- Advertisement -
உலக கிரிக்கெட்

சர்வதேச கிரிக்கெட்டிலிருந்து ஓய்வை அறிவித்த அயர்லாந்து அணியின் நட்சத்திர வீரர் – ரசிகர்கள் வாழ்த்து

அயர்லாந்து அணியின் ஆல்ரவுண்டரும், அனுபவ வீரருமான கெவின் ஓ பிரைன் அந்த அணியின் நட்சத்திர வீரராக கடந்த பல ஆண்டுகளாக விளையாடி வந்தார். அயர்லாந்து அணிக்காக சர்வதேச கிரிக்கெட்டில் 2006 ஆம் ஆண்டு அறிமுகமான அவர் இதுவரை மூன்று டெஸ்ட் போட்டிகள், 153 ஒரு நாள் போட்டிகள் மற்றும் 110 டி20 போட்டிகளில் பங்கேற்று விளையாடி உள்ளார். அயர்லாந்து அணியின் அனுபவ வீரராக இருந்து வந்த கெவின் சர்வதேச கிரிக்கெட்டில் இருந்து நேற்று ஓய்வினை அறிவித்தார்.

கெவின் ஓ பிரைன் கடந்த 2011 ஆம் ஆண்டு இந்தியாவில் நடைபெற்ற 50 ஓவர் உலகக் கோப்பை தொடரின் போது இங்கிலாந்து அணிக்கு எதிராக ஆடிய ஆட்டம் இன்றளவும் ரசிகர்கள் மத்தியில் ஒரு மறக்க முடியாத இன்னிங்ஸ்சாக இருந்து வருகிறது.

- Advertisement -

ஏனெனில் இங்கிலாந்து அணி நிர்ணயித்த 300-க்கும் மேற்பட்ட ரன்களை தனது அதிரடியான சதத்தின் மூலம் அவர் சேசிங் செய்து காண்பித்தார். அந்த போட்டியில் 50 பந்துகளில் அவர் அடித்த அதிரடி சதம் இன்றளவும் ரசிகர்கள் மத்தியில் மறக்க முடியாத ஒரு சதமாக பேசப்பட்டு வருகிறது.

அயர்லாந்து அணி பெற்ற மிகப்பெரிய வெற்றிகளில் ஒன்றாக அந்த போட்டி பார்க்கப்படுகிறது. இந்நிலையில் கடந்த ஆண்டு நடைபெற்ற டி20 உலக கோப்பை தொடரின் தகுதிச் சுற்று போட்டியின் போது நமீபியா அணிக்கு எதிராக விளையாடிய கெவின் அதன் பிறகு சர்வதேச போட்டிகளில் விளையாடாமல் இருந்தார். மேலும் தற்போது 38 வயதை எட்டியுள்ள அவருக்கு பேட்டிங் ஃபார்மும் சரிந்தது.

- Advertisement -

இதன் காரணமாக அவருக்கு அயர்லாந்து அணியில் இடம் கிடைக்காமல் இருந்து வந்தது. இந்நிலையில் அவர் இந்த சூழ்நிலையில் தனது ஓய்வு முடிவினை அறிவித்துள்ளார். இது குறித்து அவர் வெளியிட்ட அறிக்கையில் : அயர்லாந்து அணிக்காக விளையாடிய ஒவ்வொரு நிமிடத்தையும் ரசித்ததாகவும், ஆடுகளத்திற்கு வெளியே பல நண்பர்களை உருவாக்கியதாகவும் அவர் கூறினார்.

இதையும் படிங்க : கடந்த 2 வருஷமா விராட் கோலியிடம் அந்த குழப்பம் இருக்கு. அதை சரி பண்ணனும் – ராபின் உத்தப்பா அட்வைஸ்

மேலும் இதுவரை தனக்கு ஆதரவளித்த அனைத்து ரசிகர்களுக்கும், நண்பர்களுக்கும், குடும்பத்தாருக்கும் நன்றி தெரிவித்துக்கொள்வதாக அவர் ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளார். அவரது இந்த ஓய்வு அறிவிப்பை அடுத்து ரசிகர்கள் பலரும் அவருக்கு வாழ்த்து தெரிவித்து வருவது குறிப்பிடத்தக்கது.

- Advertisement -
Published by