
வெஸ்ட் இண்டீஸ்க்கு எதிராக நடைபெற்ற 2வது டெஸ்ட் போட்டியில் தென் ஆப்பிரிக்கா 40 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. ஆகஸ்ட் 15ஆம் தேதி கயானா நகரில் துவங்கிய அந்தப் போட்டியில் முதலில் பேட்டிங் செய்த தென் ஆப்பிரிக்கா 160 ரன்கள் குவித்தது. அதிகபட்சமாக டேன் பியேட் 38*, நன்ரே பர்கர் 23 ரன்கள் எடுத்த நிலையில் வெஸ்ட் இண்டீஸ் சார்பில் அதிகபட்சமாக சமர் ஜோசப் 5 விக்கெட்டுகள் எடுத்தார்.
அதைத்தொடர்ந்து களமிறங்கிய வெஸ்ட் இண்டீஸ் சுமாராக விளையாட விளையாடி 144 ரன்களுக்கு ஆல் அவுட்டானது. அதிகபட்சமாக ஜேசன் ஹோல்டர் 54* ரன்கள் எடுத்த நிலையில் தென் ஆப்பிரிக்கா சார்பில் அதிகபட்சமாக வியான் முல்தர் 4 விக்கெட்டுகளை எடுத்தார். அதன் பின் 16 ரன்கள் முன்னிலையுடன் களமிறங்கிய தென்னாப்பிரிக்கா 246 ரன்கள் குவித்தது.
ஆல் டைம் சாதனை:
அதிகபட்சமாக கெய்ல் வேர்ரின் 59, ஐடன் மார்க்ரம் 51 ரன்கள் எடுத்த நிலையில் வெஸ்ட் இண்டீஸ் சார்பில் அதிகபட்சமாக ஜெய்டேன் சீல்ஸ் 6 விக்கெட்டுகளை வீழ்த்தினார். இறுதியில் 263 ரன்களை துரத்திய வெஸ்ட் இண்டீஸ் சுமாரான ஆட்டத்தை வெளிப்படுத்தி 222 ரன்களுக்கு ஆல் அவுட்டாகி தோல்வியை சந்தித்தது. அதிகபட்சமாக குடகேஷ் மோட்டி 45 ரன்கள் எடுத்த நிலையில் தென்னாப்பிரிக்கா சார்பில் அதிகபட்சமாக ரபாடா மற்றும் கேசவ் மகாராஜ் தலா 3 விக்கெட்டுகள் எடுத்தனர்.
அதனால் 1 – 0 (2) என்ற கணக்கில் இத்தொடரை தென்னாப்பிரிக்கா வென்றது. இந்த வெற்றிக்கு அதிகபட்சமாக 13 விக்கெட்டுகள் எடுத்து முக்கிய பங்காற்றிய கேசவ் மகாராஜ் தொடர் நாயகன் விருதை தட்டிச் சென்றார். இடது கை சுழல் பந்து வீச்சாளரான அவர் இதுவரை தம்முடைய கேரியரில் 52 போட்டிகளில் 171* விக்கெட்டுகள் எடுத்துள்ளார்.
இதன் வாயிலாக டெஸ்ட் கிரிக்கெட்டில் தென்னாபிரிக்க அணிக்காக அதிக விக்கெட்டுகள் எடுத்த சுழல் பந்து வீச்சாளர் என்ற மாபெரும் சாதனையை கேசவ மகாராஜ் படைத்துள்ளார். இதற்கு முன் கடந்த 1949 – 1960 வரையிலான காலகட்டங்களில் தென் ஆப்பிரிக்க அணிக்காக விளையாடிய வலது கை சுழல் பந்து வீச்சாளர் ஹுக் ஃடைபீல்ட் 37 போட்டிகளில் 170 விக்கெட்டுகள் எடுத்ததே முந்தைய சாதனையாகும்.
இதையும் படிங்க: இது லிஸ்ட்லயே இல்லையே.. 16 வருட பயணத்துக்காக விராட் கோலியை ஸ்பெஷல் வார்த்தையுடன் வாழ்த்திய ஜெய் ஷா
தற்போது அவருடைய 64 வருட சாதனையை கேசவ் மகாராஜா உடைத்து தென்னாபிரிக்க கிரிக்கெட் அணியின் புதிய ஆல் டைம் சிறந்த ஸ்பின்னராக சாதனை படைத்துள்ளார். பொதுவாக தென்னாபிரிக்க அணியில் வேகப்பந்து வீச்சாளர்கள் தான் அதிகமாக விக்கெட்டுகளை எடுப்பார்கள். ஆனால் அவர்களுக்கு மத்தியில் தன்னுடைய திறமையால் கேசவ் மகாராஜா உயர்ந்து நிற்பது குறிப்பிடத்தக்கது.