கப்படுகிறது.

ஏனெனில் அவருக்கு போட்டியாக அக்சர் படேல், குல்தீப் யாதவ் ஆகியோர் டெல்லி அணியில் சிறப்பாக விளையாடி நல்ல ஃபார்மில் இருக்கின்றனர். இந்நிலையில் லக்னோ போட்டியில் தோல்வியை சந்தித்ததற்கும் ஜடேஜாவுக்கும் எந்த சம்பந்தமும் இல்லை என்று முன்னாள் இங்கிலாந்து வீரர் கெவின் பீட்டர்சன் தெரிவித்துள்ளார். எனவே இந்திய அணியில் ஜடேஜா கண்டிப்பாக தேர்வு செய்யப்பட வேண்டும் என்றும் பீட்டர்சன் கூறியுள்ளார்.

- Advertisement -

இது பற்றி ஸ்டார் ஸ்போர்ட்ஸ் தொலைக்காட்சியில் அவர் பேசியது பின்வருமாறு. “அந்தப் போட்டியில் லக்னோ வென்றதற்கான பாராட்டுகளை நீங்கள் மார்க்ஸ் ஸ்டோய்னிஸ்க்கு கொடுக்க வேண்டும். சென்னை அனைத்தையும் சரியாக செய்தது. ஆனால் அப்போட்டியில் சென்னை அணி மார்க்கஸ் ஸ்டோய்னிஸால் தோற்கடிக்கப்பட்டனர். அவர் ஐபிஎல் தொடரில் தனி ஒருவனாக மகத்தான சதத்தை அடித்து வெற்றி பெற வைத்தார்”

இதையும் படிங்க: பாண்டியாவுக்கு இடமில்லை.. கீப்பராக டிகே.. தனது 2024 டி20 உ.கோ இந்திய அணியை வெளியிட்ட ராயுடு

“எனவே தோல்விக்கான காரணத்தை நீங்கள் மற்றவர்கள் மீது காட்டுவதை மறந்து விட வேண்டும். குறிப்பாக நீங்கள் ரவீந்திர ஜடேஜா மீது கை காட்டக்கூடாது. அவர் ஒரு நட்சத்திரம். அவர் இந்தியாவுக்காக தேர்வு செய்யப்பட வேண்டிய ஒருவர். அதாவது அவர் இந்தியாவுக்காகவும் ஐபிஎல் தொடரிலும் சிறப்பாக விளையாடியுள்ளார். எனவே அவரை தனியாக விடுங்கள். அப்போட்டியில் ஸ்டோய்னிஸ் சென்னையை தோற்கடித்தார்” என்று கூறினார்.

Advertisement