டீமில் இருந்தே ஜடேஜாவை தூக்கியெறிந்ததா சி.எஸ்.கே? வதந்திக்கு முற்றுப்புள்ளி வைத்த – டீம் மேனேஜ்மென்ட்

Kasi
- Advertisement -

இந்தியாவில் நடைபெற்று வரும் நடப்பு ஐபிஎல் தொடர் தொடங்குவதற்கு முன்னதாக தோனி கேப்டன் பதவியில் இருந்து விலகியதால் சென்னை அணியின் கேப்டன் பொறுப்பு ஆல் ரவுண்டர் ஜடேஜாவிடம் ஒப்படைக்கப்பட்டது. முதல் முறையாக கேப்டனாக தனது பயணத்தை துவங்கிய ஜடேஜா முதல் 8 போட்டிகளில் இரண்டு போட்டிகளில் மட்டுமே வெற்றியை பெற்று கொடுத்தார். இதன் காரணமாக அவரது கேப்டன்சி மீது மிகப்பெரிய கேள்விக்குறி இருந்தது. அதோடு அவரது தனிப்பட்ட ஆட்டத்திலும் மிகப்பெரிய அளவில் தொய்வு ஏற்பட்டது.

Jadeja

- Advertisement -

இந்த சீசனில் 10 போட்டிகளில் விளையாடிய ஜடேஜா பேட்டிங்கில் 116 ரன்களும், பந்துவீச்சில் 5 விக்கெட்டுகளை மட்டுமே கைப்பற்றி இருந்ததால் கேப்டன்சியில் இருந்த அழுத்தத்தில் இருந்து விலக ஜடேஜா தனது கேப்டன் பதவியை மீண்டும் தோனியிடமே ஒப்படைத்தார். அதனைத் தொடர்ந்து தற்போது தோனி தலைமையில் சிஎஸ்கே அணி விளையாடி வருகிறது. இப்படி கேப்டன் பொறுப்பில் இருந்து ஜடேஜா விலகியதுமே அடுத்ததாக நடைபெற்ற டெல்லி அணிக்கு எதிரான போட்டியில் அவர் விளையாடவில்லை.

இப்படி டெல்லி அணிக்கு எதிரான போட்டியில் விளையாடாத அவர் அதனை தொடர்ந்து இந்த நடப்பு தொடரில் இருந்து வெளியேறியுள்ளார் என்று கூறப்பட்டது. அதற்கு காரணமாக பெங்களூரு அணிக்கு எதிராக நடைபெற்ற போட்டியின்போது அவருக்கு ஏற்பட்ட காயம் காரணமாக இத்தொடரில் இருந்து வெளியேறினார் என்றும் சிஎஸ்கே நிர்வாகம் தெரிவித்துள்ளது.

Jadeja-1

இந்நிலையில் ஜடேஜாவை அணியிலிருந்து வேண்டுமென்றே சி.எஸ்.கே நிர்வாகம் புறக்கணிப்பதாக சில வதந்தியும் எழும்பியது. அதனை தொடர்ந்து ஜடேஜாவை இன்ஸ்டாகிராமில் பின் தொடர்வதை சிஎஸ்கே அணியின் நிர்வாகம் நிறுத்தியதால் ஜடேஜாவுடனான மனக்கசப்பு உண்மைதானோ என்பது போன்ற கேள்விகளை எல்லாம் ரசிகர்கள் சமூக வலைத்தளத்தில் எழுப்பியிருந்தனர்.

- Advertisement -

அதோடு இனி ஜடேஜா சிஎஸ்கே அணிக்கு திரும்ப மாட்டார் என்றும் சில விவாதங்கள் சமூக வலைத்தளத்தில் நடைபெற்றுவந்தன. இந்நிலையில் இந்த வதந்திகள் அனைத்திற்கும் முற்றுப்புள்ளி வைக்கும் விதமாக சென்னை அணியின் தலைமை நிர்வாகி காசி விஸ்வநாதன் தெளிவான விளக்கத்தை அளித்துள்ளார். இதுகுறித்து அவர் கூறுகையில் :

இதையும் படிங்க : சென்னைக்கு இழைக்கப்பட்ட அப்பட்டமான அநீதி ! மீண்டும் அரங்கேறிய ஒருதலைபட்ச அம்பயரிங் – கங்குலி சொன்னது என்ன?

சிஎஸ்கே அணியின் வருங்கால திட்டங்களில் ஜடேஜா முக்கிய பங்கினை வகிப்பார். நிச்சயம் அவர் இப்போதும் எங்கள் அணியுடன் தான் உள்ளார். தற்போது காயம் காரணமாக அவர் இந்த தொடரில் இருந்து வெளியேறினாலும் நிச்சயம் இனிவரும் காலங்களில் சென்னை அணிக்காக அவர் விளையாடுவார் என்ற தெளிவான விளக்கத்தை அளித்துள்ளது குறிப்பிடத்தக்கது.

Advertisement