இந்தியாவின் ஃபிட்னெஸ் வீரன் ஜடேஜா.. அதுல உலகிலேயே பெஸ்ட் டாப் கிரிக்கெட்டர்.. ஜாம்பவான் பிரட் லீ பாராட்டு

Brett Lee 2
- Advertisement -

இங்கிலாந்தில் நடைபெற்ற 5 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரை 2 – 2 என்ற கணக்கில் இந்திய கிரிக்கெட் அணி சமன் செய்தது. குறிப்பாக ஓவல் மைதானத்தில் நடந்த கடைசிப் போட்டியில் இந்தியா 6 ரன்கள் வித்தியாசத்தில் அசாத்தியமான வெற்றி பெற்றது. அந்த வெற்றியில் அனைத்து இந்திய வீரர்களைப் போலவே ரவீந்திர ஜடேஜாவும் ஆல் ரவுண்டராக செயல்பட்டு முக்கிய பங்காற்றினார்.

குறிப்பாக லார்ட்ஸ் மைதானத்தில் நடைபெற்ற 3வது போட்டியில் இந்தியா படுதோல்வியை சந்திக்கும் என்று எதிர்பார்க்கப்பட்டது. அப்போது ஜடேஜா டெயில் எண்டர்களுடன் சேர்ந்து வீரனைப் போல் வெற்றிக்காக போராடினார். அதனால் 22 ரன்கள் வித்தியாசத்தில் மட்டுமே தோற்ற இந்தியா அடுத்தப் போட்டியில் இன்னிங்ஸ் தோல்வியிலிருந்து தப்பி டிரா செய்தது.

- Advertisement -

இந்தியாவின் ஃபிட்னெஸ் வீரன்:

அந்தப் போட்டியில் வாஷிங்டன் சுந்தருடன் சேர்ந்து சதத்தை அடித்த ஜடேஜா இந்தியாவை தோல்வியிலிருந்து காப்பாற்றினார். இந்நிலையில் 36 வயதிலும் இந்திய அணியிலேயே ரவீந்திர ஜடேஜா மிகவும் ஃபிட்டான வீரராக திகழ்வதாக ஆஸ்திரேலிய ஜாம்பவான் பிரட் லீ பாராட்டியுள்ளார். மிகவும் வேகமாக ஓடி ரன்கள் எடுக்கும் ஜடேஜா ஒரு நிமிடத்திற்குள் ஓவரை முடிக்கும் அளவுக்கு ஃபிட்னஸ் கொண்டிருப்பதாக அவர் பாராட்டியுள்ளார்.

பேட்டிங், பவுலிங், ஃபீல்டிங் ஆகிய அனைத்து துறைகளிலும் ஜடேஜா உலகின் மிகச்சிறந்த கிரிக்கெட்டர் என்று பாராட்டும் லீ இது பற்றி பேசியது பின்வருமாறு. “ஒரு வீரருக்கு தேவையான அனைத்தையும் கொண்டுள்ள அவர் ஒவ்வொரு கட்டத்தையும் நிரப்பியுள்ளார். அடிப்படைகளை சரியாக செய்யும் அவரிடம் எளிமையான டெக்னிக் இருக்கிறது”

- Advertisement -

உலகின் சிறந்த ஃபிட்னெஸ்:

“துல்லியமாக ஓடி பவுலிங் செய்யும் அவர் தேவைப்படும் போது சரியான லைன், லென்த்தில் வீசுகிறார். தனது ஓவரை வேகமாக முடிக்கும் அவர் களத்தில் எந்தளவுக்கு நல்ல வீரர் என்பதை நாம் பேசுகிறோம். அவர் உலகிலேயே சிறந்தவராக இருக்கிறார். 36 வயதிலும் அவர் அணியிலேயே ஃபிட்டாக இருக்கிறார். களத்தில் நிறைய தூரத்தை கவர் செய்யும் அவர் ஃபிட்டாக இருப்பதற்காக பெருமைப்படுவார்”

இதையும் படிங்க: குல்தீப், ஈஸ்வரனுக்கு சான்ஸ் கிடைக்காம போக இதான் 2 காரணம்.. எனக்கு கிடைச்சதே பெருசு.. தாக்கூர் பேட்டி

“அதனாலேயே பெரிய தருணங்களில் இருப்பதற்கு தயங்குவதில்லை என்று நினைக்கிறேன். அவர் ரசிகர்களை பொழுது போக்கக்கூடியவர். நீங்கள் ஒரு கிரிக்கெட்டர்களின் தொழிற்சாலையில், அனைத்து திறமைகளையும் ஒன்றாக போட்டு கலவையாக்கி, பக்கெட்டில் தூக்கி போட்டு, அதில் ஒரு சிறந்த கிரிக்கெட்டரை தேர்ந்தெடுக்க விரும்பினால், அந்தப் பட்டியலில் ரவீந்திர ஜடேஜா மேலே இருப்பார்” என்று தனது யூடியூப் பக்கத்தில் பாராட்டினார்.

Advertisement