ஒருநாள் கிரிக்கெட்டில் ஸ்வாரஸ்யத்தை ஏற்படுத்த அந்த மாற்றத்தை செய்ய வேண்டிய நேரம் வந்தாச்சு – ரவி சாஸ்திரி முக்கிய ஆலோசனை

Shastri
- Advertisement -

நூற்றாண்டுகளுக்கு முன்பாக முடிவற்ற நாட்களுடன் துவங்கப்பட்ட டெஸ்ட் கிரிக்கெட் நாளடைவில் 5 நாட்கள் கொண்ட போட்டியாக சீர்படுத்தப்பட்டது. அந்த வடிவத்தில் பல வருடங்களாக நடைபெற்று புகழ்பெற்றாலும் 5 நாட்கள் நடந்தும் முடிவுகளை கொடுக்காமல் பெரும்பாலும் டிராவில் முடிவடைந்ததால் ரசிகர்களை கவர்வதற்காக ஒருநாளில் முடிவை காணும் வகையில் 60 ஓவர்கள் கொண்ட போட்டிகளாக ஒருநாள் கிரிக்கெட் 1970களில் அறிமுகப்படுத்தப்பட்டது. கூடவே கிரிக்கெட்டின் சாம்பியனை தீர்மானிக்கும் உலக கோப்பையும் அந்த வகையான கிரிக்கெட்டை மையப்படுத்தி நடத்தப்பட்டதால் 1980களில் மிகவும் பிரபலமடைந்த ஒருநாள் கிரிக்கெட்டை நோக்கி ரசிகர்களை கவர்ந்திழுப்பதற்காக 50 ஓவர் கொண்ட போட்டிகளாக மேலும் குறைக்கப்பட்டது.

Mohinder Amarnath Kapil Dev 1983 World Cup

- Advertisement -

அந்த வடிவத்தில் 90களில் பல பரபரப்பான போட்டிகளை பரிசளித்து ரசிகர்களின் அபிமான கிரிக்கெட்டாக ஒருநாள் போட்டிகள் உருவெடுத்தன. ஆனால் இந்த 21ஆம் நூற்றாண்டில் நவீன உலகத்திற்கேற்ப 3 – 4 மணி நேரங்களில் முடிவை காணும் வகையில் 2005இல் உருவாக்கப்பட்ட டி20 போட்டிகள் ஓவருக்கு ஓவர் அனல் பறக்கும் திரில்லர் தருணங்களை பரிசளித்து குறுகிய காலத்திலேயே நம்பர் ஒன் கிரிக்கெட்டாக உருவெடுத்தது. போதாக்குறைக்கு ஐபிஎல் போன்ற டி20 தொடர்கள் உலகம் முழுவதிலும் நடைபெறுவதால் டெஸ்ட் மற்றும் ஒருநாள் போட்டிகளின் மவுசு குறைய துவங்கியது.

சாஸ்திரி ஆலோசனை:
இருப்பினும் தரத்துக்காக டெஸ்ட் கிரிக்கெட் பணத்துக்காக டி20 கிரிக்கெட் என சமீப காலங்களில் சில வீரர்கள் ஒருநாள் கிரிக்கெட்டை புறக்கணிக்க துவங்கியுள்ளனர். மேலும் வேகத்தை அடிப்படையாகக் கொண்ட டி20 கிரிக்கெட் மற்றும் பொறுமையை அடிப்படையில் கொண்ட டெஸ்ட் கிரிக்கெட் ஆகிய இரண்டுக்கும் மத்தியில் நிற்கும் ஒருநாள் போட்டிகள் புதிய பரிணாமத்தை காணாமல் இருப்பதால் சமீப காலங்களில் அலுப்பு தட்டுவதாக கருத்துக்கள் காணப்படுகின்றன. ஆனால் என்ன தான் டெஸ்ட் சாம்பியன்ஷிப் மற்றும் டி20 உலக கோப்பை வந்தாலும் கிரிக்கெட்டின் உண்மையான சாம்பியனை 50 ஓவர் உலகக் கோப்பையில் தான் தீர்மானிக்கப்படுவதால் அது தொடர்ந்து நடைபெற ஒருநாள் கிரிக்கெட் அவசியம் என்ற ஆதரவு கருத்துகளும் காணப்படுகின்றன.

