இம்முறை இந்திய அணிக்கு சூப்பர் சேன்ஸ் இருக்கு. விட்டுடாதீங்க பசங்களா – சபா கரீம் ஓபன்டாக்

Karim
- Advertisement -

இந்தியா மற்றும் தென் ஆப்பிரிக்கா அணிகளுக்கு இடையிலான மூன்று போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடர் மற்றும் மூன்று போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரானது நடைபெற உள்ளது. இவ்விரு அணிகளுக்கும் இடையிலான முதலாவது டெஸ்ட் போட்டி 26ஆம் தேதி துவங்க இருக்கும் நிலையில் இந்த தென் ஆப்ரிக்க தொடரில் விளையாட இருக்கும் இந்திய அணிக்கு சில முன்னாள் வீரர்கள் தங்களது அறிவுரைகளை வழங்கி வருகின்றனர். அந்த வகையில் இந்திய அணியின் முன்னாள் தேர்வுக்குழு தலைவரான சபா கரீம் தனது அறிவுரையை வழங்கியுள்ளார்.

INDvsRSA

- Advertisement -

ஏற்கனவே இந்திய அணி இதுவரை தென்னாப்பிரிக்க மண்ணில் ஏழுமுறை டெஸ்ட் தொடரில் விளையாடி உள்ளது. அதில் 6 முறை தோல்வியை கண்டுள்ள இந்திய அணி ஒரே ஒரு முறை மட்டும் சமநிலையில் முடிந்துள்ளது. இந்நிலையில் இந்த டெஸ்ட் தொடரை இந்திய அணி கைப்பற்ற பொன்னான வாய்ப்பு உள்ளதாக அவர் தெரிவித்துள்ளார். இதுகுறித்து அவர் கூறுகையில் :

தென்னாப்பிரிக்க மண்ணில் இந்திய அணி முதல் முறையாக தொடரை கைப்பற்றும் வாய்ப்பு தற்போது கிடைத்துள்ளது. இந்த தொடரை 2-0 அல்லது 2-1 என்ற கணக்கில் கைப்பற்ற நம்மால் முடியும் என்று கூறியுள்ளார். இந்திய அணியை பொறுத்தவரை டெஸ்ட் கிரிக்கெட்டில் தற்போது மிக பலம் வாய்ந்த அணியாக காணப்படுகிறது.

IND

அணியில் உள்ள 11 வீரர்கள் தவிர்த்து பெஞ்சில் இருக்கும் வீரர்களும் சிறப்பாக இருக்கின்றனர். அதை நாம் ஆஸ்திரேலியா தொடரிலேயே பார்த்தோம். எனவே நிச்சயம் இம்முறையும் இந்திய அணி அயல்நாட்டு மண்ணில் சிறப்பாக செயல்பட்டு தென்ஆப்பிரிக்க தொடரை கைப்பற்றும் வாய்ப்பு இருக்கிறது என்றும் நிச்சயம் இந்த தொடரில் இந்திய அணி வரலாறு படைக்கும் என்றும் அவர் கூறியது குறிப்பிடத்தக்கது.

- Advertisement -

இதையும் படிங்க : 24 வயது ஒடிஷா வீரரை ஸ்பெஷல் ட்ரைனிங்க்கு அழைத்த சி.எஸ்.கே நிர்வாகம் – ஏலத்தில் எடுக்கவும் வாய்ப்பு

ஏற்கனவே இந்த தென்னாபிரிக்க தொடர் குறித்து பேட்டியளித்திருந்த சீனியர் வீரரான புஜாரா கூறுகையில் இந்திய அணியின் வேகப்பந்து வீச்சாளர்கள் தொடர்ந்து அயல்நாட்டில் சிறப்பாக செயல்பட்டு வருவதால் இம்முறை இத்தொடரை இந்திய அணி கைப்பற்றும் என்று கூறியுள்ளது குறிப்பிடத்தக்கது.

Advertisement