ஆசிய கோப்பை அணியிலிருந்து டி20 உ.கோப்பைக்கு தேர்வாக வாய்ப்பில்லாத 3 முக்கிய இந்திய வீரர்களின் பட்டியல்

Avesh Khan Virat Kohli KL rahul Chahal India
- Advertisement -

ஐக்கிய அரபு நாடுகளில் நடைபெற்று வரும் வரலாற்றின் 15ஆவது ஆசிய கோப்பை விறுவிறுப்பான கட்டத்தை எட்டியுள்ளது. வரும் அக்டோபர் மாதம் ஆஸ்திரேலியாவில் நடைபெறும் டி20 உலகக் கோப்பைக்கு தயாராகும் வகையில் 20 ஓவர் போட்டிகளாக நடைபெறும் இத்தொடரில் நடப்பு சாம்பியனாக விளையாடி வரும் ரோகித் சர்மா தலைமையிலான இந்தியா லீக் சுற்றில் பரம எதிரியான பாகிஸ்தான் மற்றும் ஹாங்காங் அணிகளை தோற்கடித்து சூப்பர் 4 சுற்றுக்குள் நுழைந்துள்ளது. கடந்த வருடம் இதே துபாயில் நடைபெற்ற டி20 உலக கோப்பையில் விராட் கோலி தலைமையில் பாகிஸ்தானிடம் தோற்று லீக் சுற்றுடன் வெளியேறிய இந்தியா அதன்பின் முழுநேர கேப்டனாக பொறுப்பேற்ற ரோகித் சர்மா தலைமையில் பங்கேற்ற அத்தனை டி20 தொடர்களிலும் தோல்வியடையாமல் வெற்றிநடை போட்டு வருகிறது.

India Rohit Sharma

- Advertisement -

எனவே முன்பை விட பலமாக மாறியுள்ள இந்தியா விரைவில் நடைபெறும் டி20 உலகக்கோப்பையை வெல்வதற்கு தரமான 11 வீரர்களை கண்டறிந்து வருகிறது. அதில் ஏற்கனவே 80% அணியை முடிவு செய்துவிட்டதாக அறிவித்துள்ள ரோகித் சர்மா இறுதிக்கட்ட அணியை இந்த ஆசிய கோப்பையலிருந்து தேர்வு செய்ய உள்ளதாக தெரிவித்துள்ளார். அந்த வகையில் இந்த தொடரிலிருந்து உலக்கோப்பைக்கு 3 வீரர்கள் தேர்வாக மாட்டார்கள் என்பதற்கான காரணத்தைப் பற்றி பார்ப்போம்:

3. ரவி பிஷ்னோய்: இளம் லெக் ஸ்பின் பந்து வீச்சாளரான இவர் தைரியமாக பந்துவீசி விக்கெட்டுகளை எடுக்கும் திறமை பெற்றுள்ளார். அண்டர்-19 உலகக்கோப்பை மற்றும் ஐபிஎல் தொடரில் அசத்தியததால் கடந்த பிப்ரவரியில் இந்தியாவுக்காக அறிமுகமான இவர் சீனியர்கள் இருப்பதால் தொடர்ச்சியான வாய்ப்புகளை பெறவில்லை என்றாலும் கிடைத்த 8 வாய்ப்புகளில் 9 விக்கெட்டுகளை எடுத்து சிறப்பாக செயல்பட்டுள்ளார்.

bisnoi

குறிப்பாக சமீபத்திய வெஸ்ட் இண்டீஸ் தொடரின் கடைசி போட்டியில் 4 விக்கெட்டுகள் எடுத்து நல்ல பார்மில் இருந்தாலும் ஆஸ்திரேலியாவில் விளையாடும் 15 பேர் கொண்ட அணியில் கணிசமான அளவு கூட பேட்டிங் தெரியாத இவர் இடம் பிடிப்பது கடினமாகும். மேலும் யுஸ்வென்ற சஹால் முதன்மை சுழல் பந்துவீச்சாளராக இருக்கும் நிலையில் ரவீந்திர ஜடேஜா காயத்தால் வெளியேறினாலும் சுழல் பந்துவீச்சு ஆல்-ரவுண்டராக டாப் ஆர்டரில் விளையாடும் திறமை பெற்றுள்ள தீபக் ஹூடாவை தான் தேர்வுக்குழு தேர்வு செய்ய அதிக வாய்ப்புள்ளது. ஏனெனில் கடந்த முறை இவரைப்போல் அனுபவமில்லாத வருண் சக்ரவர்த்தி, ராகுல் சஹர் போன்றவர்களை தேர்வு செய்தது இந்தியாவுக்கு தோல்வியை கொடுத்ததை தேர்வுக்குழுவும் மறந்திருக்காது. ஒருவேளை ரிசர்வ் வீரராக இவர் தேர்வு செயல்படலாம்.

