கிங் விராட் கோலியால் உடைக்க முடியாத ஹிட்மேன் ரோஹித் சர்மாவின் 4 சாதனைகளின் பட்டியல் இதோ

Rohith-1
Advertisement

ஜாம்பவான்கள் சச்சின் டெண்டுல்கர், ராகுல் டிராவிட் ஆகியோருக்குப் பின் நவீன கிரிக்கெட்டில் தங்களது அபார திறமையால் உலகத்தரம் வாய்ந்த பவுலர்களையும் எதிர்கொண்டு ஏராளமான வெற்றிகளை பெற்றுக் கொடுத்து வரும் விராட் கோலி மற்றும் ரோஹித் சர்மா ஆகியோர் இந்திய பேட்டிங் துறையின் முதுகெலும்பாக போற்றப்படுகின்றனர். இந்த இருவருமே எதிரணிகளுக்கு சிம்ம சொப்பனமாக பேட்டிங் செய்வதில் தங்களுக்கென்று தனி ஸ்டைலை வைத்துள்ளார்கள் என்றே கூறலாம். இதில் மும்பையைச் சேர்ந்த ரோகித் சர்மா ஆரம்ப காலத்தில் மிடில் ஆர்டரில் களமிறங்கி ஏராளமான வாய்ப்புகளை பெற்ற போதிலும் சுமாராக செயல்பட்டதால் நிலையான இடத்தை பிடிக்க முடியாமல் தடுமாறினார்.

Rohith

இருப்பினும் 2013இல் அப்போதைய கேப்டன் எம்எஸ் தோனி தொடக்க வீரராக களமிறங்க கொடுத்த வாய்ப்பில் அந்நியனாக மாறி எதிரணிகளை பந்தாடிய இவர் அப்போது முதல் உலகத் தரம் வாய்ந்த பேட்ஸ்மேனாக உருவாகி இந்தியாவுக்கு நிறைய வெற்றிகளைப் பெற்றுக் கொடுத்து இன்று கேப்டனாகும் அளவுக்கு உயர்ந்துள்ளார்.

- Advertisement -

அதேபோல் 2019 வரை டெஸ்ட் கிரிக்கெட்டில் சுமாராக செயல்பட்ட இவர் சமீப காலங்களில் நிலையான இடத்தைப் பிடிக்கும் அளவுக்கு வெளிநாடுகளிலும் சதமடித்து தன் மீதான விமர்சனங்களுக்கு முற்றுப்புள்ளி வைத்து டெஸ்ட் கிரிக்கெட்டில் சாதிக்க முடியும் என்று நிரூபித்துள்ளார். மறுபுறம் 2008 ஐசிசி அண்டர்-19 உலக கோப்பையை வென்றதால் 2008இல் அறிமுகமான டெல்லியைச் சேர்ந்த விராட் கோலி ஆரம்ப காலத்தில் தடுமாறினாலும் அதே கேப்டன் தோனியின் அன்பையும் ஆதரவையும் பெற்று 2011 முதல் 3 வகையான அணியிலும் தொடர்ச்சியாக அசத்தலாக செயல்பட்டு வருகிறார்.

4 சாதனைகள்:
சொல்லப்போனால் ஜாம்பவான் சச்சினை போல ரன் மெஷினாக 23000+ ரன்களையும் 70 சதங்களையும் அடித்துள்ள அவர் 2014 முதல் 2021 வரை கேப்டனாகவும் செல்லப்பட்டு இந்திய கிரிக்கெட்டுக்கு நிறைய பங்காற்றி ஏற்கனவே தன்னை ஜாம்பவானாக நிரூபித்துள்ளார். சுருக்கமாக சொல்ல வேண்டுமெனில் இருவருமே சமம் என்றாலும் ரோகித் சர்மாவை விட ஆரம்பம் முதலே தொடர்ச்சியாகவும் 3 வகையான கிரிக்கெட்டிலும் அசத்தி வரும் விராட் கோலி அவரை விட சற்று உயர்ந்தவர் என்றே கூறலாம்.

- Advertisement -

ரோகித் சர்மாவை விட 3 வகையான கிரிக்கெட்டில் கிட்டத்தட்ட 50+ பேட்டிங் சராசரியும் ஐபிஎல் தொடரில் அதிக ரன்கள் அடித்த வீரராகவும் சாதனை படைத்துள்ளதே அதற்கு சிறிய சான்றாகும். இருப்பினும் விராட் கோலியால் எப்போதும் நெருங்கவே முடியாது என்று கூறும் ரோகித் சர்மாவின் சில சாதனைகளைப் பற்றி பார்ப்போம்:

Virat Kohli Rohit Sharma MI vs RCB

4. ஐபிஎல் கோப்பைகள்: ஐபிஎல் கிரிக்கெட்டில் என்னதான் அதிக ரன்கள் மற்றும் சதங்கள் அடித்த வீரராக விராட் கோலி சாதனை படைத்திருந்தாலும் கேப்டனாகவோ அல்லது சாதாரண வீரராகவோ இதுவரை ஒரு கோப்பையை கூட வென்றதில்லை. ஆனால் ரோகித் சர்மா கேப்டனாக மும்பையில் 5 கோப்பைகளையும் டெக்கான் சார்ஜர்ஸ் அணிக்காக ஒரு கோப்பை உட்பட மொத்தம் 6 கோப்பைகளை வென்றுள்ளார்.

