நீங்க வேணுனா பாருங்க. டி20 உலகக்கோப்பையை இந்த அணிதான் ஜெயிக்கும் – கெவின் பீட்டர்சன் கணிப்பு

Pietersen
- Advertisement -

ஐக்கிய அரபு அமீரகத்தில் நடைபெற்று வரும் டி20 உலகக்கோப்பை தொடரானது தற்போது இறுதி கட்டத்தை நெருங்கியுள்ளது. இந்த தொடரின் முதலாவது அரையிறுதிப் போட்டியில் இங்கிலாந்து அணியை வீழ்த்தி நியூசிலாந்து அணியும், இரண்டாவது அரையிறுதி போட்டியில் பாகிஸ்தான் அணியை வீழ்த்தி ஆஸ்திரேலியா அணியும் இறுதிப்போட்டிக்கு தகுதி பெற்றன. இன்று நடைபெற இருக்கும் இந்த இறுதிப் போட்டியில் ஆரோன் பின்ச் தலைமையிலான ஆஸ்திரேலிய அணியும், கேன் வில்லியம்சன் தலைமையிலான நியூசிலாந்து அணியும் மோதுகின்றன.

nzvsaus

- Advertisement -

இந்த போட்டியில் வெற்றி பெறும் அணி முதல் முறையாக டி20 உலகக் கோப்பையை கைப்பற்றும் என்ற காரணத்தினால் இந்த போட்டியின் மீதான எதிர்பார்ப்பு ரசிகர்கள் மத்தியில் அதிகரித்துள்ளது. இந்நிலையில் இந்தப் போட்டியில் வெற்றிபெறும் அணி எது ? என்பது குறித்து இங்கிலாந்து அணியின் முன்னாள் வீரரான கெவின் பீட்டர்சன் தனது கருத்தினை வெளிப்படுத்தியுள்ளார்.

இதுகுறித்து அவர் கூறுகையில் : ஏற்கனவே 2015ஆம் ஆண்டு மெல்போர்னில் நடைபெற்ற ஒருநாள் உலகக் கோப்பை தொடரின் இறுதி ஆட்டத்தில் இந்த இரு அணிகளும் மோதின. அதில் நியூசிலாந்து அணியை வீழ்த்தி ஆஸ்திரேலியா அணி கோப்பையை கைப்பற்றியது. தற்போதும் இவ்விரு அணிகளுக்கும் இடையே நடைபெறும் இறுதிப் போட்டியிலும் ஆஸ்திரேலிய அணி கோப்பையை கைப்பற்றும்.

wade 2

அவ்வாறு நடந்தால் நான் ஆச்சரியப்பட மாட்டேன். ஏனெனில் ஆஸ்திரேலியா அவ்வளவு பலமான அணியாக தான் தற்போதும் உள்ளது என்று கூறியுள்ளார். இந்த டி20 உலகக் கோப்பை இறுதிப் போட்டியில் நியூசிலாந்து விளையாடுவது முதல் முறை.

- Advertisement -

இதையும் படிங்க : ரஹானேவிற்கு பதிலா இவரையே டெஸ்ட் அணியின் கேப்டனாக தேர்வு செய்திருக்கனும் – ஆகாஷ் சோப்ரா கருத்து

ஆனால் ஏற்கனவே ஆஸ்திரேலிய அணி கடந்த 2010-ஆம் ஆண்டு இங்கிலாந்து அணிக்கு எதிராக இறுதிப்போட்டியில் தோல்வி அடைந்தது குறிப்பிடத்தக்கது. இந்த போட்டியில் எந்த அணி வெற்றி பெற்றாலும் முதல்முறையாக கோப்பையை கைப்பற்றும் என்பது குறிப்பிடத்தக்கது.

Advertisement