
இந்தியா மற்றும் இங்கிலாந்து அணிகளுக்கு இடையேயான 5 போட்டிகள் கொண்ட ஆண்டர்சன் டெண்டுல்கர் டெஸ்ட் கிரிக்கெட் தொடரானது தற்போது இங்கிலாந்து நாட்டில் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இந்த தொடரின் முதல் இரண்டு ஆட்டங்கள் முடிவடைந்த வேளையில் இரு அணிகளும் தலா ஒரு வெற்றியை பெற்று இந்த தொடரின் தற்போதைய நிலையில் ஒன்றுக்கு ஒன்று (1-1) என்ற கணக்கில் சமநிலை வகிக்கிறது.
அதனை தொடர்ந்து இவ்விரு அணிகளுக்கும் இடையேயான மூன்றாவது டெஸ்ட் போட்டியானது லண்டன் லார்ட்ஸ் மைதானத்தில் இன்று ஜூலை 10-ஆம் தேதி நடைபெறயிருக்கிறது. இந்த போட்டியில் வெற்றி பெற்று தொடரில் முன்னிலை பெற இரண்டு அணிகளுமே முனைப்பு காட்டும் என்பதனால் இந்த மூன்றாவது போட்டி ரசிகர்கள் மத்தியில் மிகப்பெரிய எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது.
இந்நிலையில் இந்த மூன்றாவது போட்டிக்கு முன்னதாக பல்வேறு முன்னாள் வீரர்களும் தங்களது கருத்துக்களை வெளிப்படையாக அறிவித்து வரும் வேளையில் இங்கிலாந்து அணியின் முன்னாள் வீரரான கெவின் பீட்டர்சனும் இந்த மூன்றாவது டெஸ்ட் போட்டி குறித்த தனது கருத்தினை வெளிப்படுத்தி உள்ளார்.
அந்த வகையில் அவர் கூறியதாவது : இங்கிலாந்து அணிக்கு எதிரான இந்த டெஸ்ட் தொடரில் குல்தீப் யாதவை விளையாட வைக்க வேண்டும். ஏனெனில் இந்திய அணியில் தற்போதைக்கு சில மாற்றங்கள் தேவை என்று நினைக்கிறேன்.
ஐபிஎல் தொடரின் போது நான் குல்தீப் யாதவுடன் இங்கிலாந்து ஆடுகளங்களில் எவ்வாறு பந்து வீசவேண்டும்? எங்கு பந்து வீசவேண்டும்? என்பது குறித்து நிறைய பேசியுள்ளேன். அவருடன் நிறைய நேரத்தையும் செலவிட்டு உள்ளேன். எனவே இந்த இங்கிலாந்து தொடரில் அவரை விளையாட வைத்து பார்ப்பது நன்றாக இருக்கும்.
இதையும் படிங்க : லார்ட்ஸில் அவர் ரன்ஸ் அடிக்கலன்னா.. இந்திய பேய்கிட்ட இருந்து இங்கிலாந்தை காப்பாத்த முடியாது.. அஸ்வின் உறுதி
எனது நண்பர் இந்திய அணியில் இடம் பிடித்து விளையாடாமல் வெளியில் அமர்ந்திருப்பதை பார்க்க நான் விரும்பவில்லை. திறமையான அவருக்கு வாய்ப்பை இந்திய அணி வழங்க வேண்டும் என கெவின் பீட்டர்சன் கூறியது குறிப்பிடத்தக்கது. இந்திய அணிக்காக கடந்த 2017-ஆம் ஆண்டு டெஸ்ட் போட்டிகளில் அறிமுகமான குல்தீப் யாதவ் இதுவரை 13 போட்டிகளில் விளையாடி 56 விக்கெட்டுகளை வீழ்த்தியுள்ளார்.