ஆஸிக்கு வரேன்னு சொல்லுங்க.. 234 ரன்ஸ்.. பிரைன் லாராவை முந்திய புஜாரா.. பிசிசிஐக்கு மெசேஜ்

Pujara
- Advertisement -

ரஞ்சிக் கோப்பை 2024 – 25 உள்ளூர் டெஸ்ட் கிரிக்கெட் தொடரில் சௌராஷ்டிரா அணி தங்களுடைய முதல் போட்டியில் தமிழ்நாடு அணியிடம் இன்னிங்ஸ் தோல்வியை சந்தித்தது. அந்த நிலையில் அக்டோபர் 18ஆம் தேதி சௌராஷ்ட்ரா தங்களுடைய இரண்டாவது போட்டியில் சட்டீஸ்கர் அணியை எதிர்கொண்டது. ராஜ்கோட் மைதானத்தில் நடைபெற்ற அப்போட்டியில் டாஸ் வென்ற சண்டிகர் முதலில் பேட்டிங் செய்தது.

அதைத் தொடர்ந்து களமிறங்கிய சண்டிகர் முதல் இன்னிங்சில் அபாரமாக விளையாடி 578 ரன்கள் குவித்து அசத்தியது. அதிகபட்சமாக கேப்டன் அமந்திப் காரே இரட்டை சதமடித்து 203* ரன்கள் குவித்தார். சௌராஷ்ட்ரா அணிக்கு அதிகபட்சமாக ஜடேஜா, பார்த் பூத், நவ்நீத் வோரா தலா 2 விக்கெட்டுகளை எடுத்தனர். பின்னர் களமிறங்கிய சௌராஷ்ட்ராவுக்கு ஹார்விக் தேசாய் 5, ஜானி 40 ரன்களில் அவுட்டானார்கள்.

- Advertisement -

புஜாரா இரட்டை சதம்:

ஆனால் மிடில் ஆர்டரில் களமிறங்கிய நம்பிக்கை நட்சத்திரம் செட்டேஸ்வர் புஜாரா அபாரமாக விளையாடி 25 பவுண்டரி 1 சிக்சருடன் இரட்டை சதமடித்து 234 (383) ரன்கள் குவித்தார். அவருடன் வசவடா 73, செல்டன் ஜேக்சன் 62 ரன்கள் எடுத்ததால் சௌராஷ்ட்ரா 474-8 ரன்கள் குவித்தது. அப்போது மழை வந்ததால் போட்டி டிராவில் முடிந்தது. சட்டீஸ்கர் அணிக்கு அதிகபட்சமாக சசாங் சிங் 3 விக்கெட்டுகளை எடுத்தார்.

முன்னதாக இந்தப் போட்டியில் 3வது நாள் காலையில் களமிறங்கிய புஜாரா 4வது நாள் மாலையில் தான் அவுட்டானார். அந்தளவுக்கு தன்னுடைய ஸ்டைலில் நங்கூரமாக சுமார் 2 நாட்கள் விளையாடிய அவர் முதல் தர கிரிக்கெட்டில் தன்னுடைய 66வது சதத்தை பதிவு செய்தார். அதனால் முதல் தர கிரிக்கெட்டில் அதிக சதங்கள் அடித்த வீரர்களின் பட்டியலில் ஜாம்பவான் பிரைன் லாராவை (65) முந்திய அவர் ஃபார்முக்கு வந்து விட்டேன் என்பதை காட்டியுள்ளார்.

- Advertisement -

பிசிசிஐக்கு மெசேஜ்:

அத்துடன் ரஞ்சிக்கோப்பை வரலாற்றில் அதிக இரட்டை சதங்கள் அடித்த வீரர் என்ற பராஸ் டோக்ரா (இருவரும் தலா 9) வரலாற்றுச் சாதனையையும் புஜாரா சமன் செய்துள்ளார். கடந்த 2010 முதல் டெஸ்ட் கிரிக்கெட்டில் அவர் சிறப்பாக விளையாடி இந்தியாவின் நிறைய வெற்றிகளில் பங்காற்றினார். குறிப்பாக ஆஸ்திரேலியாவில் 2019-18 பார்டர் – கவாஸ்கர் கோப்பையை இந்தியா முதல் முறையாக வெல்ல 500க்கும் மேற்பட்ட ரன்கள் குவித்து முக்கிய பங்காற்றினார். அதே போல 2020 – 21இல் மீண்டும் ஆஸ்திரேலியாவில் வெல்ல முக்கிய பங்காற்றிய அவர் அதன் பின் சுமாராக விளையாடியதால் கழற்றி விடப்பட்டார்.

இதையும் படிங்க: ரஞ்சி கோப்பை: 2 விக்கெட்டில் மிஸ்.. டெல்லிக்கு ஃபாலோ ஆன் கொடுத்து புள்ளிகளை அள்ளிய தமிழ்நாடு

ஆனால் பெங்களூருவில் நடைபெற்ற நியூஸிலாந்துக்கு எதிரான முதல் போட்டியில் 46க்கு அவுட்டான போது புஜாரா போன்ற ஒருவர் விளையாடியிருக்க வேண்டும் என்று ஜாம்பவான் அனில் கும்ப்ளே தெரிவித்திருந்தார். அந்த சூழ்நிலையில் அடுத்த மாதம் ஆஸ்திரேலியாவில் துவங்கும் டெஸ்ட் தொடரில் இந்தியாவுக்காக விளையாட தயாராக இருக்கிறேன் என்பதை புஜாரா இந்த இரட்டை சதத்தால் பிசிசிஐக்கு காண்பித்துள்ளது குறிப்பிடத்தக்கது.

Advertisement