- Advertisement -

2. ரவிச்சந்திரன் அஷ்வின்: ஒரு கட்டத்தில் முதன்மை சுழல் பந்து வீச்சாளராக இருந்த இவரை 2017இல் கேப்டனாக பொறுப்பேற்ற விராட் கோலி ஒருசில போட்டிகளில் சுமாராக பந்து வீசியதால் மொத்தமாக கழற்றிவிட்டார். இருப்பினும் மனம் தளராமல் ஐபிஎல் தொடரில் அசத்தி வந்த இவர் கடந்த வருடம் 4 வருடங்கள் கழித்து நேரடியாக உலகக்கோப்பைக்கு தேர்வாகி ஆச்சர்யப்படும் வகையில் கம்பேக் கொடுத்தார்.

Ravichandran Ashwin

இந்திய அணியிலிருந்து வாய்ப்பை இழந்ததால் அதை தக்க வைத்துக் கொள்ள வேண்டும் என்பதற்காக குறைவான ரன்களைக் கொடுத்து துல்லியமாக பந்துவீசும் புதிய வித்தைகளை கற்ற அவர் அதற்காக அவருடைய அடிப்படையான ஆஃப் ஸ்பின் பந்துகளை குறைத்து கொண்டதால் விக்கெட்டுக்கள் எடுப்பதும் குறைந்து விட்டது. அதாவது சமீப காலங்களில் அஷ்வின் ரன்களை வாரி வழங்காமல் துல்லியமாக பந்து வீசினாலும் விகெட் எடுப்பவராக (விக்கெட் டேக்கர்) செயல்படுவதில்லை.

- Advertisement -

அதே சமயம் பேட்டிங்கில் நல்ல முன்னேற்றத்தைக் கண்டுள்ள இவர் இந்திய மைதானங்களிலேயே தேவையான நேரத்தில் விக்கெட்டுகளை எடுத்து கொடுப்பதில்லை. அந்த நிலைமையில் சுழலுக்கு சாதகமில்லாத ஆஸ்திரேலிய ஆடுகளங்களில் இவரது பந்துவீச்சு தாக்கத்தை ஏற்படுத்தும் அளவுக்கு இருக்காது என்பதே நிதர்சனம்.

Axar Patel IND vs WI

அதனாலேயே முதன்மை பந்துவீச்சாளராக சஹால் இருக்கும் நிலையில் இந்த ஆசிய கோப்பையிலும் இதுவரை அவருக்கு ஒரு போட்டியில் கூட விளையாடும் வாய்ப்பு கிடைக்கவில்லை. மேலும் இவருக்கு பதிலாக இதே தொடரில் ஜடேஜாவுக்கு பதில் சேர்க்கப்பட்டுள்ள அக்சர் படேலுக்கு வாய்ப்பு கிடைக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. ஏனெனில் அவர் விக்கெட் எடுப்பவராக இருப்பதுடன் சமீப காலங்களில் பேட்டிங்கிலும் நல்ல முன்னேற்றத்தை கண்டு நல்ல பார்மில் உள்ளார்.

1. ஆவேஷ் கான்: ஆரம்பம் முதலே ரன்களை வாரி வழங்கிய போதிலும் ஹர்ஷல் படேல் மற்றும் ஜஸ்பிரித் பும்ரா ஆகியோர் காயமடைந்ததால் கடைசி நேரத்தில் அதிர்ஷ்டத்தால் தேர்வான இவர் இந்த ஆசிய கோப்பையில் கொஞ்சமும் முன்னேறாமல் பங்கேற்ற 2 போட்டிகளிலும் ரன்களை வாரி வழங்கி பின்னடைவை ஏற்படுத்தினார்.

Avesh-Khan-2

அறிமுகமானது முதல் தென் ஆப்பிரிக்காவுக்கு எதிரான ஒரு போட்டியில் 4 விக்கெட்டுகளை எடுத்தது தவிர எஞ்சிய அத்தனை போட்டிகளிலும் ரன்களை வாரி வழங்கும் வள்ளலாக இருக்கும் இவர் ரசிகர்களின் விமர்சனத்திற்கும் கிண்டல்களுக்கும் உள்ளாகியுள்ளார். அதனால் உலகக்கோப்பைக்கான இந்திய அணியில் ரிசர்வ் வீரர்களின் பட்டியலில் கூட இவர் இடம் பிடிக்க மாட்டார் என்று நம்பலாம்.

Advertisement