- Advertisement -
இந்திய கிரிக்கெட்

அற்புதமா விளையாடுறாரு.. இந்த தமிழ்நாட்டு பையனை செலக்ட் பண்ணிருக்கலாம்.. லெஜெண்ட் கவாஸ்கர் அதிருப்தி

வெஸ்ட் இண்டீஸ் மற்றும் அமெரிக்காவில் நடைபெற உள்ள 2024 டி20 உலகக் கோப்பைக்கான இந்திய கிரிக்கெட் அணி சமீபத்தில் வெளியிடப்பட்டது. ரோகித் சர்மா தலைமையில் அறிவிக்கப்பட்டுள்ள அந்த அணியில் விராட் கோலி, சூரியகுமார் யாதவ், பும்ரா, ரவீந்திர ஜடேஜா உள்ளிட்ட மூத்த வீரர்களும் சிவம் துபே, ரிஷப் பண்ட், சஞ்சு சாம்சன் போன்ற இளம் வீரர்களும் தேர்வு செய்யப்பட்டுள்ளனர்.

இருப்பினும் இந்த அணியில் ரிங்கு சிங் தேர்வு செய்யப்படாதது பெரும்பாலானவர்களுக்கு ஏமாற்றத்தை கொடுத்தது. அத்துடன் அந்த அணியில் தமிழ்நாட்டில் இருந்து அணியில் ஒரு வீரர் கூட தேர்வு செய்யப்படாதது தமிழக ரசிகர்களுக்கு மிகப்பெரிய ஏமாற்றத்தை கொடுத்துள்ளது. குறிப்பாக 2024 ஐபிஎல் தொடரில் தினேஷ் கார்த்திக், ரவிச்சந்திரன் அஸ்வின், சாய் சுதர்சன், நடராஜன், வாஷிங்டன் சுந்தர் போன்ற வீரர்கள் விளையாடி வருகின்றனர்.

- Advertisement -

கவாஸ்கர் அதிருப்தி:
அதிலும் குறிப்பாக ஹைதராபாத் அணிக்காக விளையாடி வரும் நடராஜன் 7 போட்டிகளில் 13 விக்கெட்டுகளை எடுத்து நல்ல ஃபார்மில் அசத்தி வருகிறார். மேலும் பும்ரா போல யார்கர் பந்துகளை வீசி வெற்றியை மாற்றக்கூடிய திறமை கொண்ட நடராஜன் இடது கை வேகப்பந்து வீச்சாளர் என்பது கூடுதல் ஸ்பெஷலாகும். ஆனால் அவரை ரிசர்வ் பட்டியலில் கூட இணைக்காத தேர்வுக்குழு பெங்களூரு அணியில் சுமாராக விளையாடி வரும் முகமது சிராஜை தேர்ந்தெடுத்துள்ளது.

இத்தனைக்கும் ஐபிஎல் தொடரிலும் சரி சர்வதேச டி20 போட்டிகளிலும் சரி நடராஜனை விட முகமது சிராஜின் எக்கனாமி மோசமாகவே இருக்கிறது. இந்நிலையில் ஹைதராபாத் அணியில் விளையாடி வரும் இடது கை வேகப்பந்து வீச்சாளரான நடராஜன் இந்திய அணிக்காக தேர்வு செய்யப்பட்டிருக்க வேண்டும் என்று ஜாம்பவான் சுனில் காஸ்கர் அதிருப்தியை வெளிப்படுத்தியுள்ளார்.

- Advertisement -

இது பற்றி இந்தியா டுடே இணையத்தில் அவர் பேசியது பின்வருமாறு. “இடது கை வேகப்பந்து வீச்சாளரான டி நடராஜனை பற்றி நான் அதிகமாக சந்திக்கிறேன். அவர் அற்புதமாக பந்து வீசி வருகிறார். எனவே அவர் இந்திய அணியில் இருந்திருக்க வேண்டும் என்று நான் கருதுகிறேன். இருப்பினும் ஏற்கனவே தேர்வு செய்யப்பட்டுள்ள வீரர்கள் போதுமான அனுபவத்தை கொண்டிருப்பதாக தேர்வுக்குழு கருதுகிறது. எனவே அதில் எந்த பிரச்சனையும் இல்லை” என்று கூறினார்.

இதையும் படிங்க: அட்லீஸ்ட் அவரை செலக்ட் பண்ணிருக்கலாம்.. ரொம்ப காலமாவே தமிழ்நாட்டு பிளேயர்ஸ்க்கு இது நடக்குது.. பத்ரிநாத் வேதனை

அத்துடன் ஹர்திக் பாண்டியா 4வது பவுலராக செயல்படுவார் என்பதாலேயே தேர்வுக்குழு 4 ஸ்பின்னர்களை தேர்ந்தெடுத்துள்ளதாகவும் கவாஸ்கர் கூறியுள்ளார். மொத்தத்தில் 2020/21 சீசனில் இந்திய அணிக்காக ஆஸ்திரேலியாவில் 3 விதமான கிரிக்கெட்டிலும் அறிமுகமாகி அசத்திய நடராஜன் 4 வருடங்கள் கழித்து மீண்டும் விளையாடுவதற்கான மறு வாய்ப்பை பெறாமல் தவிப்பது தமிழக ரசிகர்களை வேதனையில் ஆழ்த்தியுள்ளது.

- Advertisement -