- Advertisement -
இந்திய கிரிக்கெட்

இந்தியாவின் பவுலிங் டெம்ப்ளேட் தப்பா இருக்கு.. அவரை செலக்ட் பண்ணிருக்கனும்.. ஆரோன் ஃபின்ச் பேட்டி

ஐசிசி டி20 உலகக் கோப்பை கிரிக்கெட் தொடருக்கான இந்திய அணி அறிவிக்கப்பட்டுள்ளது. ரோஹித் சர்மா தலைமையிலான அந்த அணியில் விராட் கோலி, சூர்யகுமார் யாதவ், பும்ரா ரவீந்திர ஜடேஜா உள்ளிட்ட நட்சத்திர வீரர்கள் தேர்வாகியுள்ளனர். அதே போல ஜெய்ஸ்வால், சஞ்சு சாம்சன், ரிஷப் பண்ட், சிவம் துபே போன்ற இளம் வீரர்களும் இந்தியாவுக்காக தேர்வு செய்யப்பட்டுள்ளனர்.

இருப்பினும் அந்த அணியில் நடராஜன் போன்ற தமிழ்நாட்டைச் சேர்ந்த ஒரு வீரர் கூட தேர்வு செய்யப்படாதது தமிழக ரசிகர்களுக்கு ஏமாற்றமாக அமைந்துள்ளது. அதே போல இளம் வீரர் ரிங்கு சிங் ரிசர்வ் பட்டியலில் மட்டுமே தேர்வு செய்யப்பட்டுள்ளது பல ரசிகர்கள் மற்றும் முன்னாள் வீரர்களிடையே அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது. ஏனெனில் கடந்த ஐபிஎல் தொடரில் குஜராத்துக்கு எதிரான போட்டியில் கடைசி ஓவரில் 5 சிக்சர்கள் அடித்த அவர் அற்புதமான வெற்றியை பெற்றுக் கொடுத்தார்.

- Advertisement -

தவறான பவுலிங் கூட்டணி:
அதன் காரணமாக இந்தியாவுக்காக அறிமுகமான அவர் தமக்கு கிடைத்த பெரும்பாலான வாய்ப்புகளில் சிறப்பாக செயல்பட்டுள்ளார். அதனால் தோனிக்கு பின் இந்திய அணிக்கு சிறந்த ஃபினிஷர் கிடைத்து விட்டார் என்று அவரை ஏராளமான ரசிகர்களும் சில முன்னாள் வீரர்கள் பாராட்டினர். இருப்பினும் இந்த ஐபிஎல் தொடரில் கொல்கத்தா அணிக்காக பெரிய ரன்கள் அடிக்கவில்லை என்ற ஒரே காரணத்துக்காக ரிங்கு சிங் கழற்றி விடப்பட்டுள்ளார்.

இந்நிலையில் ரிங்கு சிங் தேர்வு செய்யப்படாதது தமக்கு ஆச்சரியமாக இருப்பதாக 2021 டி20 உலகக் கோப்பையை வென்ற முன்னாள் ஆஸ்திரேலிய கேப்டன் ஆரோன் பின்ச் கூறியுள்ளார். அத்துடன் ஒரேடியாக 4 ஸ்பின்னர்களை தேர்வு செய்துள்ள இந்திய அணியில் பும்ராவை தவிர்த்து மற்ற வேகப்பந்து வீச்சாளர்கள் தொடர்ந்து அசத்துவதில்லை என்று பின்ச் தெரிவித்துள்ளார்.

- Advertisement -

எனவே ஒரு எக்ஸ்ட்ரா வேகப்பந்து வீச்சாளர் தேர்வு செய்யப்பட்டிருக்க வேண்டும் என்று தெரிவிக்கும் அவர் இது பற்றி ஸ்டார் ஸ்போர்ட்ஸ் தொலைக்காட்சியில் பேசியது பின்வருமாறு. “4 ஸ்பின்னர்கள் தேர்வு செய்யப்பட்டுள்ளது எனக்கு ஆச்சரியமாகும். நானாக இருந்தால் அங்கே ரிங்குவுடன் 2 ஸ்பின்னர்களை மட்டுமே தேர்ந்தெடுத்திருப்பேன். என்னுடைய ஆரம்பகட்ட தேர்வில் ஒரு எக்ஸ்ட்ரா வேகப்பந்து வீச்சாளரை தேர்ந்தெடுத்திருந்தேன்”

இதையும் படிங்க: அற்புதமான விளையாடுறாரு.. இந்த தமிழ்நாட்டு பையனை செலக்ட் பண்ணிருக்கலாம்.. லெஜெண்ட் கவாஸ்கர் அதிருப்தி

“ஏனெனில் பும்ராவை தவிர்த்து பவர்பிளே ஓவர்களில் யாருமே தொடர்ச்சியாக அசத்துவதில்லை. மேலும் இந்திய அணி 3 ஸ்பின்னர்களை வைத்து விளையாட விரும்பினால் அதில் ஒருவர் பவர் பிளேவில் பந்து வீசுவதற்கு தயாராக இருக்க வேண்டும். இருப்பினும் தற்போது தேர்வு செய்யப்பட்டுள்ள 4 ஸ்பின்னர்கள் அதை யாரும் தொடர்ச்சியாக செய்வதாக எனக்குத் தெரியவில்லை. எனவே இந்திய அணி தங்களுக்குத் தாங்களே ஆதரவு கொடுத்துக் கொள்கிறார்கள் என்று நினைக்கிறேன்” எனக் கூறினார்.

- Advertisement -