பாண்டிங் மாதிரி யாராலும் பண்ணவே முடியாது. வியந்த போன அஷ்வின் – எதற்கு தெரியுமா? (வைரலாகும் வீடியோ)

Ponting
Advertisement

ஆஸ்திரேலியா மற்றும் இங்கிலாந்து அணிகளுக்கு இடையேயான 5 போட்டிகள் கொண்ட ஆஷஸ் தொடரானது தற்போது ஆஸ்திரேலிய நாட்டில் நடைபெற்று வருகிறது. இந்த டெஸ்ட் தொடரின் முதல் போட்டியில் ஆஸ்திரேலிய அணி வெற்றி பெற்று 1-0 என்ற கணக்கில் முன்னிலை வகிக்கும் நிலையில் தற்போது இரண்டாவது டெஸ்ட் போட்டியானது பகல் இரவு ஆட்டமாக அடிலெய்டு மைதானத்தில் நடைபெற்று வருகிறது.

aus vs eng

இந்த போட்டியில் ஆஸ்திரேலிய அணி தங்களது முதல் இன்னிங்ஸில் 473 ரன்களை குவிக்க அடுத்ததாக இங்கிலாந்து அணி 236 ரன்கள் குவித்தது. அதன்பின்னர் தற்போது ஆஸ்திரேலிய அணி இரண்டாவது இன்னிங்சில் 230 ரன்கள் எடுத்து டிக்ளேர் செய்ய தற்போது இங்கிலாந்து அணியின் வெற்றிக்கு 468 ரன்கள் இலக்காக நிர்ணயிக்கப்பட்டு இங்கிலாந்து அணி தங்களது இரண்டாவது இன்னிங்க்ஸை விளையாடி வருகிறது.

- Advertisement -

இந்நிலையில் இந்த போட்டியின்போது முதல் இன்னிங்சில் ஆஸ்திரேலிய அணி பேட்டிங் செய்து கொண்டிருக்கையில் அந்த அணியின் ஆல்ரவுண்டர் க்ரீன் தனது காலை இடது புறமாக நகர்த்தி வைத்து விளையாடி வந்தார். அப்போது பென் ஸ்டோக்ஸ் பந்து வீசி கொண்டிருக்கையில் வர்ணனையாளராக இருந்த பாண்டிங் க்ரீனின் கால் நகர்வு சரி இல்லை என்றும் பவுலர் நேராக ஸ்டம்பை நோக்கி பந்து வீசினால் நிச்சயம் அவர் போல்ட் ஆவார் என்று கூறினார்.

அப்படி அவர் சொல்லி முடித்த நிலையில் அடுத்த பந்தை ஸ்டெம்பை நோக்கி ஸ்டோக்ஸ் வீச பந்து ஸ்டம்பில் அடித்தது. க்ரீன் கிளீன் போல்டாகி வெளியேறினார். இப்படி பாண்டிங் சொன்னபடியே அடுத்த பந்தில் அதே தவறு செய்து க்ரீன் வெளியேறியது அனைவரையும் வியக்கவைத்தது. இதுபோன்று வீரர்களின் செயல்பாட்டை வைத்து கணிப்பது பாண்டிங்கிற்கு புதிது கிடையாது. பல முறை இதே போன்ற கணிப்புக்களை பாண்டிங் நேரலையில் கூறியிருக்கிறார்.

இதையும் படிங்க : இம்முறை இந்திய அணிக்கு சூப்பர் சேன்ஸ் இருக்கு. விட்டுடாதீங்க பசங்களா – சபா கரீம் ஓபன்டாக்

இந்நிலையில் பாண்டிங்கின் இந்த சரியான கணிப்பு பார்த்து வியந்துபோன அஷ்வின் கிரிக்கெட்டை இவரைவிட யாராலும் புரிந்து வைத்திருக்க முடியாது என்று தனது கருத்தை பதிவிட்டு அந்த வீடியோவிற்கு தனது பதிலை அளித்துள்ளார். அவரது இந்த பதிவு தற்போது இணையத்தில் வைரலாகி வருவது குறிப்பிடத்தக்கது.

Advertisement