பென் ஸ்டோக்ஸ் சொன்னதை தான் நானும் சொன்ன. என்னை தடை பண்ணிட்டாங்க – கெவின் பீட்டர்சன் பதிவு

Pietersen-and-Stokes
- Advertisement -

இங்கிலாந்து அணியின் டெஸ்ட் கேப்டனும், முன்னணி ஆல் ரவுண்டருமான பென் ஸ்டோக்ஸ் நேற்று சர்வதேச ஒருநாள் போட்டிகளில் இருந்து ஓய்வு பெறுவதாக அறிவித்தார். அதோடு தென்னாப்பிரிக்க அணிக்கு எதிராக நடைபெற்ற முடிந்த முதல் ஒருநாள் போட்டியோடு அவர் ஒருநாள் கிரிக்கெட்டில் இருந்து தற்போது வெளியேறியுள்ளார். 2019 ஆம் ஆண்டு இங்கிலாந்தில் நடைபெற்ற 50 ஓவர் உலகக் கோப்பை இறுதி போட்டியை வெல்ல முக்கிய நபராக திகழ்ந்த பென் ஸ்டோக்ஸ் தனி ஒரு ஆளாக இங்கிலாந்து அணிக்கு உலக கோப்பையை பெற்று தந்தார்.

அப்படிப்பட்ட ஒரு மாபெரும் வீரர் நேற்று தனது 31 வது வயதிலேயே ஒருநாள் கிரிக்கெட்டில் இருந்து ஓய்வை அறிவித்தது ரசிகர்கள் மத்தியில் பெரிய அதிர்ச்சியை ஏற்படுத்தியது. ஆனால் தனது ஓய்வு முடிவு குறித்து பேசிய பென் ஸ்டோக்ஸ் ஒருநாள் போட்டிகளில் மட்டும்தான் நான் ஓய்வு பெற முடிவு செய்துள்ளேன். இது ஒரு கடினமான முடிவாகும். ஏனெனில் ஒரு நாள் போட்டிகளில் என்னுடைய நூறு சதவீத பங்களிப்பை என்னால் அணிக்கு வழங்க முடியவில்லை.

- Advertisement -

எனவே என்னுடைய இடத்தில் இன்னும் ஒரு தகுதியான நபர் விளையாட ஆசைப்படுகிறேன். ஆனாலும் இந்த ஓய்வுக்கு பிறகு டெஸ்ட் கிரிக்கெட் மற்றும் டி20 கிரிக்கெட்டில் எனது முழு பங்களிப்பையும் கொடுத்து விளையாட முடியும் என்று தெரிவித்துள்ளதால் டெஸ்ட் மற்றும் டி20 போட்டிகளில் தொடர்ச்சியாக அவர் விளையாட இருக்கிறார் என்பது உறுதியாகியுள்ளது. இந்நிலையில் ஒருநாள் போட்டிகளில் மட்டும் தற்போது ஓய்வு அறிவித்துள்ள பென் ஸ்டோக்ஸ்-க்கு எச்சரிக்கை விடும் விதமாக இங்கிலாந்து அணியின் முன்னாள் கிரிக்கெட் வீரரான கெவின் பீட்டர்சன் ஒரு ட்வீட் செய்துள்ளது தற்போது இணையத்தில் படு வைரலாகியுள்ளது.

ஏனெனில் பீட்டர்சன் பகிர்ந்த அந்த ட்விட்டர் பதிவில் குறிப்பிடப்பட்டதாவது : தொடர்ச்சியான போட்டிகளின் அட்டவணை காரணத்தினால் ஏற்பட்ட நெருக்கடியால் நான் ஒருநாள் போட்டிகளில் இருந்து ஓய்வு பெற்றேன். ஆனால் இங்கிலாந்து கிரிக்கெட் வாரியம் என்னை டி20 போட்டிகளிலும் இருந்தும் விளையாட தடை செய்தது என்று பதிவிட்டுள்ளார்.

- Advertisement -

அவரது இந்தப் பதிவு பென் ஸ்டோக்ஸ்ஸின் ஓய்வு முடிவு காரணமாகவே பதியப்பட்டதாக தெரிகிறது. ஏனெனில் தற்போது கெவின் பீட்டர்சன் போலவே பென் ஸ்டோக்சும் ஒருநாள் போட்டிகளில் தொடர்ச்சியான போட்டி அட்டவணைகள் காரணமாக ஒருநாள் போட்டிகளில் இருந்து ஓய்வு அறிவித்துள்ளார்.

இதையும் படிங்க : டெஸ்ட் கிரிக்கெட் வரலாற்றில் அதிக போட்டிகளில் விளையாடிய டாப் 5 ரசிகர்களால் மறக்கமுடியாத ஐவர் ஜோடிகள்

எனவே நிச்சயம் ஸ்டோக்ஸ்-க்கும் இங்கிலாந்து வாரியம் சில நெருக்கடிகளை கொடுக்கும் என்பதை சொல்லாமல் சொல்லி எச்சரிப்பது போல கெவின் பீட்டர்சன் இந்த டிவீட்டினை செய்துள்ளது குறிப்பிடத்தக்கது.

Advertisement