24 வயது ஒடிஷா வீரரை ஸ்பெஷல் ட்ரைனிங்க்கு அழைத்த சி.எஸ்.கே நிர்வாகம் – ஏலத்தில் எடுக்கவும் வாய்ப்பு

Senapati
- Advertisement -

இந்தியாவில் அடுத்த ஆண்டு நடைபெற இருக்கும் ஐபிஎல் தொடருக்கு முன்னர் ஜனவரி மாதம் மெகா ஏலம் நடைபெறும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. அதன்படி இந்த மெகா ஏலத்திற்கு முன்னதாக சென்னை அணி தக்க வைத்த 4 வீரர்களாக ஜடேஜா, தோனி, மொயின் அலி, ருதுராஜ் கெய்க்வாட் ஆகியோர் உள்ளனர். அவர்களை தவிர மீதமுள்ள வீரர்களை சென்னை அணி ஏலத்தின் மூலம் எடுக்க இருக்கிறது. இந்நிலையில் இந்த ஏலத்திற்கு முன்னதாக 24 வயது ஒடிசாவை சேர்ந்த வீரரான சுப்ரன்ஷு சேனாபதி என்கிற வீரரை தற்போது சிஎஸ்கே அணி நிர்வாகம் ஸ்பெஷல் டிரெய்னிங்ற்காக அழைத்துள்ளதாக ஒரு தகவல் வெளியாகி உள்ளது.

senapati 1

- Advertisement -

மேலும் இந்த ட்ரெய்னிங்கில் சுப்ரன்ஷு சேனாபதி தேர்வாளர்களின் கவனத்தை ஈர்க்கும் பட்சத்தில் அவர் மெகா ஏலத்தில் சென்னை அணிக்காக எடுக்கப்படுவார் என்றும் கூறப்படுகிறது. அப்படி சென்னை அணியால் பயிற்சிக்கு அழைக்கப்பட்ட சுப்ரன்ஷு சேனாபதி யார் என்கிற தகவலை தான் நாங்கள் இந்த பதிவில் உங்களுக்காக வழங்க உள்ளோம். அதன்படி 24 வயதான சுப்ரன்ஷு சேனாபதி ஒடிசா அணிக்காக கடந்த 2016-ம் ஆண்டு அறிமுகமாகி விளையாடி வருகிறார்.

நடைபெற்று வரும் விஜய் ஹசாரே தொடரில் 7 போட்டிகளில் 275 ரன்கள் அடித்துள்ளார். அதுமட்டுமின்றி கடந்த 8ஆம் தேதி நடைபெற்ற போட்டியில் அவர் சதம் அடித்தும் அசத்தி இருந்தது குறிப்பிடத்தக்கது. அதோடு அவர் இந்த தொடரில் 2 அரைசதங்களையும் அவர் விளாசியுள்ளார். அதுமட்டுமின்றி இதற்கு முன்னர் நடைபெற்ற சையத் முஷ்டாக் அலி தொடரிலும் 5 போட்டிகளில் 138 ரன்கள் அடித்துள்ளார்.

senapati 2

ருதுராஜ் கெய்க்வாட்டை போன்று சென்னை அணியின் நிர்வாகிகளின் கவனத்தை இவரது பேட்டிங் ஸ்டைல் காரணமாக தற்போது இவருக்கு இந்த ஸ்பெஷல் ட்ரெயினிங் வழங்கப்படுகிறது. இதிலும் அவர் வெற்றிகரமாக செயல்படும் பட்சத்தில் சென்னை அணிக்காக ஏலத்தில் எடுக்கப்படுவார் என்று கூறப்படுகிறது. ஏற்கனவே இதே போன்று ஸ்பெஷல் பயிற்சி அளிக்கப்பட்டு அணியில் இடம் பிடித்தவர் தான் ருதுராஜ் கெய்க்வாட்.

- Advertisement -

இதையும் படிங்க : வீடியோ : ப்ளீஸ் என் மகளை மட்டும் போட்டோ எடுக்காதீங்க – நிருபர்களை கேட்டுக்கொண்ட விராட் கோலி

எனவே தற்போது சுப்ரன்ஷு சேனாபதியும் அதேபோன்று சி.எஸ்.கே அணியில் இடம்பிடிக்க வாய்ப்பும் உள்ளது என்று பலரும் கூறுகின்றனர். 24 வயதான இவர் first-class கிரிக்கெட்டில் 34 போட்டிகளும், லிஸ்ட் ஏ கிரிக்கெட்டில் 32 போட்டிகளும், டி20 கிரிக்கெட்டில் 26 போட்டிகளில் விளையாடி உள்ளது குறிப்பிடத்தக்கது.

Advertisement