அடுத்த சீசனிலும் சி.எஸ்.கே அணிக்கு தோனி தான் கேப்டன். ஆனால் – நிபந்தனையை முன்வைத்த காசி விஸ்வநாதன்

Kasi
- Advertisement -

இந்தியாவில் நடைபெற்று முடிந்த ஐபிஎல் தொடரில் பாண்டியா தலைமையிலான குஜராத் அணி முதல்முறையாக அறிமுக தொடரிலேயே சாம்பியன் பட்டத்தை வென்று வரலாறு படைத்தது. அதனை தொடர்ந்து தற்போது அடுத்த ஆண்டிற்கான ஐபிஎல் தொடர் குறித்த எதிர்பார்ப்பு தற்போதே ரசிகர்கள் மத்தியில் அதிகரித்துள்ளது. ஏனெனில் சென்னை அணியின் கேப்டனாக இருக்கும் எம்.எஸ் தோனி தற்போது 41 வயதினை எட்டியுள்ளதால் அவர் விரைவில் ஐபிஎல் தொடரில் இருந்தும் ஓய்வு பெறுவார் என்று தெரிகிறது.

CSK MS Dhoni Ravindra Jadeja

இதன் காரணமாக இன்னும் தோனி எத்தனை ஆண்டுகள் ஐபிஎல் தொடரில் விளையாடுவார்? என்றும் சென்னை அணிக்காக தலைமை தாங்குவாரா? மாட்டாரா? என்ற கேள்வியும் ரசிகர்கள் மத்தியில் எழுந்துள்ளது. இந்நிலையில் திருவாரூரில் நடைபெற்ற மாவட்ட கிரிக்கெட் அசோசியேஷனின் 25 ஆவது ஆண்டு வெள்ளி விழா நிகழ்ச்சியில் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்ட சென்னை சூப்பர் கிங்ஸ் அணியில் முக்கிய நிர்வாகியான சி இ ஓ காசி விஸ்வநாதன் அந்த நிகழ்ச்சி முடிந்த பின்னர் செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்தார்.

- Advertisement -

அந்த சந்திப்பில் அவர் கூறியதாவது : தமிழ்நாட்டு வீரர்கள் தற்போது குறைந்த அளவிலேயே இந்திய கிரிக்கெட் அணியில் இடம் பெற்று விளையாடி வருகின்றனர் என்று இப்போதைக்கு சொல்ல முடியாது. ஏனெனில் டெஸ்ட் கிரிக்கெட்டை பொருத்தவரை அஷ்வின், விஜய் ஆகியோர் இருக்கிறார்கள். அதே போன்று ஒன் டே கிரிக்கெட்டில் தினேஷ் கார்த்திக், அஷ்வின் போன்றவரும் இருக்கிறார்கள்.

CSK Ms DHoni

அடுத்து இந்திய அணிக்காக சாய் கிஷோர், வாஷிங்டன் சுந்தர், விஜய் சங்கர் ஆகியோர் விளையாட காத்திருக்கின்றனர். முன்பு போல் மும்பை அணியில் இருந்து 7, 8 பேர் எல்லாம் இந்திய அணியில் கிடையாது. இப்போது எல்லாம் எல்லா மாநிலத்திலும் இருந்தும் இரண்டு வீரர்கள் இந்திய அணிக்காக விளையாடி வருகின்றனர்.

- Advertisement -

அதுபோக டிஎன்பிஎல் தொடரிலிருந்தும் 13 தமிழக வீரர்கள் ஐபிஎல் தொடரில் விளையாடுகிறார்கள். எனவே இனிவரும் சீசன்னிலும் தமிழக வீரர்கள் ஐபிஎல் தொடரில் நிச்சயம் பெருமளவில் கலந்து கொண்டு விளையாடுவார்கள் என்ற நம்பிக்கை உள்ளது என்று கூறினார். மேலும் தோனியின் எதிர்காலம் குறித்து பேசிய காசி விஸ்வநாதன் கூறுகையில் : நிச்சயம் அடுத்த ஐபிஎல் சீசனிலும் சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்காக தோனி விளையாடுவார்.

இதையும் படிங்க : ஆசிய கோப்பை அணியிலிருந்து டி20 உ.கோப்பைக்கு தேர்வாக வாய்ப்பில்லாத 3 முக்கிய இந்திய வீரர்களின் பட்டியல்

அதேபோன்று சென்னை அணியின் கேப்டனாகவும் அவர் நீடிப்பார் என்று கூறிய விஸ்வநாதன் தோனி அடுத்த ஆண்டு சென்னை அணியுடன் விளையாடுவதும் சரி, கேப்டனாக இருப்பதும் சரி அதுவே கடைசியாக இருக்கலாம் என்றும் மறைமுகமாக கூறியுள்ளது தோனியின் கிரிக்கெட் கரியரின் முடிவை சுட்டிக்காட்டியுள்ளது போல இருந்ததால் நிச்சயம் தோனி அடுத்த ஆண்டுடன் ஓய்வு பெறுவார் என்று தெரிகிறது.

Advertisement