- Advertisement -
இந்திய கிரிக்கெட்

இந்தியா எங்க விளையாடினாலும் ஜெயிக்கும்.. ஆனா ப்ளீஸ் இதைமட்டும் பண்ணாதீங்க – கேதார் ஜாதவ் பேச்சு

நடப்பு 2025-ஆம் ஆண்டிற்கான ஆசிய கோப்பை கிரிக்கெட் தொடரானது ஐக்கிய அரபு அமீரகத்தில் எதிர்வரும் செப்டம்பர் 9-ஆம் தேதி முதல் செப்டம்பர் 28-ஆம் தேதி வரை நடைபெற உள்ளது. இந்தியா, பாகிஸ்தான், இலங்கை, வங்கதேசம், ஆப்கானிஸ்தான், ஐக்கிய அரபு அமீரகம், ஓமன் மற்றும் ஹாங்காங் ஆகிய 8 நாடுகள் பங்கேற்று விளையாட இருக்கும் இந்த தொடரானது ரசிகர்கள் மத்தியில் மிகப்பெரிய எதிர்பார்ப்பை ஏற்படுத்தி உள்ளது.

இந்திய அணி பாகிஸ்தான் அணிக்கெதிராக விளையாடக்கூடாது : கேதார் ஜாதவ்

இந்த தொடரில் இடம் பெற்றிருக்கும் எட்டு அணிகளும் இரண்டு பிரிவுகளாக பிரிக்கப்பட்டு ஒவ்வொரு அணியும் மற்ற அணியுடன் ஒரு போட்டியில் மோதும். பின்னர் குரூப் பிரிவில் முதல் இரண்டு இடங்களை பிடிக்கும் அணிகள் சூப்பர் ஃபோர் சுற்றுக்கு தகுதிபெறும்.

- Advertisement -

சூப்பர் ஃபோர் சுற்றில் முதல் இரண்டு இடங்களை பிடிக்கும் அணிகள் செப்டம்பர் 28-ஆம் தேதி நடைபெற இருக்கும் மாபெரும் இறுதிப்போட்டியில் பலப்பரீட்சை நடத்தும். இந்த ஆசிய கோப்பை தொடருக்கான ஏ பிரிவில் இடம் பெற்றுள்ள இந்திய அணியானது தங்களது முதல் போட்டியில் பாகிஸ்தான் அணியை எதிர்கொள்கிறது.

அதன்படி இந்தியா மற்றும் பாகிஸ்தான் அணிகளுக்கு இடையேயான போட்டி செப்டம்பர் 14-ஆம் தேதி துபாயில் நடைபெற இருக்கிறது. இந்நிலையில் இந்த ஆசிய கோப்பை தொடரில் இந்திய அணி பாகிஸ்தான் அணிக்கு எதிராக விளையாடக்கூடாது என முன்னாள் இந்திய வீரரான கேதார் ஜாதவ் சில கருத்துக்களை பகிர்ந்துள்ளார். அந்த வகையில் புனே நகரில் நடைபெற்ற ஒரு நிகழ்ச்சியில் பங்கேற்ற கேதர் ஜாதவ் கூறியதாவது :

- Advertisement -

நான் இந்திய அணிக்காக ஒருநாள் மற்றும் டி20 போட்டிகளில் விளையாடியுள்ளேன். இந்திய அணியில் எப்போதுமே திறமையான பல வீரர்கள் இருந்து வருகின்றனர். தற்போதைய இந்திய அணியும் மிகச் சிறப்பான அணியாக உள்ளது. இங்கிலாந்து நாட்டில் நடைபெற்ற டெஸ்ட் தொடரிலும் இந்திய அணி சிறப்பான செயல்பாட்டை வெளிப்படுத்தி இருந்தது.

இதையும் படிங்க : இந்தியாவின் ஃபிட்னெஸ் வீரன் ஜடேஜா.. அதுல உலகிலேயே பெஸ்ட் டாப் கிரிக்கெட்டர்.. ஜாம்பவான் பிரட் லீ பாராட்டு

எதிர்வரும் ஆசிய கோப்பை தொடரில் இந்திய அணி பாகிஸ்தான் அணிக்கு எதிராக விளையாடக் கூடாது. நம்முடைய நாட்டை விட இந்த போட்டி முக்கியம் கிடையாது. என்னை பொறுத்தவரை இந்தியா எங்கு விளையாடினாலும் வெற்றி பெறும். அதனால் பாகிஸ்தான் அணிக்கு எதிராக விளையாட வேண்டாம் என கேதார் ஜாதவ் கூறியது குறிப்பிடத்தக்கது.

- Advertisement -