- Advertisement -
இந்திய கிரிக்கெட்

IND vs ENG : இந்திய அணி பெற்ற இந்த மோசமான தோல்விக்கு அவர் செய்த தவறு தான் காரணம் – கெவின் பீட்டர்சன் ஓபன்டாக்

இந்தியா மற்றும் இங்கிலாந்து அணிகளுக்கு இடையேயான ஐந்தாவது டெஸ்ட் போட்டியானது எட்ஜ்பேஸ்டன் மைதானத்தில் முடிவுக்கு வந்தது. இந்த போட்டியில் முதலில் விளையாடிய இந்திய அணியானது தங்களது முதல் இன்னிங்ஸில் ரிஷப் பண்ட் மற்றும் ஜடேஜா ஆகியோரது சிறப்பான சதத்தின் மூலம் 416 ரன்களை குவித்தது. அதனை தொடர்ந்து விளையாடிய இங்கிலாந்து அணியானது ஜானி பேர்ஸ்டோ அடித்த சதம் மூலம் 284 ரன்கள் குவிக்க அடுத்ததாக தங்களது இரண்டாவது இன்னிசை விளையாடிய இந்திய அணி 132 ரன்கள் முன்னிலை பெற்ற நிலையில் பெரிய அளவில் ரன் குவிக்கும் என்று எதிர்பார்க்கப்பட்டது.

ஆனால் இந்திய அணி தங்களது இரண்டாவது இன்னிங்சில் 245 ரன்கள் மட்டுமே அடித்ததன் காரணமாக இங்கிலாந்து அணிக்கு 378 ரன்கள் அடித்தால் வெற்றி என்ற இலக்கு நிர்ணயிக்கப்பட்டது. அண்மைக்காலமாகவே டெஸ்ட் கிரிக்கெட்டில் அதிரடியான ஆட்டத்தை வெளிப்படுத்தி அசத்தலான வெற்றிகளை பெற்று வரும் பென் ஸ்டோக்ஸ் தலைமையிலான இங்கிலாந்து அணி இந்த போட்டியிலும் 378 ரன்கள் என்ற இலக்கினை மூன்று விக்கெட்டுகளை மட்டுமே இழந்து அதிரடியாக விளையாடி அசத்தலான வெற்றியை பெற்றது.

- Advertisement -

இந்த வெற்றியின் மூலம் இங்கிலாந்து அணி தற்போது 5 போட்டிகள் கொண்ட இந்த தொடரை இரண்டுக்கு இரண்டு (2-2) என்ற கணக்கில் சமநிலையும் செய்துள்ளது. இந்நிலையில் இந்த போட்டியில் இந்திய அணி பெற்ற தோல்வி அனைவரது மத்தியிலும் பெரிய வருத்தத்தை ஏற்படுத்தியுள்ள நிலையில் இந்த போட்டியில் இந்திய அணியின் தோல்விக்கு என்ன காரணம் என்பது குறித்தும் பல்வேறு முன்னாள் வீரர்களும் தங்களது கருத்துக்களை தெரிவித்து வருகின்றனர்.

அந்த வகையில் இங்கிலாந்தின் முன்னாள் வீரரான பீட்டர்சன் இந்திய அணி பெற்ற இந்த தோல்வி குறித்து கூறுகையில் : பும்ரா கேப்டன்சியில் பெரிய தவறினை இந்த போட்டியில் செய்துவிட்டார். இங்கிலாந்தில் பந்துவீசும் பொது ரிவர்ஸ் ஸ்விங் செய்வதன் மூலம் எப்போதும் பலன் இருக்காது.

- Advertisement -

ஆனால் பும்ரா ரிவர்ஸ் ஸ்விங்கிற்க்காக தொடர்ந்து பந்து வீசி முட்டாள்தனம் செய்து விட்டார். இங்கு அப்படி பந்து வீசினால் அதனை ஈசியாக அடித்து விளையாடலாம். அதைத்தான் இங்கிலாந்து வீரர்களும் செய்தனர். அதோடு பீல்டிங்கில் அவர் அமைத்த திட்டங்களும் தவறாக முடிந்து விட்டது.

இதையும் படிங்க : இவங்க இப்படி ஆடுனா. எனக்கு என்ன கவலை. என் வேலை ரொம்ப ஈஸி தான் – வெற்றி குறித்து கேப்டன் ஸ்டோக்ஸ் பேட்டி

அதோடு கேப்டன்சியில் அனுபவம் இல்லாமல் இருக்கும் அவர் செய்த சில சின்ன சின்ன தவறுகளும் தற்போது தோல்விக்கு காரணமாக பெரிய காரணிகளாக மாறிவிட்டன. பும்ராவின் இந்த தவறு இந்திய அணியின் தோல்விக்கு காரணமாக அமைந்துவிட்டது என்றும் பீட்டர்சன் கூறியுள்ளது குறிப்பிடத்தக்கது.

- Advertisement -
Published by