டி20 கிரிக்கெட்டில் விராட் கோலிக்கு அடுத்து இரண்டாவது வீரராக சூரியகுமார் யாதவ் படைத்த சாதனை – விவரம் இதோ

Surya
- Advertisement -

இந்தியா மற்றும் இலங்கை அணிகளுக்கு இடையே நடைபெற்ற மூன்று போட்டிகள் கொண்ட டி20 கிரிக்கெட் தொடரை இந்திய அணியானது மூன்றுக்கு பூஜ்யம் (3-0) என்ற கணக்கில் கைப்பற்றி அசத்தியது. அதனை தொடர்ந்து இவ்விரு அணிகளுக்கும் இடையேயான மூன்று போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரானது நாளை முதல் துவங்கி நடைபெற இருக்கிறது.

அண்மையில் நடைபெற்று முடிந்த டி20 உலக கோப்பை தொடருக்கு பின்னர் ரோகித் சர்மா கேப்டன் பதவியில் இருந்து விலகியதால் புதிய கேப்டனாக சூரியகுமார் யாதவை பி.சி.சி.ஐ நியமித்திருந்தது. அவரது தலைமையில் முதல் தொடரிலேயே இந்திய அணி அசத்தலான செயல்பாட்டை வெளிப்படுத்தி இந்த தொடரை வென்றுள்ளது.

- Advertisement -

இந்த வெற்றி ரசிகர்கள் மத்தியில் மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. அதோடு புதிய பயிற்சியாளரான கம்பீரும் வெற்றிகரமாக தனது பயணத்தை ஆரம்பித்திருக்கிறார். இந்நிலையில் இந்த தொடரில் மூன்றாவது போட்டியிலும் இந்திய அணி வெற்றி பெற்றிருந்த வேளையில் அந்த போட்டியின் ஆட்டநாயகனாக வாசிங்டன் சுந்தர் தேர்வு செய்யப்பட்டார்.

அதேபோன்று இந்த தொடரின் தொடர் நாயகனாக சூரியகுமார் யாதவ் தேர்வு செய்யப்பட்டார். இப்படி சூரியகுமார் யாதவ் பெற்ற இந்த தொடர் நாயகன் விருதின் மூலம் சர்வதேச டி20 கிரிக்கெட்டில் ஒரு முக்கியமான சாதனையை நிகழ்த்தியுள்ளார்.

- Advertisement -

அந்தவகையில் இதுவரை சர்வதேச டி20 கிரிக்கெட் தொடரில் அதிக முறை தொடர் நாயகன் விருது வென்றவர் என்ற பட்டியலில் விராட் கோலி ஏழு முறை தொடர் நாயகன் விருதை கைப்பற்றி முதலிடத்தில் உள்ளார்.

இதையும் படிங்க : ஒரே போட்டியில் 4 சொதப்பல்.. 1 மோசமான உலக சாதனை.. கம்பீர் விடமாட்டாரு.. சாம்சன் மீது ரசிகர்கள் அதிருப்தி

அவரை தொடர்ந்து ஐந்தாவது முறையாக தொடர் நாயகன் விருதை வென்று டேவிட் வார்னர், பாபர் அசாம் ஆகியோரது சாதனையை சூரியகுமார் யாதவ் சமன் செய்துள்ளார். மிக நீண்ட காத்திருப்புக்குப் பிறகு 30 வயதை தாண்டி டி20 கிரிக்கெட்டில் அறிமுகமான சூரியகுமார் யாதவ் பல சாதனைகளை படைத்து வருவது குறிப்பிடத்தக்கது.

Advertisement