- Advertisement -
இந்திய கிரிக்கெட்

தினேஷ் கார்த்திகை விடுங்க.. அவங்க 2 பேர் என்ன பண்ணாங்க.. பி.சி.சி.ஐ செய்த தவறு – ரசிகர்கள் வருத்தம்

இந்தியாவில் நடைபெற்று வரும் நடப்பு 17-வது ஐபிஎல் கிரிக்கெட் தொடரானது தற்போது இறுதி கட்டத்தை எட்டியுள்ள வேளையில் அடுத்ததாக வெஸ்ட் இண்டீஸ் மற்றும் அமெரிக்கா நாடுகளில் நடைபெற இருக்கும் டி20 உலக கோப்பை தொடரானது ரசிகர்கள் மத்தியில் மிகப்பெரிய கவனத்தை ஈர்த்துள்ளது. மொத்தம் 20 அணிகள் பங்கேற்க உள்ள இந்த தொடரில் கடைசிவரை சென்று கோப்பையை கைப்பற்றி சாம்பியன் பட்டத்தை வெல்லப்போகும் அணி எது? என்பது குறித்த எதிர்பார்ப்பும் ரசிகர்கள் மத்தியில் அதிகரித்துள்ளது.

சர்வதேச கிரிக்கெட் கவுன்சிலான ஐசிசி இந்த டி20 உலகக் கோப்பை தொடரில் பங்கேற்கும் அனைத்து அணிகளும் தங்களது அணிகளின் 15 பேர் கொண்ட வீரர்களின் பட்டியலை வெளியிட மே-1ஆம் தேதியோடு கடைசி கெடு விதித்துள்ளது. இதன் காரணமாக தற்போது அனைத்து நாடுகளை சேர்ந்த கிரிக்கெட் நிர்வாகங்களும் தங்களது அணியின் வீரர்களை அறிவித்து வருகின்றன.

- Advertisement -

அந்த வகையில் இந்திய கிரிக்கெட் நிர்வாகமான பிசிசிஐ-யையும் இந்த டி20 உலக கோப்பை தொடருக்கான 15 பேர் கொண்ட இந்திய அணியை இன்று அறிவித்தது. அதில் ரோகித் சர்மா தலைமையிலான 15 பேர் கொண்ட அணியில் விராட் கோலி, ரிஷப் பண்ட், ஷிவம் துபே, சூரியகுமார் யாதவ், சஞ்சு சாம்சன், பும்ரா போன்ற முன்னணி வீரர்களுக்கு வாய்ப்பு வழங்கப்பட்டதோடு சில வீரர்களுக்கு வாய்ப்பு மறுக்கப்பட்டும் உள்ளது.

அந்த வகையில் இந்த டி20 உலக கோப்பை தொடருக்கான இந்திய அணியில் ஒரு தமிழக வீரருக்கு கூட வாய்ப்பு கிடைக்காதது ரசிகர்கள் மத்தியில் ஏமாற்றத்தை அளித்துள்ளது. அந்த வகையில் இந்தியாவில் நடைபெற்று வரும் நடப்பு ஐபிஎல் தொடரில் மிகச் சிறப்பான செயல்பாட்டை வெளிப்படுத்தி வரும் தமிழக வீரரான தினேஷ் கார்த்திக் தற்போது 38 வயதில் இருந்தாலும் ஆர்சிபி அணிக்காக பின் வரிசையில் களமிறங்கி 10 போட்டிகளில் 262 ரன்கள் குவித்து இருந்தாலும் அவரது பெயர் இடம் பெறவில்லை.

- Advertisement -

தினேஷ் கார்த்திக் வயதில் மூத்தவர் என்பதனால் அவரது நிராகரிப்பு அனைவரது மத்தியிலும் ஏற்றுக்கொள்ளப்படப்பட்ட ஒரு விடயமாக மாறியுள்ளது. ஆனாலும் இந்த ஐபிஎல் தொடரில் அதிக ரன்கள் அடித்தவர்களின் பட்டியலில் விராட் கோலிக்கு அடுத்து சாய் சுதர்சன் 418 ரன்களுடன் மூன்றாவது இடத்தில் இருக்கும் வேளையில் அவருக்கு வாய்ப்பு மறுக்கப்பட்டுள்ளது பெரிய பேசுபொருளாக மாறி உள்ளது.

இதையும் படிங்க : லக்னோவிடம் 27/4 என திணறிய மும்பை.. 2009 முதல் பிறந்தநாளில் ஓடாத ஹிட்மேன் ரோஹித் வண்டி.. பரிதாபமான ரெக்கார்ட்

அதேபோன்று தமிழக வீரராக நடராஜன் சன்ரைசர்ஸ் அணிக்காக இதுவரை 7 போட்டிகளில் விளையாடி 13 விக்கெட்டுகளை வீழ்த்தி நல்ல பார்மில் இருக்கும் வேளையில் அவரது பெயரும் டி20 உலக கோப்பை அணியில் நிராகரிக்கப்பட்டுள்ளது ரசிகர்கள் மத்தியில் ஏமாற்றத்தை அளித்துள்ளது. தினேஷ் கார்த்திக் வயது மூப்பு என்கிற காரணத்தினால் நிராகரிக்கப்பட்டு இருந்தாலும் சாய் சுதர்சன் மற்றும் நடராஜன் ஆகியவர்களின் நிராகரிப்பு ரசிகர்கள் மத்தியில் பெரும் ஏமாற்றத்தை தந்துள்ளது குறிப்பிடத்தக்கது.

- Advertisement -