லக்ஷ்மணன்க்கு புதிய பதவியினை வழங்கி அறிவிப்பினை வெளியிட்ட கங்குலி – சரியான பதவி தான்

Ganguly
- Advertisement -

இந்திய அணியின் தலைமை பயிற்சியாளராக செயல்பட்டு வந்த ரவி சாஸ்திரியின் பதவிக்காலம் இந்த டி20 உலகக் கோப்பைத் தொடரோடு முடிவுக்கு வந்ததால் அவர் அணியில் இருந்து வெளியேறியுள்ளார். அவருக்கு பதிலாக இந்திய அணியின் முன்னாள் வீரரான ராகுல் டிராவிட் தற்போது அதிகாரப்பூர்வமாக பயிற்சியாளராக நியமிக்கப்பட்டுள்ளார். வரும் 17ஆம் தேதி துவங்க இருக்கும் நியூசிலாந்து அணிக்கு எதிரான டி20 தொடரில் இருந்து டிராவிட் தனது பணியை ஆரம்பிக்க உள்ளார்.

Dravid

- Advertisement -

இந்நிலையில் அவர் ஏற்கனவே பதவி வகித்து வந்த தேசிய கிரிக்கெட் அகாடமியின் தலைவர் பதவியை ராஜினாமா செய்துள்ளார். பெங்களூருவை தலைமையிடமாக கொண்ட தேசிய கிரிக்கெட் அகாடமி தலைவர் பதவி தற்போது காலியாக உள்ளது. அந்தப் பதவியை ராஜினாமா செய்துவிட்டு தான் தற்போது டிராவிட் அணியின் பயிற்சியாளராக இணைந்துள்ளார்.

இதன் காரணமாக தற்போது தேசிய கிரிக்கெட் அகாடமியின் தலைவர் பதவிக்கு தேடல் நடைபெற்று வந்தது. அதன் முடிவில் தற்போது விவிஎஸ் லக்ஷ்மன் தேசிய கிரிக்கெட் அகாடமியின் தலைவராக செயல்படுவார் என்று பிசிசிஐ தலைவர் கங்குலி உறுதி செய்துள்ளார்.

Laxman

மேலும் டிராவிடின் இடத்தை நிரப்ப சரியான நபர் அவர்தான் என்றும் அவர்கள் இருவருக்கும் இடையே நல்ல நட்பு உள்ளதால் நிச்சயம் டிராவிடுடன் நெருக்கமான தொடர்பில் இந்த பணியை அவர் கவனித்துக் கொள்வார் என்றும் அவர் கூறியுள்ளார். இதன்காரணமாக தற்போது லக்ஷ்மணன் இந்திய அணிக்காக முதல் பதவியை பெற்றுள்ளது குறிப்பிடத்தக்கது.

Advertisement