- Advertisement -
ஐ.பி.எல்

145 ரன்ஸ்.. லக்னோவிடம் தோற்ற மும்பை.. ஆர்சிபி’க்கு கம்பெனி கொடுக்க வந்த பரிதாபம்.. பிளே ஆஃப் முடிந்த்தா?

ஐபிஎல் 2024 டி20 கிரிக்கெட் தொடரில் ஏப்ரல் 30ஆம் தேதி இரவு 7.30 மணிக்கு லக்னோவில் 48வது லீக் போட்டி நடைபெற்றது. அதில் மும்பைக்கு எதிராக டாஸ் வென்ற லக்னோ முதலில் வந்து விடுவதாக அறிவித்தது. அதைத் தொடர்ந்து களமிறங்கிய மும்பைக்கு ரோஹித் சர்மா 4 (5) ரன்களில் அவுட்டாகி ஏமாற்றத்தை கொடுத்த நிலையில் அடுத்ததாக வந்த சூரியகுமார் யாதவ் 10 ரன்னில் அவுட்டானார்.

அப்போது வந்த திலக் வர்மா 7 (11) ரன்களில் ரன் அவுட்டாகி ஏமாற்றத்தைக் கொடுத்த நிலையில் அதற்கடுத்ததாக வந்த கேப்டன் ஹர்டிக் பாண்டியா கோல்டன் டக் அவுட்டாகி மிகப்பெரிய பின்னடைவை ஏற்படுத்தினார். அதனால் 27/4 என சரிவை சந்தித்த மும்பைக்கு மற்றொரு துவக்க வீரர் இசான் கிசான் அடுத்ததாக வந்த நேஹல் வதேராவுடன் ஜோடி சேர்ந்து நிதானமாக விளையாடினார்.

- Advertisement -

ஆர்சிபி’க்கு கம்பெனி:
அந்த வகையில் 14 ஓவர்கள் வரை நிலைத்து நின்று 5வது விக்கெட்டுக்கு 53 ரன்கள் பாரினர்ஷிப் அமைத்து ஓரளவு மும்பையை காப்பாற்றிய இந்த ஜோடியில் இசான் கிசான் 32 (36) ரன்களில் ஆட்டமிழந்தார். இருப்பினும் மறுபுறம் நிதானம் கலந்த அதிரடியை வெளிப்படுத்திய நேஹல் வதேரா 46 (41) ரன்களில் அவுட்டானார். இறுதியில் டிம் டேவிட் 35* (18) ரன்கள் எடுத்ததால் ஓரளவு தப்பிய மும்பை 20 ஓவரில் 144/7 ரன்கள் எடுத்தது.

பந்து வீச்சில் அசத்திய லக்னோ சார்பில் அதிகபட்சமாக மோசின் கான் 2 விக்கெட்டுகள் எடுத்தார் அதைத்தொடர்ந்து 145 என்ற சுலபமான இலக்கை துரத்திய லக்னோவுக்கு முதல் ஓவரிலேயே துசாரா வேகத்தில் குல்கரனி கோல்டன் டக் அவுட்டானார். அதே போல மறுபுறம் அதிரடியாக விளையாட முயற்சித்த கேப்டன் கேஎல் ராகுல் 28 (22) ரன்களில் பாண்டியா வேகத்தில் நடையை கட்டினார். இருப்பினும் அடுத்ததாக வந்த மார்கஸ் ஸ்டோய்னிஸ் அதிரடியான ரன் குவிப்பில் ஈடுபட்டார்.

- Advertisement -

ஆனால் எதிர்ப்புறம் தடுமாற்றமாக விளையாடிய தீபக் ஹூடா 18 (18) ரன்களில் பாண்டியா வேகத்தில் ஆட்டமிழந்தார். இந்த பக்கம் தொடர்ந்து அசத்தலாக விளையாடிய மார்கஸ் ஸ்டோய்னிஸ் அரை சதமடித்து 62 (45) ரன்கள் குவித்து கிட்டத்தட்ட வெற்றியை உறுதி செய்து அவுட்டானார். இறுதியில் நிக்கோலஸ் பூரான் 14* (14) ரன்கள் எடுத்ததால் 19.2 ஓவரில் 145/6 ரன்கள் எடுத்த லக்னோ 4 விக்கெட் வித்தியாசத்தில் வென்றது.

அதனால் 10 போட்டிகளில் 5வது வெற்றியை பதிவு செய்த லக்னோ புள்ளி பட்டியலில் 5வது இடத்திற்கு முன்னேறியது. மறுபுறம் பேட்டிங்கில் 150 ரன்கள் கூட எடுக்காமல் பந்து வீச்சில் போராடிய மும்பைக்கு அதிகபட்சமாக கேப்டன் ஹர்திக் பாண்டியா 2 விக்கெட்டுகள் எடுத்தும் தோல்வியை தவிர்க்க முடியவில்லை. இதையும் சேர்த்து 10 போட்டிகளில் 7வது தோல்வியை பதிவு செய்த மும்பை புள்ளிப்பட்டியலில் தொடர்ந்து 9வது இடத்தில் திணறுகிறது.

இதையும் படிங்க: லக்னோவிடம் 27/4 என திணறிய மும்பை.. 2009 முதல் பிறந்தநாளில் ஓடாத ஹிட்மேன் ரோஹித் வண்டி.. பரிதாபமான ரெக்கார்ட்

குறிப்பாக அதே 10 போட்டிகளில் 7 தோல்விகளை பதிவு செய்து கடைசி இடத்தில் இருக்கும் பெங்களூரு அணிக்கு கம்பெனி கொடுக்கும் வகையில் மும்பை தடுமாறுகிறது. அதனால் பெங்களூரு அணியை போலவே அடுத்த 4 போட்டிகளில் வென்றாலும் மும்பை அணியின் பிளே ஆஃப் கனவும் 50% பறிப்போயுள்ளது என்று சொல்லலாம்.

- Advertisement -