இனியாவது காயத்தை தவிர்க்க அதை பும்ரா செய்யணும், அவரது இடத்தில் இளம் சூப்பர் ஸ்டாருக்கு சான்ஸ் கொடுங்க – பிரட் லீ

Brett Lee
Advertisement

இந்தியாவின் நம்பிக்கை நட்சத்திர வேகப்பந்து வீச்சாளர் ஜஸ்பிரித் பும்ரா தற்சமயத்தில் மிகப்பெரிய காயத்தை சந்தித்து அவதிப்பட்டு வருவது அவருக்கும் இந்திய கிரிக்கெட் அணிக்கும் பெரிய பின்னடைவாக இருந்து வருகிறது. கடந்த 2016ஆம் ஆண்டு அறிமுகமாகி 2018 முதல் 3 வகையான கிரிக்கெட்டிலும் தன்னுடைய வித்தியாசமான பவுலிங் ஆக்சனால் எதிரணி பேட்ஸ்மேன்களை திணறடித்து நிறைய விக்கெட்டுகளை எடுத்து வெற்றிகளை பெற்றுக் கொடுக்க துவங்கிய அவர் குறுகிய காலத்திலேயே இந்தியாவின் முதன்மை வேகப்பந்து வீச்சாளராக உருவெடுத்தார். குறிப்பாக டி20 கிரிக்கெட்டில் பவர் பிளே முதல் டெத் ஓவர்கள் வரை அனைத்து நேரங்களிலும் யார்க்கர் போன்ற பந்துகளை வீசி வெற்றிகளை கொடுக்கும் கருப்பு குதிரையாக உருவெடுத்த அவர் 2022 இங்கிலாந்து சுற்றுப்பயணத்தில் காயமடைந்து வெளியேறினார்.

Bumrah

அதிலிருந்து குணமடைந்து வந்தாலும் மீண்டும் காயைமடைந்து வெளியேறிய அவர் இல்லாதது 2022 ஆசிய மற்றும் டி20 உலகக் கோப்பை இந்தியாவின் தோல்விக்கு முக்கிய காரணமாக அமைந்தது. அதைத்தொடர்ந்து கடந்த ஜனவரியில் இலங்கைக்கு எதிராக நடைபெற்ற ஒருநாள் தொடரில் குணமடைந்ததாக அறிவித்த பிசிசிஐ அவசரமாக களமிறங்கி மீண்டும் காயமடைந்து விடக்கூடாது என்பதற்காக பும்ரா விலகுவதாக அடுத்த நாளே அறிவித்தது. அந்த நிலையில் பார்டர் – கவாஸ்கர் கோப்பை தொடரில் விளையாடுவார் என்று எதிர்பார்க்கப்பட்ட அவர் இன்னும் முழுமையாக குணமடையாததால் 2023 ஐபிஎல் மற்றும் டெஸ்ட் சாம்பியன்ஷிப் ஃபைனலில் விளையாட மாட்டார் என்ற அறிவிப்புகள் வெளியாகியுள்ளது.

- Advertisement -

பிரட் லீ அறிவுரை:
அதனால் 2023 உலகக்கோப்பையில் விளையாடுவார் என்று எதிர்பார்க்கப்படும் அவர் விரைவில் குணமடைய வேண்டும் என்பதே பெரும்பாலான ரசிகர்களின் எதிர்பார்ப்பாக உள்ளது. இந்நிலையில் மிகவும் குறைவான தூரம் ஓடி வந்து முதுகு பகுதியில் அதிகப்படியான அழுத்தத்தை ஏற்படுத்தும் வகையில் வித்தியாசமாக பந்து வீசுவதே பும்ராவின் இந்த அடுத்தடுத்த பெரிய காயங்களுக்கு முக்கிய காரணமென்று சர்வதேச கிரிக்கெட்டில் நீண்ட காலம் வெற்றிகரமாக செயல்பட்ட முன்னாள் ஆஸ்திரேலிய ஜாம்பவான் வேகப்பந்து வீச்சாளர் பிரெட்லீ கூறியுள்ளார்.

