சிஎஸ்கே அணியின் முன்னாள் கேப்டனான மகேந்திர சிங் தோனி இந்த ஆண்டு நடைபெற்று முடிந்த ஐபிஎல் கிரிக்கெட் தொடருடன் ஓய்வு பெறுவார் என்று எதிர்பார்க்கப்பட்ட வேளையில் ரசிகர்களுக்காக தான் மேலும் ஒரு ஆண்டு விளையாட இருப்பதாக கூறி அதற்கான முயற்சியில் தற்போது இருந்து வருகிறார். கடந்த சில ஆண்டுகளாகவே முழங்கால் வலி காரணமாக பாதிக்கப்பட்டிருக்கும் தோனி அண்மையில் அதற்கான அறுவை சிகிச்சை செய்து கொண்டு தற்போது முழு வீச்சில் அடுத்த ஐபிஎல் தொடரில் பங்கேற்பதற்காக தயாராகி வருகிறார்.
தல தோனியின் முடிவு என்ன? :
அதே வேளையில் அவர் இன்னும் அடுத்த ஆண்டு ஐபிஎல் தொடரில் விளையாடுவாரா? மாட்டாரா? என்பதை அவர் உறுதி செய்யவில்லை. ஆனாலும் அடுத்த ஆண்டு ஐபிஎல் தொடருக்கு முன்னதாக வீரர்களின் மெகா ஏலமானது நடைபெற இருக்கும் வேளையில் அக்டோபர் 31ம் தேதிக்குள் அனைத்து அணிகளும் தங்களது அணியில் தக்க வைக்கும் வீரர்களின் பட்டியலை வெளியிட வேண்டும் என்று ஐபிஎல் நிர்வாகம் கேட்டுக் கொண்டுள்ளது.
இதன் காரணமாக அக்டோபர் 31-ம் தேதியே தோனி விளையாடுவாரா? மாட்டாரா? என்பது உறுதியாக தெரிந்துவிடும். இந்நிலையில் அடுத்த ஐபிஎல் தொடரில் தோனி விளையாடுவது குறித்து கருத்து தெரிவித்துள்ள சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் தலைமைச் செயலாளரான காசி விஸ்வநாதன் கூறுகையில் :
தோனி அடுத்த ஐபிஎல் தொடரில் பங்கேற்பாரா? இல்லையா? என்பது குறித்து எந்த ஒரு கருத்தையும் எங்களிடம் சொல்லவில்லை. ஆனாலும் அடுத்த ஆண்டு அவர் விளையாட வேண்டும் என்பதுதான் எங்களுடைய ஆசையாக இருக்கிறது. அக்டோபர் 31 ஆம் தேதிக்கு முன்பு நிச்சயம் தோனி எங்களை தொடர்பு கொண்டு தனது முடிவை தெரிவிப்பார் என்று நம்புகிறேன் என காசி விஸ்வநாதன் கூறியுள்ளார்.
இதன் காரணமாக வரும் அக்டோபர் 31-ஆம் தேதி தோனியின் முடிவு என்ன என்பது தெரிந்து விடும். ஏற்கனவே ஐபிஎல் மெகா ஏலத்திற்கு முன்பாக அன் கேப்டு வீரராக சென்னை அணி தோனியை நான்கு கோடி ரூபாய்க்கு தக்கவைக்கும் என்று பேசப்பட்டு வருகிறது.
இதையும் படிங்க : ஆஸிக்கு வரேன்னு சொல்லுங்க.. 234 ரன்ஸ்.. பிரைன் லாராவை முந்திய புஜாரா.. பிசிசிஐக்கு மெசேஜ்
ஆனால் ஒருவேளை தோனி அடுத்த ஐபிஎல் தொடரில் விளையாட மாட்டேன் என்று ஓய்வை அறிவித்துவிட்டால் அவருக்கு பதிலாக இளம் வீரரான சமீர் ரிஸ்வியை சென்னை அணி 4 கோடி ரூபாய்க்கு தக்கவைக்கும் என்று தெரிகிறது.



