டெஸ்ட் சாம்பியன்ஷிப் பைனலில் சான்ஸ் கிடைக்க அந்த எக்ஸ்ட்ரா வேலை செய்ய தயாரா? கேஎல் ராகுலுக்கு டிகே முக்கிய அட்வைஸ்

Dinesh-Karthik-and-KL-Rahul
- Advertisement -

2023 உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் கோப்பை இறுதி போட்டிக்கு ஐசிசி தரவரிசையில் உலகின் டாப் 2 இடங்களில் இருக்கும் ஆஸ்திரேலியா மற்றும் இந்திய அணிகள் அதிகாரப்பூர்வமாக தகுதி பெற்றுள்ளன. இதைத் தொடர்ந்து வரும் ஜூன் 7 முதல் 11ஆம் தேதி வரை லண்டனில் இருக்கும் ஓவல் கிரிக்கெட் மைதானத்தில் நடைபெறும் டெஸ்ட் சாம்பியன்ஷிப் பைனலில் ஆஸ்திரேலியாவை வீழ்த்தி கடந்த முறை கோட்டை விட்ட கோப்பையை இம்முறை முத்தமிட இந்தியா தயாராக உள்ளது. பொதுவாக இங்கிலாந்தில் ஈரப்பதமான சூழ்நிலை நிலவும் என்பதால் வேகத்துக்கு நிகராக பந்து ஸ்விங் ஆகி சுழலுக்கு எதிராக விளையாட பழகிய ஆசிய கண்டத்தின் பேட்ஸ்மேன்களுக்கு மிகப்பெரிய சவாலை கொடுக்கும்.

KS Bharat 1

- Advertisement -

அந்த நிலைமையில் அது போன்ற சூழ்நிலைகளிலும் அசத்தக்கூடிய ரிஷப் பண்ட் இந்திய அணியில் காயத்தால் வெளியேறியுள்ளது பின்னடைவை ஏற்படுத்தியுள்ளது. மறுபுறம் அவருக்கு பதிலாக வாய்ப்பு பெற்ற கேஎஸ் பரத் பிறந்து வளர்ந்து விளையாட பழகிய இந்திய ஆடுகளங்களிலேயே ஆஸ்திரேலியாவுக்கு எதிராக நடைபெற்ற பார்டர் – கவாஸ்கர் கோப்பை தொடரில் ஒரு அரை சதம் கூட அடிக்காமல் சுமாராகவே செயல்பட்டார். அப்படிப்பட்ட நிலையில் இதற்கு முன் இங்கிலாந்தில் விளையாடிய அனுபவமில்லாத அவர் நிச்சயமாக அங்குள்ள ஸ்விங் சூழ்நிலைகளில் தாக்குபிடித்து அசத்துவார் என்று உறுதியாக சொல்ல முடியாது.

டிகே கோரிக்கை:
அந்த நிலையில் கேஎல் ராகுல் இதற்கு முன் இங்கிலாந்து மண்ணில் விளையாடி 2 சதங்களை அடித்துள்ளார். குறிப்பாக 2021ஆம் ஆண்டு லண்டன் லார்ட்ஸ் மைதானத்தில் நடைபெற்ற போட்டியில் தொடக்க வீரராக சதமடித்து இந்தியாவை வெற்றி பெற வைத்து ஆட்டநாயகன் விருது வென்ற அவர் 2018 சுற்றுப்பயணத்தில் தற்போது டெஸ்ட் சாம்பியன்ஷிப் ஃபைனல் நடைபெற போகும் இதே லண்டன் ஓவல் மைதானத்தில் மிடில் ஆர்டரில் களமிறங்கி சதமடித்து 149 ரன்கள் குவித்து அசத்தினார். எனவே அவர் ஃபைனலில் விளையாடுவதற்கு தகுதியுடையவர் என்றாலும் தற்சமயத்தில் சுமாரான பார்மில் இருப்பது வாய்ப்பு கொடுப்பதற்கு யோசிக்க வைக்கிறது.

KL-Rahul-and-GIll

இந்நிலையில் ஒருநாள் அணியை போல டெஸ்ட் அணியிலும் விக்கெட் கீப்பராக செயல்பட்டால் டெஸ்ட் சாம்பியன்ஷிப் ஃபைனலில் விளையாடுவதற்கு கேஎல் ராகுல் தகுதியானவர் என்று தினேஷ் கார்த்திக் கூறியுள்ளார். எனவே ஃபைனலில் விளையாட விரும்பினால் விக்கெட் கீப்பிங் செய்யும் எக்ஸ்ட்ரா வேலையை கேஎல் ராகுல் செய்யும் பட்சத்தில் அவருக்கு ஏற்கனவே ஆதரவாக உள்ள இந்திய அணி நிர்வாகம் நிச்சயமாக வாய்ப்பு கொடுக்கும் என்று தெரிவிக்கும் தினேஷ் கார்த்திக் இது பற்றி சமீபத்திய பேட்டியில் பேசியது பின்வருமாறு.

- Advertisement -

“கேஎல் ராகுல் இதை எவ்வாறு உணர்வார் என்பதை நான் பார்க்க விரும்புகிறேன். ஏனெனில் அவரைப் போன்றவர் டெஸ்ட் கிரிக்கெட்டில் விக்கெட் கீப்பிங் செய்வதை மகிழ்ச்சியுடன் விரும்ப மாட்டார். ஏனெனில் அது முற்றிலும் மாறுபட்ட விளையாட்டு. ஆனால் அது என்னுடைய மனதில் தோன்றுகிறது. அதாவது கேஎல் ராகுல் விக்கெட் கீப்பிங் செய்தால் டெஸ்ட் சாம்பியன்ஷிப் பைனலில் மிகவும் பயனுள்ளவராக இருப்பார். அதே சமயம் தொடக்க வீரராக சுப்மன் கில் விளையாட வேண்டும் என்பதில் எனக்கு எந்த சந்தேகமும் இல்லை. டெஸ்ட் சாம்பியன்ஷிப் பைனலுக்கு முந்தைய போட்டியில் அவர் தற்போது சதமடித்துள்ளார்”

“எனவே அவர் நீண்ட காலம் விளையாடுவார் என்ற உணர்வு உங்களுக்கு தோன்றுகிறது. அவர் நீண்ட தூரம் ஓடக்கூடிய குதிரை. குறிப்பாக 2033ஆம் ஆண்டு கூட நீங்கள் இந்தியாவுக்காக அவர் தொடக்க வீரராக விளையாட வேண்டும் என்று சொல்வீர்கள்” என கூறினார்.

இதையும் படிங்க:இனியாவது காயத்தை தவிர்க்க அதை பும்ரா செய்யணும், அவரது இடத்தில் இளம் சூப்பர் ஸ்டாருக்கு சான்ஸ் கொடுங்க – பிரட் லீ

அதாவது தற்போது உச்சகட்ட பார்மில் இருக்கும் சுப்மன் கில் தொடர்ந்து ஓப்பனிங் இடத்தில் விளையாட வேண்டும் என்று தெரிவிக்கும் தினேஷ் கார்த்திக் ரிசப் பண்ட் இல்லாத காரணத்தால் மிடில் ஆர்டரில் கேஎல் ராகுல் விளையாடினால் கச்சிதமாக இருக்கும் என்று கூறியுள்ளார். ஆனால் அதற்கு 5 நாட்கள் விக்கெட் கீப்பிங் செய்யும் கடினமான வேலையை ராகுல் செய்ய தயாராக இருக்க வேண்டும் எனவும் கூறியுள்ளார்.

Advertisement