கடந்த 2 வருஷமா விராட் கோலியிடம் அந்த குழப்பம் இருக்கு. அதை சரி பண்ணனும் – ராபின் உத்தப்பா அட்வைஸ்

Uthappa
- Advertisement -

இந்தியா மற்றும் ஜிம்பாப்வே அணிகளுக்கு இடையேயான மூன்று போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரானது இன்று முதல் ஜிம்பாப்வே தலைநகரான ஹராரேவில் நடைபெற உள்ளது. இந்த தொடருக்கான இந்திய அணியின் கேப்டனாக ராகுலும், துணைக் கேப்டனாக ஷிகார் தவானும் அறிவிக்கப்பட்டுள்ளனர். இந்த தொடரில் இந்திய அணியின் ஆட்டம் எவ்வாறு இருக்கும் என்பது குறித்து பல்வேறு முன்னாள் வீரர்களும் தங்களது கருத்துக்களை தெரிவித்து வருகின்றனர்.

INDvsZIM RAHUL

- Advertisement -

இவ்வேளையில் இந்திய அணியின் முன்னாள் கிரிக்கெட் வீரரான ராபின் உத்தப்பா தற்போது பேட்டி ஒன்றினை அளித்துள்ளார். இது குறித்து அவர் கூறுகையில் : இந்த தொடரில் சுப்மன் கில் துவக்க வீரராக களமிறங்க மாட்டார் என்று நினைக்கிறேன்.

ஏனெனில் ஏற்கனவே அணியில் தவான் மற்றும் ராகுல் ஆகியோரது ஜோடி இருப்பதினால் மூன்றாவது இடத்தில் அவரை களமிறக்கி பரிசோதிக்கலாம். அடுத்து வரவிருக்கும் டி20 உலக கோப்பை மற்றும் 50 உலகக் கோப்பை ஆகியவற்றை கணக்கில் கொண்டு அணியில் சில புதிய முயற்சிகளும் இந்த தொடரில் எடுக்கப்படலாம்.

Kohli

விராட் கோலி மற்றும் ரோகித் சர்மா ஆகிய இருவருக்கு அடுத்து அதிக சதங்கள் அடித்த வீரராக தவான் உள்ளார். நிச்சயம் இந்த தொடரிலும் அவர் அற்புதமான ஆட்டத்தை வெளிப்படுத்துவார். அதே போன்று நீண்ட இடைவெளிக்கு பிறகு அணிக்கு திரும்பி உள்ள ராகுல் குறித்து தற்போது பேசுவதற்கு ஒன்றும் இல்லை. அவரது பார்ம் குறித்து பேச சில நாட்கள் ஆக வேண்டும்.

- Advertisement -

அவர் முழு உடல் தகுதியுடன் இருக்கும் போது நிச்சயம் சிறப்பாக செயல்படுவார் என்று நம்புகிறேன். அதேபோன்று விராட் கோலிக்கு இரண்டு தேர்வுகள் உள்ளன. ஒன்று அவர் நன்றாக ஓய்வு எடுத்துவிட்டு அணிக்கு திரும்ப வேண்டும். இல்லையெனில் தொடர்ந்து விளையாடி சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்த வேண்டும். ஆனால் கடந்த இரண்டு ஆண்டுகளாகவே விராட் கோலி இந்த இரண்டையுமே செய்து ஒரு குழப்பமான மனநிலையில் உள்ளார்.

இதையும் படிங்க : கிங் விராட் கோலியால் உடைக்க முடியாத ஹிட்மேன் ரோஹித் சர்மாவின் 4 சாதனைகளின் பட்டியல் இதோ

இப்படி ஒரு குழப்பமான மனநிலையில் இருக்கும்போது நமக்கு சற்று சரிவு ஏற்படும். ஆனாலும் விராட் கோலியின் பங்களிப்பு என்பது நிச்சயம் இந்திய அணிக்கு தேவை என ராபின் உத்தப்பா கூறியது குறிப்பிடத்தக்கது.

Advertisement