worldcup

இந்நிலையில் துவண்டு கிடக்கும் ஒருநாள் கிரிக்கெட்டை மீண்டும் சுவாரசியப்படுத்துவதற்காக இந்தியாவில் வரும் அக்டோபர் மாதம் நடைபெறும் 2023 உலகக் கோப்பை முதல் ஒருநாள் போட்டிகளை 40 ஓவர்களாக குறைக்கலாம் என்று ரவி சாஸ்திரி ஆலோசனை தெரிவித்துள்ளார். இது பற்றி சமீபத்திய பேட்டியில் அவர் பேசியது பின்வருமாறு. “இந்த நவீன கிரிக்கெட்டில் ஒருநாள் போட்டிகள் தொடர்ந்து நீடித்து நிலைப்பதற்கு அதை வருங்காலத்தில் 40 ஓவர்களாக குறைக்க வேண்டும் என்று நினைக்கிறேன். ஏனெனில் நாங்கள் உலக கோப்பையை வென்ற 1983இல் அது 60 ஓவர் போட்டிகளாக இருந்த காரணத்தால் இதை சொல்கிறேன். அந்த சமயத்தில் அது ரசிகர்களிடையே சுவாரசியம் குறைய தொடங்கியதால் 50 ஓவர்களாக குறைக்கப்பட்டது”

- Advertisement -

“அந்த வகையில் தற்போது ஒருநாள் போட்டிகளை 40 ஓவர்களாக குறைக்க வேண்டிய நேரம் வந்து விட்டதாக கருதுகிறேன். காலத்திற்கேற்ப இந்த கிரிக்கெட்டின் வடிவத்தை குறைக்க வேண்டியுள்ளது. அதே சமயம் டி20 போட்டிகள் கிரிக்கெட்டின் சாவியாகும். அது அனைத்துக்கும் தேவையான பணத்தை கொடுக்கிறது. அதை பிரபலப்படுத்த உலக அளவில் டி20 தொடர்கள் நடைபெறுகிறது. அதை நாம் தொடர்ந்து அனுமதித்து நேரடியாக உலக கோப்பையை நடத்த வேண்டும். வேண்டுமானால் உலக கோப்பைக்கு முன்பாக சில ஒருநாள் இருதரப்பு தொடர்களை நடத்தலாம்”

Shastri

“மேலும் டெஸ்ட் கிரிக்கெட்டுக்கு நிகரானது எதுவும் கிடையாது. அது மிகவும் முக்கியமானது. இந்திய துணை கண்டத்தில் இந்த 3 வகையான கிரிக்கெட்டையும் விளையாடுவதற்கு இடம் உள்ளது” என்று கூறினார். இதே கருத்து பற்றி தினேஷ் கார்த்திக் பேசியது பின்வருமாறு. “ஒருநாள் போட்டிகள் அழகை இழந்து வருகிறது. இங்கே அனைவரும் டெஸ்ட் கிரிக்கெட்டை தரத்துக்காகவும் டி20 கிரிக்கெட்டை பொழுதுபோக்குக்காகவும் பார்க்கிறார்கள்”

இதையும் படிங்க: WPL 2023 : என்னாங்க பித்தலாட்டமா இருக்கு? வெற்றி நடை போடும் மும்பை, 2 முறை அவுட் கொடுத்து வாபஸ் பெற்ற நடுவர்

“அதனால் ஒருநாள் போட்டிகள் பின்னடைவை சந்திக்கிறது. மேலும் பென் ஸ்டோக்ஸ் போன்ற வீரர் அதற்கு முழுக்கு போட்டு விட்டார். எனவே 2 வருடத்திற்கு ஒருமுறை டி20 உலக கோப்பை நடைபெறுவதால் ஒருநாள் இருதரப்பு தொடர்கள் தேவையற்றது. அதனாலயே நிறைய நாடுகள் அதை குறைத்துக் கொண்டு வருகின்றன” என்று கூறினார்.

Advertisement