ஐபிஎல் 2025 டி20 கிரிக்கெட் தொடர் அடுத்த வருடம் கோடைகாலத்தில் கோலகலமாக நடைபெற உள்ளது. அந்த தொடருக்கான வீரர்கள் ஏலம் மெகா அளவில் 2 நாட்கள் நடைபெற உள்ளது. அதனால் இம்முறை அனைத்து அணிகளும் கலைக்கப்பட்டு மெகா ஏலம் நடைபெற உள்ளது. அதன் காரணமாக அனைத்து அணிகளும் அதிகபட்சமாக 4 வீரர்களை மட்டுமே ஏலத்திற்கு முன்பாக தக்க வைக்க முடியும்.
அந்த நிலையில் ஐபிஎல் 2025 ஏலத்துக்கு கருத்து கேட்கும் கூட்டம் நேற்று பிசிசிஐ அலுவலகத்தில் ஜெய் ஷா தலைமையில் நடைபெற்றது. அதில் சென்னை, மும்பை உள்ளிட்ட அனைத்து ஐபிஎல் 10 அணிகளின் உரிமையாளர்களும் கலந்து கொண்டனர். அந்தக் கூட்டத்தில் அணி உரிமையாளர்களுக்கு மத்தியில் காரசாரமான விவாதம் நடந்ததாக தெரிய வந்துள்ளது
தடை பண்ணுங்க:
அப்போது பெரும்பாலான அணிகள் 4க்கு பதிலாக 7 வீரர்களை தக்க வைக்க கோரிக்கை வைத்தன. அத்துடன் பெரும்பாலான அணிகள் மெகா ஏலத்திற்கு பதிலாக சிறிய ஏலம் நடத்துவதை விரும்புவதாக தெரிய வந்துள்ளது. இந்நிலையில் ஏலத்தில் வாங்கப்படும் வீரர்கள் கடைசி நேரத்தில் காயத்தை தவிர்த்து சொந்த காரணத்திற்காக வெளியேறினால் அவர்களை தடை செய்ய வேண்டும் என காவ்யா மாறன் கோரிக்கை வைத்துள்ளார்.
குறிப்பாக கடந்த சீசனில் பெரிய தொகைக்கு விலை போவார் என்று எதிர்பார்க்கப்பட்ட இலங்கை வீரர் ஹசரங்கா 1.5 கோடிக்கு ஹைதராபாத் அணிக்காக வாங்கப்பட்டார். ஆனால் குறைந்த தொகைக்கு வாங்கப்பட்டதால் அவர் ஹைதராபாத் அணிக்காக விளையாடவில்லை. எனவே அது போன்ற வீரர்களை தடை செய்ய வேண்டும் என்று தெரிவிக்கும் ஹைதெராபாத் அணியின் துணை உரிமையாளர் காவ்யா மாறன் இது பற்றி பேசியது பின்வருமானது.
“ஏலத்தில் தேர்வு செய்யப்பட்ட ஒரு வீரர் காயத்தை தவிர்த்து வேறு எந்த காரணத்திற்காக விளையாட வராமல் போனாலும் அவரை தடை செய்ய வேண்டும். ஏனெனில் அணி நிர்வாகங்கள் தங்களுடைய சேர்க்கையை உருவாக்குவதற்காக ஏலத்தில் நிறைய முயற்சிகளை போடுகின்றன. ஆனால் கடைசியில் குறைந்த தொகைக்காக வாங்கப்பட்டதற்காக சில வீரர்கள் வராமல் போவது அணியின் சமநிலையை பாதிக்கிறது”
இதையும் படிங்க: இலங்கை அணிக்கெதிரான முதல் ஒருநாள் போட்டிக்கான இந்திய அணியின் பிளேயிங் லெவன் இதுதான் – உத்தேச பட்டியல் இதோ
“அப்படி இந்த சீசனில் நிறைய வெளிநாட்டு வீரர்கள் வரவில்லை” என்று கூறினார். அத்துடன் தக்க வைக்கப்படும் வெளிநாட்டு வீரர்களுக்கான அதிகபட்ச சம்பளத்தை தீர்மானிக்கும் உரிமை அணி நிர்வாகங்களுக்கு வழங்கப்பட வேண்டும் என்றும் காவ்யா கேட்டுக் கொண்டார். மேலும் 2 வெளிநாட்டு வீரர்களை மட்டுமே தக்க வைக்க முடியும் என்ற விதிமுறையில் வீரர்களின் எண்ணிக்கையை அதிகரிக்க வேண்டும் என்றும் அவர் கேட்டுக் கொண்டார்.