சி.எஸ்.கே அணியின் போட்டிகள் ராஞ்சியில் நடைபெறுகிறதா? சி.எஸ்.கே சி.இ.ஓ – காசி விஸ்வநாதன் பதில்

Kasi Viswanathan
- Advertisement -

இந்தியாவில் கடந்த 2008-ஆம் ஆண்டு முதல் நடைபெற்ற வரும் ஐபிஎல் கிரிக்கெட் தொடரானது ஆண்டுதோறும் ரசிகர்கள் மத்தியில் மிகப்பெரிய வரவேற்பை பெற்று வரும் வேளையில் இந்த 2026-ஆம் ஆண்டிற்கான ஐபிஎல் தொடரானது வரும் மார்ச் 28 ஆம் தேதி முதல் துவங்கி நடைபெற இருக்கிறது. இந்த தொடருக்கான அட்டவணை ஏற்கனவே வெளியாகியுள்ள வேளையில் தற்போது அனைத்து அணிகளும் தீவிர பயிற்சிகளை மேற்கொண்டு வருகின்றன.

சி.எஸ்.கே போட்டிகள் இடமாற்றம் செய்யப்படுகிறதா? : காசி விஸ்வநாதன்

மொத்தம் 10 அணிகள் பங்கேற்று விளையாடும் இந்த மாபெரும் தொடரில் சாம்பியன் பட்டத்தை வெல்லப்போகும் அணி எது? என்பது குறித்த எதிர்பார்ப்பு அனைவரது மத்தியிலும் உச்சத்தை தொட்டுள்ளது. அதோடு ஐபிஎல் வரலாற்றில் அதிக முறை சாம்பியன் பட்டம் வென்ற சிஎஸ்கே அணி கடந்த ஆண்டு நடைபெற்ற 2025 ஐபிஎல் தொடரில் 10-ஆம் இடத்தை பிடித்து வெளியேறி மோசமான செயல்பாட்டை வெளிப்படுத்தியிருந்தது.

- Advertisement -

இதன் காரணமாக மினி ஏலத்தின் போது ஏகப்பட்ட இளம் வீரர்கள் சிஎஸ்கே அணிக்காக வாங்கப்பட்டுள்ள வேளையில் இம்முறை அனுபவமும், இளமையும் கலந்த சிஎஸ்கே அணி சிறப்பான செயல்பாட்டை வெளிப்படுத்தி இந்த ஆண்டு சாம்பியன் பட்டத்தை வெல்ல வேண்டும் என்பதே பலரது எதிர்பார்ப்பாகவும் உள்ளது. எதிர்வரும் இந்த 19-ஆவது ஐபிஎல் தொடரானது இன்னும் சில வாரங்களில் துவங்க இருக்கும் வேளையில் இந்த ஐபிஎல் தொடருக்கான அட்டவணைகளில் சில மாற்றங்கள் நடைபெறலாம் என்று கூறப்படுகிறது.

அதிலும் குறிப்பாக தமிழ்நாடு, மேற்கு வங்காளம், அசாம், கேரளா போன்ற ஒரு சில மாநிலங்களில் தேர்தல் நடைபெற இருப்பதினால் குறிப்பிட்ட சில போட்டிகள் இடமாற்றம் செய்யப்படலாம் என்றும் பேசப்பட்டுள்ளது. அந்தவகையில் தமிழ்நாட்டில் தேர்தல் நடைபெறவுள்ளதன் காரணமாக சிஎஸ்கே அணி விளையாடும் ஹோம் போட்டிகள் வேறு மைதானத்திற்கு மாற்றப்பட உள்ளதாக தகவல்கள் பரவி வந்தது. அதிலும் குறிப்பாக சென்னை அணி விளையாடும் போட்டிகள் ராஞ்சி நகருக்கு மாற்றப்படலாம் என்று கூறப்பட்டு வந்தது.

- Advertisement -

இதையும் படிங்க : எந்த கோச்சிங் அனுபவமும் இல்லாத நான் இந்திய அணியின் பயிற்சியளராக இவரே காரணம் – கவுதம் கம்பீர் பேச்சு

இந்நிலையில் இந்த விவகாரம் தொடர்பாக பேசிய சிஎஸ்கே அணியின் சிஇஓ காசி விஸ்வநாதன் கூறியதாவது : தேர்தல் காரணமாக சென்னை அணியின் போட்டிகள் ராஞ்சி மைதானத்திற்கு மாற்றப்படும் என்ற தகவல் உண்மை அல்ல. அப்படி எந்த ஒரு வழிகாட்டுதலையும் ஐபிஎல் நிர்வாகம் எங்களுக்கு கொடுக்கவில்லை என தெளிவான பதிலை அளித்திருந்தது குறிப்பிடத்தக்கது.

Advertisement