என்னம்மா இப்படி பண்ணிடீங்களேம்மா.. ஐ.பி.எல் ஏலத்தில் காவ்யா மாறன் செய்த தவறை – சுட்டிக்காட்டும் ரசிகர்கள்

Kavyamaran
- Advertisement -

நவம்பர் 19-ஆம் தேதியான நேற்று துபாயில் அடுத்த 2024-ஆம் ஆண்டிற்கான ஐபிஎல் கிரிக்கெட் தொடருக்கான வீரர்களின் மினி ஏலமானது கோலாகலமாக நடைபெற்று முடிந்தது. இந்த ஐபிஎல் ஏலத்தில் 10 அணிகளை சேர்ந்த முக்கிய நிர்வாகிகளும் தங்களது குழுவுடன் பங்கேற்று தங்களது அணிக்கு தேவையான வீரர்களை போட்டி போட்டு ஏலத்தில் தேர்வு செய்தனர். அந்த வகையில் சன்ரைசஸ் ஹைதராபாத் அணியும் உரிமையாளர் காவியா மாறன் தலைமையில் கலந்து கொண்டது.

ஏற்கனவே கடந்த பல ஆண்டுகளாக வலுவான பந்துவீச்சு அணியாக பார்க்கப்படும் சன்ரைசர்ஸ் அணி பேட்டிங்கில் சற்று பலவீனமாக காணப்படுகிறது. இதன் காரணமாக சன்ரைசர்ஸ் அணி பேட்ஸ்மேன்களை பலப்படுத்தும் நோக்கில் இந்த ஐபிஎல் தொடரில் கலந்து கொண்டது.

- Advertisement -

குறிப்பாக உள்நாட்டு வீரர்களை கவனிக்காத காவ்யா மாறன் பல வெளிநாட்டு வீரர்களை ஏலத்தில் எடுத்தது அவர்களுக்கே பாதகமான விடயமாக தற்போது மாறியுள்ளது என்று ரசிகர்கள் காவியா மாறன் செய்த தவறை சுட்டிக்காட்டி உள்ளனர். ஏனெனில் ஐபிஎல் தொடரில் பங்கேற்கும் அனைத்து அணிகளும் தங்களது அணியில் நான்கு வெளிநாட்டு வீரர்களை மட்டுமே பிளேயிங் லெவனில் விளையாட வைக்க முடியும்.

ஆனால் தற்போதைய சன்ரைசஸ் அணியில் 8 வெளிநாட்டு வீரர்கள் வாங்கப்பட்டுள்ளனர். அந்த வகையில் ஏற்கனவே அந்த அணியில் எய்டன் மார்க்ரம், கிளாஸன், கிளென் பிலிப்ஸ், மார்க்கோ யான்சன் மற்றும் பசல் பருக்கி ஆகியோர் இடம்பெற்றிருந்த வேளையில் நேற்று ஆஸ்திரேலிய அணியின் கேப்டன் பேட் கம்மின்ஸை 20 கோடிக்கு ஏலத்தில் எடுத்தது.

- Advertisement -

அதோடு மற்றொரு ஆஸ்திரேலிய வீரரான டிராவிஸ் ஹெட்டை 6 கோடிக்கும், வனிந்து ஹசரங்காவை ஒன்றரை கோடிக்கும் சன்ரைசர்ஸ் அணி ஏலத்தில் எடுத்திருந்தது. சன்ரைசர்ஸ் அணி ஏலத்தில் எடுத்த மூன்று வெளிநாட்டு வீரர்களும் சிறப்பான வீரர்கள் என்றாலும் இந்த எட்டு வீரர்களில் எப்படி நான்கு வீரர்களை தேர்வு செய்து பிளேயிங் லெவனில் விளையாட வைக்க முடியும் என்ற சிக்கல் எழுந்துள்ளது.

இதையும் படிங்க : மீண்டும் திட்டம் போட்டு காய் நகர்த்திய சிஎஸ்கே அணியை விளாசும் தமிழக ரசிகர்கள்.. காரணம் என்ன?

அதோடு மார்க்ரம் அந்த அணியின் கேப்டனாக இருக்கும் வேளையில் உலக கோப்பையை வென்ற அணியின் கேப்டனான பேட் கம்மின்ஸை அவர்கள் எவ்வாறு கையாள போகிறார்கள் என்ற கேள்வி எழுந்துள்ளது. இப்படி சன் ரைசர்ஸ் அணி செய்த சில தவறுகளை ரசிகர்கள் சுட்டிக்காட்டி உள்ளனர். மேலும் இப்படி அளவுக்கு அதிகமான வெளிநாட்டு வீரர்களை அணியில் தேர்வுசெய்த காவியா மாறன் இளம் இந்திய வீரர்களை தேர்வு செய்வதில் கோட்டை விட்டு விட்டார் என்றும் ரசிகர்கள் சுட்டிக்காட்டி வருவது குறிப்பிடத்தக்கது.

Advertisement