- Advertisement -
உலக கிரிக்கெட்

ஜடேஜா சதத்தை தவறவிட்டாலும் அவர் சதம் அடித்ததாகவே கணக்கில் கொள்ளப்படும். என்ன புரியலையா ? – விவரம் இதோ

இந்தியா மற்றும் தென் ஆப்பிரிக்கா அணிகளுக்கு இடையேயான இரண்டாவது டெஸ்ட் போட்டி புனே மைதானத்தில் நடைபெற்று வருகிறது. இந்த போட்டியில் இந்திய அணி தனது முதல் இன்னிங்சில் 601 ரன்கள் எடுத்து டிக்ளேர் செய்ய அடுத்து விளையாடிய தென்ஆப்பிரிக்கா அணி நேற்று இரண்டாம் நாள் ஆட்ட நேர முடிவில் 3 விக்கெட்டுகளை இழந்து 36 ரன்கள் எடுத்து தத்தளித்து வருகிறது.

நேற்றைய போட்டியில் இந்திய அணியின் கேப்டன் கோலியும், ஜடேஜாவும் தங்களது அசாத்தியமான பேட்டிங் மூலம் இந்திய அணியை சிறப்பான நிலைக்குக் கொண்டு சென்றனர். மேலும் ஜடேஜா சதம் அடிக்கும் வரை காத்திருந்த கோலி இடையில் ஜடேஜா 91 ரன்களில் ஆட்டமிழந்தபோது இந்திய அணி டிக்ளேர் செய்வதாக அறிவித்தார்.

- Advertisement -

மேலும் இந்த போட்டியில் ஜடேஜா சதத்தை அடிக்க தவறி இருந்தாலும் அவரை அவுட்டாக்கிய மகாராஜ் சதம் அடித்ததாக கணக்கில் கொள்ளப்பட்டுள்ளது. ஏனெனில் நேற்றைய போட்டியில் 50 ஓவர்கள் வீசி 196 ரன்கள் கொடுத்து ஒரு விக்கெட் வீழ்த்திய மஹாராஜ் டெஸ்ட் போட்டிகளில் தனது நூறாவது விக்கெட்டாக ஜடேஜாவை வீழ்த்தி சதம் அடித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

இதுவரை 26 டெஸ்ட் போட்டிகளில் விளையாடியுள்ள மகாராஜ் தற்போது நூறாவது விக்கெட்டாக ஜடேஜா வீழ்த்தியுள்ளது குறிப்பிடத்தக்கது. மேலும் நேற்றைய போட்டியில் நிறைய ஓவர்கள் வீசியதால் அவர் காயமைடைந்து வெளியேறியது குறிப்பிடத்தக்கது.

- Advertisement -
Published by