Umran Malik

இதை தவிர்த்து நீண்ட காலம் விளையாடுவதற்கு தன்னுடைய ஓட்டத்தில் (ரன் அப்) சில நடைகளை அதிகரிக்க வேண்டுமென அவர் பும்ராவுக்கு ஆலோசனை தெரிவித்துள்ளார். அத்துடன் அவரது இடத்தில் இந்திய டெஸ்ட் அணியில் 150 கி.மீ வேகத்தால் ஏற்கனவே அசத்தி வரும் உம்ரான் மாலிக் விளையாட தகுதியானவர் என தெரிவிக்கும் அவர் இது பற்றி சமீபத்திய பேட்டியில் பேசியது பின்வருமாறு. “இது பலவீனமடைய வைக்கும் என்று நான் சொல்ல மாட்டேன். மாறாக இது அதில் தப்பிப்பதற்கான ஒரு ஓட்டையை ஏற்படுத்தும் என்று சொல்வேன். மேலும் அவர் சிறந்தவர் என்பதால் இதை ஒரு பாராட்டாக சொல்கிறேன்”

- Advertisement -

“பும்ரா ஏற்கனவே அற்புதமான சாதனை படைத்துள்ளார். துரதிஷ்டவசமாக அவருக்கு சில காலங்களாக கவலையளிக்கும் முதுகு பிரச்சனை உள்ளது. அவருக்கு நான் சொல்லும் ஒரே அறிவுரை என்னவென்றால் அவரது ரன் மிகவும் குறுகியதாக இருக்கிறது. எனவே அந்த வேகத்தையும் சக்தியையும் அவரது செயலில் இருந்து எடுக்க. வழியை கண்டுபிடிக்க வேண்டும். ஒருவேளை இப்போது சரியான நேரத்தில் அவர் அந்த அழுத்தத்தை தன்னுடைய முதுகிலிருந்து எடுக்க அவர் தனது ஓட்டத்தை (ரன் அப்) நீட்டிக்கலாம்”

Lee

“அது வரை அவரது இடத்தில் உம்ரான் மாலிக் ஏன் விளையாட கூடாது? அந்த இடத்திற்கு விளையாட அவர் போதுமானவர் என்பது என்னுடைய கருத்தாகும். நல்ல ஆக்சனை கொண்டுள்ள அவரிடம் சிறப்பான வேகம் இருக்கிறது. அவர் சிறந்த அணுகு முறையில் ஓடுகிறார். எனவே அவர் இந்திய அணியில் சேர்க்கப்படுவதற்கு தகுதியானவர். அவர் சூப்பர் ஸ்டாராக உருவாகி வருகிறார்” என்று கூறினார்.

இதையும் படிங்க:ஒருநாள் கிரிக்கெட்டில் ஸ்வாரஸ்யத்தை ஏற்படுத்த அந்த மாற்றத்தை செய்ய வேண்டிய நேரம் வந்தாச்சு – ரவி சாஸ்திரி முக்கிய ஆலோசனை

அவர் கூறுவது போல குறுகிய தூரம் ஓடி வந்து 140 கி.மீ வேதத்தில் வீசுவதே பும்ரா முதுகுப் பகுதியில் இவ்வளவு பெரிய காயத்தை சந்திக்க முக்கிய காரணமாக அமைகிறது. முன்னதாக இந்த ஆக்சனை வைத்துக் கொண்டு பும்ரா நீண்ட காலம் சர்வதேச கிரிக்கெட்டில் விளையாட முடியாது என்று கூறிய பாகிஸ்தானின் சோயப் அக்தர் விரைவில் தனது ரன் அப்பில் மாற்றம் செய்ய வேண்டுமென ஏற்கனவே தெரிவித்திருந்தது குறிப்பிடத்தக்கது.

Advertisement