இவர் என்ன பண்ணிட்டாருன்னு ஒருநாள் அணியில் இடம் கொடுத்து இருக்கீங்க. இவர் வேஸ்ட் – விவரம் இதோ

Jadhav

இந்திய அணி தற்போது பங்களாதேஷ் அணிக்கு எதிரான டெஸ்ட் தொடரில் விளையாடி வருகிறது. இந்த டெஸ்ட் தொடர் முடிவடைந்த பிறகு வெஸ்ட் இண்டீஸ் அணி இந்தியா சுற்றுப்பயணம் மேற்கொண்டு 3 டி20 போட்டிகள் மற்றும் 3 ஒருநாள் போட்டிகள் கொண்ட தொடரில் விளையாட உள்ளது.

Ind-1

இந்த தொடருக்கான இந்திய அணியின் தேர்வு நேற்று கொல்கத்தாவில் நடந்தது. இந்த கூட்டத்தில் எம்எஸ்கே பிரசாத் தலைமையிலான தேர்வு குழு மற்றும் பிசிசிஐ தலைவர் கங்குலி, இந்திய அணியின் கேப்டன் விராட் கோலி மற்றும் இதர சில உறுப்பினர்கள் அடங்கிய குழுவின் மூலம் இந்த தொடருக்கான தேர்வு நேற்று நடந்தது.

இந்தத் தொடரில் மீண்டும் அணியில் இடம் பிடிப்பார் என்று எதிர்பார்க்கப்பட்ட தோனிக்கு ஒருநாள் மற்றும் டி20 என இரண்டு அணிகளும் வாய்ப்பு கிடைக்கவில்லை. தற்போது ஒருநாள் அணிக்கான வீரர்களின் விவரம் மற்றும் டி20 தொடருக்கான வீரர்களின் விவரம் வெளியாகியது. அதன்படி கேப்டனாக மீண்டும் விராட்கோலி தொடர்கிறார். ஓய்வு கொடுக்கப்படும் என்று எதிர்பார்க்கப்பட்ட ரோகித் தொடர்கிறார்.

Jadhav

இந்த தொடருக்கான ஒருநாள் அணியில் இந்திய அணியின் மிடில் ஆர்டர் பேட்ஸ்மேன் கேதர் ஜாதவ் சேர்க்கப்பட்டுள்ளார். இந்த விடயம் தற்போது சர்ச்சையாகி உள்ளது. ஏனெனில் தொடர்ந்து சரியாக விளையாடாத ஜாதவ் தொடர்ந்து சொதப்பலான ஆட்டத்தை வெளிப்படுத்தி வருவது மட்டுமின்றி ஃபார்ம் இன்றி தவிர்க்கிறார். மேலும் வயதிலும் அவர் மூத்த வீரராகவும் இருக்கிறார் எனவே இவரை எதற்கு தற்போது சோதித்து பார்க்க வேண்டும்.

- Advertisement -

Kedar-Jadhav

இவருக்கு பதிலாக நன்றாக விளையாடும் பல இளம் வீரர்கள் வாய்ப்பு இன்றி தவிக்கின்றனர். அவர்களுக்கு வாய்ப்பு கொடுத்து இருக்கலாம். மேலும் ஜாதவ்க்கு பதிலாக ஒரு பேட்ஸ்மேனாக சஞ்சு சாம்சன் ஒருநாள் தொடரில் பயன்படுத்தி பார்த்திருக்கலாம் என்று ரசிகர்கள் தங்களது கருத்துக்களை இணையத்தில் பதிவு செய்து வருவது குறிப்பிடத்தக்கது.