- Advertisement -

தற்போது 33 வயதை கடந்து விட்ட விராட் கோலி 40 வயது வரை விளையாடினாலும் ரோகித் சர்மா தொட்ட 6 ஐபிஎல் கோப்பைகளில் பாதியளவு தொடுவதற்கு கூட வாய்ப்புகள் மிகவும் குறைவாகும்.

Rohith

3. உலகக்கோப்பை சதங்கள்: 31 வயதிலேயே 70 சதங்களை விளாசி சச்சின் டெண்டுல்கர், ரிக்கி பாண்டிங் ஆகியோருக்குப் பின் சர்வதேச கிரிக்கெட்டில் ஜாம்பவானாக நிற்கும் விராட் கோலி சச்சினின் 100 சதங்கள் சாதனையை முறியடிப்பார் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இருப்பினும் கடந்த 2019 ஒரே உலகக்கோப்பையில் 5 சதங்கள் விளாசி ஒரு உலகக் கோப்பையில் அதிக சதங்கள் அடித்த பேட்ஸ்மேன் என்ற சங்கக்காராவின் சாதனை தகர்த்த ரோஹித் சர்மா புதிய உலக சாதனை படைத்தார்.

- Advertisement -

பொதுவாக உலகக்கோப்பையில் ஒரு சதமடிப்பதே கடினமானது என்ற நிலையில் 2023இல் தற்போதுள்ள பார்முக்கு விராட் கோலி 5 சதமடிப்பார் என்பது சாத்தியமற்றதாகும். 2027 உலகக் கோப்பையின் போது 37 வயதை கடந்து விடுவார் என்பதால் அப்போதும் அதை நெருங்குவது கடினமான ஒன்றாகவே பார்க்கப்படுகிறது.

Rohith-1

2. அதிக சிக்ஸர்கள்: சச்சின் டெண்டுல்கர், எம்எஸ் தோனி ஆகியோரை முந்தியுள்ள ரோகித் சர்மா சர்வதேச கிரிக்கெட்டில் அதிக சிக்ஸர்கள் அடித்த இந்திய வீரர் மட்டுமல்லாது ஆசிய பேட்ஸ்மேன் என்ற வரலாற்று சாதனையும் படைத்துள்ளார். அந்த வகையில் சிக்சர் அடிப்பதில் கில்லாடியான அவர் அடிக்கும் புல் ஷாட் சிக்ஸர்களுக்கு ஈடு கொடுக்கும் பேட்ஸ்மேன் இந்த உலகிலேயே கிடையாது எனலாம்.

தற்போது 477 சிக்ஸர்களுடன் 2வது இடத்தில் இருக்கும் அவர் முதலிடத்தில் இருக்கும் கெயிலை (553) பிடிப்பதற்கான வாய்ப்புள்ள நிலையில் 22வது இடத்தில் (242) இடத்தில் இருக்கும் விராட் கோலி அவரை நெருங்கக் கூட முடியாது எனலாம். ஏனெனில் விராட் கோலி ஃபீல்டிங் இடைவெளியை பார்த்து பவுண்டரிகளை பறக்கவிட்டு ரன்களை சேர்க்கும் க்ளாஸ் பேட்ஸ்மேனே தவிர ரோகித் சர்மா போல் சிக்ஸர்களை அசால்ட்டாக அடிக்கும் பேட்ஸ்மேன் கிடையாது.

Rohith

1. 264 ரன்கள்: ஒருநாள் கிரிக்கெட்டில் இரட்டை சதம் என்பது குதிரைக் கொம்பாக இருந்த நிலையில் 2010இல் முதல் முறையாக அதை எப்படி சாதிக்க முடியும் என்ற வித்தையை சச்சின் டெண்டுல்கர் உலகிற்கு செய்து காட்டினார். அவரைப் பின்பற்றிய ரோகித் அவரை மிஞ்சும் வகையில் அசால்டாக 3 இரட்டை சதங்களை அடித்து மாபெரும் உலக சாதனை படைத்துள்ளார்.

குறிப்பாக 2014இல் இலங்கைக்கு எதிராக ஒரு அணி அடிக்கவேண்டிய ஸ்கோரை ஒரே ஆளாக 264 ரன்களை விளாசிய அவர் ஒருநாள் கிரிக்கெட்டில் அதிகபட்ச ஸ்கோரை பதிவு செய்து உலக சாதனை படைத்துள்ளார். பொதுவாகவே இரட்டை சதமடிப்பது அரிதாக பார்க்கப்படும் நிலையில் இதற்கு முன் அதிகபட்சமாக 183 ரன்களை குவித்துள்ள விராட் கோலி மட்டுமல்ல இந்த 264 ரன்கள் சாதனையை யாராலும் முறியடிக்க முடியாது என்றே கூறலாம்.

Advertisement