கோலி உங்கள சும்மா விட மாட்டேன். மீதி சண்டை பாக்கி இருக்கு – நேரடியாக கோலிக்கு சவால் விட்ட வெஸ்ட் இண்டீஸ் வீரர்

- Advertisement -

சமீபத்தில் வெஸ்ட் இண்டீஸ் அணி இந்தியாவில் சுற்றுப்பயணம் செய்து 3 போட்டிகள் கொண்ட டி20 தொடரில் விளையாடியது. இந்த தொடர் வழக்கத்திற்கு மாறாக இரு அணிகளும் ஆக்ரோஷமாக மோதி கொள்ளும் வகையில் இருந்தது. குறிப்பாக இந்திய கேப்டன் விராட் கோலியை வேண்டும் என்று வெஸ்ட் இண்டீஸ் அணியின் பந்துவீச்சாளர் கேசரிக் வில்லியம்ஸ் சீண்டிக் கொண்டே இருந்தார்.

williams-1

- Advertisement -

இந்த தொடரின் முதல் போட்டியில் இந்திய கேப்டன் விராட் கோலி 94 ரன்கள் அடித்து அசத்தினார் . இதன் மூலம் இந்திய அணி இந்தப் போட்டியை வெற்றி பெற்றது. அதே போட்டியில் அந்த அணியின் பந்துவீச்சாளர் கேசரிக் வில்லியம்ஸ் அவரின் பந்தில் சிக்சர் விளாசினார் . சிக்சர் அடித்துவிட்டு எப்போதும்போல் பதிலடி கொடுத்த வண்ணம் அல்லாமல் பந்துவீச்சாளரின் பாணியிலே அவரது நோட்புக் செலிபிரேஷனை செய்து இருந்தார் விராட் கோலி.

ஏனெனில் 2017 ஆம் ஆண்டு இந்திய அணி வெஸ்ட் இண்டீஸ் அணிகள் விளையாடிய போது ஜமைக்காவில் நடந்த டி20 போட்டி ஒன்றில் விராட் கோலியை வீழ்த்தினார் வில்லியம்ஸ். விக்கெட் எடுத்துவிட்டு அவரை சீண்டும் விதமாக ‘நோட்புக் செலிபிரேசனை’ வெளிப்படுத்தினார் இதனை ஞாபகம் வைத்திருந்த விராட் கோலி இந்தியாவிற்கு வந்த பின்னர் அவரது பந்தை சிக்சர் விளாச விட்டு தனது பாணியில் பதிலடி கொடுத்தார்.

Kohli

இதனால் கடுப்பான வில்லியம்ஸ் இரண்டாவது போட்டியில் விராட் கோலியின் விக்கெட்டை கைப்பற்றி விட்டு வாயை மூடிக்கொண்டு இருக்க வேண்டும் என்று தனது வாயில் விரல் வைத்து மீண்டும் சீண்டினார். இந்நிலையில் மீண்டும் தான் அடுத்த போட்டிக்கு தயாராக உள்ளதாக பந்துவீச்சாளர் வில்லியம்ஸ் தெரிவித்துள்ளார். இதுகுறித்து அவர் கூறுகையில் :

- Advertisement -

இந்த வகையான செலிப்ரேஷன் மூலம் நான் முதன்முதலில் விக்கெட் எடுத்த வெளியேற்றியவர் விராட் கோலிதான். ரசிகர்களுக்காக அதனை செய்தேன். அது எனக்கு மிகவும் பிடித்து இருந்தது. ஆனால் விராட் கோலி இதனை அப்படிப் பார்க்கவில்லை. அதன் பின்னர் அந்த போட்டிக்குப் பின்னர் விராட் கோலியுடன் கை குலுக்கினேன். அப்போது பந்துவீச்சு நன்றாக உள்ளது, ஆனால் உங்களது கொண்டாட்டம் சரியில்லை என்று கூறினார் விராட் கோலி.

kohli 3

அதனை மனதில் வைத்து எனக்கு இந்தியா வந்த பின்னர் பதிலடி கொடுத்தார் விராட். இதனால் நானும் மீண்டும் அவருக்கு கொடுக்க வேண்டியதை கொடுத்தேன். இதனால் அடுத்த நாள் இந்தியாவின் தலைப்புச் செய்தியாக மாறினேன் இந்த சவாலுக்கு நான் தற்போதும் தயாராக இருக்கிறேன் என்று கூறியுள்ளார் வில்லியம்ஸ்.

ஏற்கனவே தனக்கு எதிராக ஆவேசம் காட்டும் பவுலர்களை தனது பேட்டியின் மூலம் பதிலடி கொடுக்கும் கோலி நிறைய பந்துவீச்சாளர்களை இதேபோன்று சொல்லி சொல்லி அடித்திருக்கிறார். வழக்கமாக விராட் கோலியுடன் பந்துவீச்சாளர்கள் சீண்டுவது இது முதல் முறை கிடையாது. கோலிக்கு எதிரான இந்த செயலில் புதிதாக எந்த விஷயம் கிடையாது. இருப்பினும் அவ்வாறு பந்துவீச்சாளர்கள் சீண்டும் போது சற்று ஆக்ரோஷம் அதிகமாகி ஆட்டம் இழந்து விடுவார் என்ற காரணத்தினாலேயே பந்துவீச்சாளர்கள் அவரை சீண்டுகிறார்கள்.

Kohli-1

இருப்பினும் பலமுறை கோலி தனது பேட்டிங் மட்டுமே அவர்களுக்கு பதில் அளித்து வென்றுள்ளார். சிறப்பான பந்து வீச்சாளர்கள் பலரை தனது கிரிக்கெட் வாழ்வில் அடித்து நொறுக்கி உள்ள கோலி இவரையும் விட்டு வைக்க போவதில்லை. அடுத்து வரும் வெஸ்ட் இண்டீஸ் தொடரில் இவர்கள் இருவரும் நேருக்கு நேர் மோதிக் கொண்டால் பல சுவாரசியமான விடயங்கள் நடைபெறும் என்பது மட்டும் உண்மை. அது மட்டுமின்றி கோலி நிச்சயம் தனது அபாரமான பேட்டிங் மூலம் அவருக்கு மீண்டும் ஒருமுறை பாடம் கற்பிப்பார் என்று எதிர்பார்க்கலாம்.

Advertisement