இந்தியா மற்றும் இலங்கை அணிகளுக்கு இடையேயான மூன்று போட்டிகள் கொண்ட டி20 கிரிக்கெட் தொடரானது நிறைவுக்கு வந்ததை அடுத்து அடுத்ததாக மூன்று போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரானது நாளை ஆகஸ்ட் 2-ஆம் தேதி வெள்ளிக்கிழமை முதல் துவங்கி நடைபெற இருக்கிறது. கொழும்பு நகரில் நடைபெறும் இந்த போட்டிக்காக தற்போது இரு அணி வீரர்களும் தீவிர பயிற்சியினை மேற்கொண்டு வருகின்றனர்.
கடைசியாக இந்திய அணி தென்னாப்பிரிக்க மண்ணில் நடைபெற்ற ஒருநாள் தொடரில் விளையாடி இருந்தது. அதனை தொடர்ந்து ஆறு மாதங்கள் கழித்து இந்திய அணி தற்போது தான் ஒருநாள் தொடரில் பங்கேற்று விளையாட இருக்கிறது.
இந்த தொடரில் ரோஹித் சர்மா, விராட் கோலி போன்ற வீரர்கள் இந்திய அணியுடன் இணைவதோடு சேர்த்து கம்பீருக்கும் இது பயிற்சியாளராக முதல் ஒருநாள் தொடர் என்பதால் இந்த தொடரின் மீது நான் எதிர்பார்ப்பும் ரசிகர்கள் மத்தியில் உச்சத்தை தொட்டுள்ளது.
இந்நிலையில் இந்த ஒரு நாள் போட்டிக்கான இந்திய அணியின் பிளேயிங் லெவனில் எந்தெந்த வீரர்கள் இடம் பிடிப்பார்கள் என்பது குறித்த உத்தேச பட்டியலை இங்கு காணலாம். அந்த வகையில் நாளைய முதல் ஒருநாள் போட்டியில் கேப்டன் ரோஹித் சர்மா மற்றும் சுப்மன் கில் ஆகியோர் துவக்க வீரர்களாக களமிறங்குவார்கள். அவர்களுக்கு அடுத்து மூன்றாவது வீரராக விராட் கோலியும், நான்காவது இடத்தில் ஷ்ரேயாஸ் ஐயரும் விளையாடுவார்கள்.
ஐந்தாவது இடத்தில் கே.எல் ராகுலும் ஆறாவது இடத்தில் விக்கெட் கீப்பர் பேட்ஸ்மேனாக ரிஷப் பண்ட்டும் விளையாட வாய்ப்புள்ளது. அதனை தொடர்ந்து இரண்டு சுழற்பந்து வீச்சாளர்களாக அக்சர் பட்டேல் மற்றும் குல்தீப் யாதவ் ஆகியோர் விளையாடுவார்கள். மீதமுள்ள 3 வேகப்பந்து வீச்சாளர்களாக அர்ஷ்தீப் சிங், சிராஜ் மற்றும் கலீல் அகமது ஆகியோர் விளையாட வாய்ப்பு உள்ளது. அதன்படி இலங்கை அணிக்கு எதிரான முதலாவது ஒருநாள் போட்டிக்கான இந்திய அணியின் பிளேயிங் லெவன் இதோ :
இதையும் படிங்க : டி20 கிரிக்கெட்டில் விராட் கோலிக்கு அடுத்து இரண்டாவது வீரராக சூரியகுமார் யாதவ் படைத்த சாதனை – விவரம் இதோ
1) ரோஹித் சர்மா, 2) சுப்மன் கில், 3) விராட் கோலி, 4) ஷ்ரேயாஸ் ஐயர், 5) கே.எல் ராகுல், 6) ரிஷப் பண்ட், 7) அக்சர் படேல், 8) குல்தீப் யாதவ், 9) அர்ஷ்தீப் சிங், 10) முகமது சிராஜ், 11) கலீல் அகமது.