
இந்தியாவின் சூப்பர்ஸ்டார் சல்மான்கானா ? இல்லை மகேந்திர சிங் தோனியா ? என்பது குறித்த கேள்விக்கு பதிலளித்துள்ளார் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் வீரரும் இந்திய அணியின் வீரருமான கேதார் ஜாதவ். சமீபத்தில் இன்ஸ்டாகிராமில் ரசிகர்களுடன் உரையாடிக் கொண்டிருந்தார். அப்போது பாலிவுட் நடிகர் சல்மான்கான் தோனி மற்றும் சல்மான் கானை பற்றி பேசினார்.. இதுகுறித்து அவர் கூறுகையில் :
இந்தியாவில் எனக்கு பிடித்த சூப்பர் ஸ்டார்கள் இவர்கள்தான். ஒன்று சல்மான்கான் மற்றும் தோனி. என்னை பொருத்தவரை இருவரும் சூப்பர் ஸ்டார்கள் தான். இருவரையும் வேறுபடுத்தி என்னால் பார்க்க முடியவில்லை. நான் இந்த அளவிற்கு விளையாடுவதற்கு டோனி தான் காரணம். தோனி அல்லது சல்மான்கான் ஆகிய இருவரில் யாரை பிடிக்கும் என்று கேட்டீர்கள் என்றால்? என்னால் பதிலளிக்க முடியாது.
பெற்றோர்களில் யாராவது ஒருவரை மட்டுமே நமக்கு பிடிக்கும் என்று கூறிவிட முடியாது. அந்த கேள்விகளுக்கு பதில் கொடுப்பது கடினம். அதனை போல தான் இதுவும். அதே நேரத்தில் நாட்டில் உள்ள பெரும்பாலான ரசிகர்களை போல் நானும் சச்சின் டெண்டுல்கரை பார்த்து தான் வளர்ந்தேன். அவர் இந்திய கிரிக்கெட்டின் ஜாம்பவான். அவருடன் சேர்ந்த இந்திய அணிக்காக விளையாட முடியாதது எனக்கு வருத்தம் அளிக்கிறது.
நான் தோனியை சந்தித்த போது அவர் இந்திய அணியின் கேப்டன் அவர் மிகவும் கண்டிப்பானவர். அனைவரின் திறமையையும் சரியாக கண்டு கொள்ளக் கூடியவர். மிகவும் அமைதியானவர். ஆனால், அனைவரையும் கூர்ந்து கவனிப்பவர் என்று கூறியுள்ளார் கேதர் ஜாதவ். ஜனதாவின் இந்த சாமர்த்தியமான இந்த பதிலை கண்ட ரசிகர்கள் இந்த பதிவை பகிர்ந்து வருவதும் குறிப்பிடத்தக்கது.
கேதார் ஜாதவ் இந்திய அணியில் இடம்பிடித்து இவ்வளவு நாட்கள் விளையாட தோனியே காரணம். மேலும் சல்மான் கானை ஜாதவ் நேரில் சந்திக்கவும் முதல்முறையாக தோனியே உதவி செய்தார் என்பது குறிப்பிடத்தக்கது.