ரஹானேவிற்கு பதிலா இவரையே டெஸ்ட் அணியின் கேப்டனாக தேர்வு செய்திருக்கனும் – ஆகாஷ் சோப்ரா கருத்து

Chopra
- Advertisement -

இந்திய அணியின் மூன்று வகையான கிரிக்கெட்டுக்கும் கேப்டனாக செயல்பட்டு வந்த விராட் கோலி பணிச்சுமை காரணமாக தற்போது டி20 உலக கோப்பை தொடர் முடிவடைந்த கையோடு தனது கேப்டன் பதவியை துறந்தார். அதனை தொடர்ந்து தற்போது அடுத்ததாக நடைபெற உள்ள நியூசிலாந்து அணிக்கு எதிரான 3 போட்டிகள் கொண்ட டி20 தொடரில் புதிய கேப்டனாக ரோஹித் சர்மா நியமிக்கப்பட்டுள்ளார்.

Rohith

- Advertisement -

இந்த டி20 தொடரில் ஓய்வு எடுத்துக்கொள்ளும் விராட் கோலி அடுத்ததாக நடைபெறவிருக்கும் இரண்டு போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரின் முதல் போட்டியிலும் ஓய்வு எடுத்துக் கொள்கிறார். பின்னர் மீண்டும் 2-வது டெஸ்ட் போட்டியின் போது அணியின் கேப்டனாக திரும்புகிறார். இந்நிலையில் கோலி ஓய்வில் இருக்கும் இந்த முதல் டெஸ்ட் போட்டிக்கு தற்காலிக கேப்டனாக பிசிசிஐ ரஹானேவை நியமித்துள்ளது.

இந்நிலையில் ரஹானேவை கேப்டனாக்கியது தவறு என்று இந்திய அணியின் முன்னாள் வீரரான ஆகாஷ் சோப்ரா தனது கருத்தை தெரிவித்துள்ளார். குறித்து அவர் கூறுகையில் : ரஹானேவை கேப்டனாக நியமித்தது தவறு. ஏனெனில் கடந்த 2 ஆண்டுகளாக அவர் டெஸ்ட் கிரிக்கெட்டில் சிறப்பாக விளையாடவில்லை.

Rahane

மேலும் அவரது சராசரி கடந்த 2 ஆண்டுகளில் வெகுவாக குறைந்துள்ளது. தற்போது அவர் நியூசிலாந்து அணிக்கு எதிரான டெஸ்ட் தொடரில் தனது பேட்டிங் திறமையை நிரூபிக்க வேண்டிய கட்டாயத்தில் உள்ளார். இப்படி நெருக்கடியில் உள்ள வீரருக்கு கேப்டன் பதவி என்பது கூடுதல் நெருக்கடியை தரும்.

- Advertisement -

இதையும் படிங்க : லக்ஷ்மணன்க்கு புதிய பதவியினை வழங்கி அறிவிப்பினை வெளியிட்ட கங்குலி – சரியான பதவி தான்

எனவே என்னை பொறுத்தவரை ரோகித் சர்மாவிற்கு இந்த கேப்டன் பதவியை கொடுத்து இருக்கலாம். ரோகித் சர்மாவிற்கு டெஸ்ட் தொடரில் ஓய்வு கொடுத்தது தவறு. அவரைத் தொடர்ந்து டெஸ்ட் அணியில் விளையாட வைத்திருக்க வேண்டும் என்று அவர் கூறியது குறிப்பிடத்தக்கது.

Advertisement