இவங்க இப்படி ஆடுனா. எனக்கு என்ன கவலை. என் வேலை ரொம்ப ஈஸி தான் – வெற்றி குறித்து கேப்டன் ஸ்டோக்ஸ் பேட்டி

Stokes
- Advertisement -

இந்தியா மற்றும் இங்கிலாந்து அணிகளுக்கு இடையே ஜூலை ஒன்றாம் தேதி எட்ஜ்பேஸ்டன் மைதானத்தில் துவங்கிய கடைசி ஐந்தாவது டெஸ்ட் போட்டியானது இன்றுடன் முடிவுக்கு வந்தது. இந்த போட்டியின் முதல் மூன்று நாட்கள் சிறப்பான ஆதிக்கத்துடன் முன்னிலையில் இருந்த இந்திய அணியானது நான்காவது நாளில் தங்களது முன்னிலையை இழந்தது. அதோடு இன்றைய ஐந்தாவது நாள் ஆட்டத்தில் இங்கிலாந்து அணி வீரர்கள் ஜோ ரூட் மற்றும் பேர்ஸ்டோ ஆகியோர் ஆட்டம் இழக்காமல் இருவரும் சதம் அடித்து எளிதாக இங்கிலாந்து அணியை வெற்றி பெற வைத்தனர்.

Joe Root Jonny Bairstow Rishabh Pant IND vs ENg

- Advertisement -

இந்த போட்டியின் முடிவில் ஜோ ரூட் 142 ரன்களையும், பேர்ஸ்டோ 114 ரன்களையும் அடித்து ஆட்டம் இழக்காமல் இருந்ததன் காரணமாக 378 ரன்கள் என்ற இலக்கினை எளிதாக எட்டிப் பிடித்த இங்கிலாந்து அணியானது மூன்று விக்கெட்டை மட்டுமே இழந்து 7 விக்கெட் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது. அதோடு 5 போட்டிகள் கொண்ட இந்த தொடரில் இரண்டுக்கு இரண்டு (2-2) என்ற கணக்கில் சமநிலையும் செய்துள்ளது.

இந்நிலையில் இந்த போட்டி முடிந்து பேசிய இங்கிலாந்து அணியின் கேப்டன் ஸ்டோக்ஸ் கூறுகையில் : எங்களது அணியின் வீரர்கள் இவ்வாறு விளையாடும் போது என்னுடைய வேலை மிகவும் எளிதாகிறது. எங்களுடைய ஓய்வு அறையில் நாங்கள் சிம்பிளான ஒரு திட்டத்தையே வைத்துள்ளோம். அதன்படி நான்காவது இன்னிங்ஸில் எவ்வளவு பெரிய ஸ்கோராக இருந்தாலும் எட்டிப் பிடிக்க வேண்டும் என்பது மட்டும்தான் எங்களுடைய மனதில் தற்போது உள்ளதால் 378 ரன்கள் என்பது எங்களுக்கு ஒரு பயமுறுத்தக்கூடிய இலக்காக இல்லை.

அதிலும் குறிப்பாக கடந்த ஐந்து வாரங்களாகவே நாங்கள் டெஸ்ட் கிரிக்கெட்டிலும் மிகச் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி வருகிறோம். இந்த போட்டியில் பேர்ஸ்டோ மற்றும் ரூட் ஆகியோரது ஜோடி மிகவும் சிறப்பான அதிரடியான ஆட்டத்தை வெளிப்படுத்தியதால் இந்திய அணிக்கு எதிராக இந்த வெற்றியை எளிதாக பெற முடிந்தது.

- Advertisement -

இந்திய பந்துவீச்சாளர்கள் சிறப்பாக பந்து வீசினாலும் எங்களது வீரர்கள் அருமையான பேட்டிங்கை வெளிப்படுத்தினர். இந்த போட்டியில் மட்டுமின்றி அனைத்து போட்டிகளிலுமே எங்களை மற்ற அணிகள் சிறப்பாக விளையாடலாம். ஆனால் ஒரு விடயம் மட்டும் எங்களிடம் தெளிவாக இருக்கிறது. எங்களைப் போன்று தைரியமாக யாரும் விளையாட முடியாது. டெஸ்ட் கிரிக்கெட்டில் தற்போது நாங்கள் புதிய வரலாற்றை எழுதி வருகிறோம்.

இதையும் படிங்க : IND vs ENG : உலக நட்சத்திரங்களை விட ராக்கெட் வேகம் – இந்தியாவை ஆள்பவராக ஜோ ரூட் 2 புதிய வரலாற்று சாதனை

அந்த வகையில் கடந்த 4-5 வாரங்களாகவே மற்ற அணிகளுக்கு எதிராக எங்களது ஆதிக்கத்தை செலுத்தி வெற்றி பெற விரும்புகிறோம். அந்த வகையில் இந்திய அணிக்கு எதிராகவும் ஆதிக்கத்தை செலுத்தி இந்த டெஸ்ட் போட்டியில் வெற்றி பெற்றது மகிழ்ச்சி என பென் ஸ்டோக்ஸ் கூறியது குறிப்பிடத்தக்கது.

Advertisement