இவரோட பவுலிங்கில் யாராவது அடிங்கப்பா ப்ளீஸ். பிளாட் பிட்சிலும் சூப்பரா போடுறாரு – கெவின் பீட்டர்சன் கருத்து

Pietersen
Advertisement

ஆஸ்திரேலியா நாட்டிற்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள இங்கிலாந்து அணியானது அந்நாட்டு கிரிக்கெட் அணிக்கு எதிராக 5 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் பங்கேற்று விளையாடி வருகிறது. இந்த தொடரின் முதல் டெஸ்ட் போட்டியில் ஆஸ்திரேலிய அணி வெற்றி பெற்று 1-0 என்ற கணக்கில் முன்னிலையில் இருக்க தற்போது இவ்விரு அணிகளுக்கும் இடையேயான 2-வது டெஸ்ட் போட்டி அடிலெய்ட் மைதானத்தில் பகலிரவு ஆட்டமாக நடைபெற்று வருகிறது.

aus vs eng

இந்த போட்டியின் முதல் இன்னிங்சில் விளையாடிய ஆஸ்திரேலிய அணி ஆனது 473 ரன்களை குவிக்க அடுத்ததாக விளையாடிய இங்கிலாந்து அணி 236 ரன்களை குவித்தது. பின்னர் தங்களது இரண்டாவது இன்னிங்சில் விளையாடிய ஆஸ்திரேலிய அணி 230 ரன்களுக்கு டிக்ளேர் செய்ய தற்போது 468 ரன்கள் அடித்தால் வெற்றி என்ற இலக்குடன் இங்கிலாந்து அணி விளையாடி வருகிறது.

- Advertisement -

இந்நிலையில் இந்த போட்டியில் விளையாடி வரும் ஆஸ்திரேலிய சுழற்பந்து வீச்சாளர் நாதன் லயனை பாராட்டி இங்கிலாந்து அணியின் முன்னாள் வீரர் கெவின் பீட்டர்சன் தனது ட்விட்டர் பக்கத்தில் ஒரு கருத்து ஒன்றினை பதிவிட்டுள்ளார்.

அதன்படி அவர் பதிவிட்டுள்ள அந்த கருத்தில் : யாராவது ஒருவர் நாதன் லயனை அடித்து விளையாடுங்கள். எந்த ஒரு வேரியேஷனும் இல்லாமல் பந்துவீசும் அவர் பிளாட் பிட்ச்களில் கூட சிறப்பாக பந்து வீசி வருகிறார். அவரது பந்தை யாராவது அடியுங்கள் என்று தனது கருத்தைப் பதிவிட்டுள்ளார்.

இதையும் பிடிங்க : பாண்டிங் மாதிரி யாராலும் பண்ணவே முடியாது. வியந்த போன அஷ்வின் – எதற்கு தெரியுமா? (வைரலாகும் வீடியோ)

அவரின் இந்த ட்வீட் தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது. இந்த போட்டியின் முதல் இன்னிங்சில் 28 ஓவர்கள் வீசிய நாதன் லயன் 11 மெய்டன்கள் வீசியது மட்டுமின்றி 58 ரன்களை மட்டுமே விட்டு கொடுத்து 3 விக்கெட்டுகளை கைப்பற்றி அசத்தியது குறிப்பிடத்தக்கது.

Advertisement