அவரும் ஒத்துக்கிட்டாரு.. சிஎஸ்கே தளபதி ஜடேஜாவை வேதனையுடன் ராஜஸ்தானிடம் விட்டது ஏன்? விஸ்வநாதன் பதில்

Kasi Viswanathan
- Advertisement -

ஐபிஎல் 2026 கிரிக்கெட் தொடருக்கு முன் சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்காக சஞ்சு சாம்சன் ட்ரேடிங் முறையில் வாங்கப்பட்டுள்ளார். அதற்கு பதிலாக ரவீந்திர ஜடேஜா மற்றும் சாம் கரண் ஆகியோரை ராஜஸ்தான் அணிக்காக சிஎஸ்கே கொடுத்துள்ளது. அதில் ரவீந்திர ஜடேஜாவை ராஜஸ்தான் அணிக்கு சிஎஸ்கே தாரை வார்த்தது பல சென்னை ரசிகர்களுக்கு ஏமாற்றமாக அமைந்துள்ளது.

ஏனெனில் 2012 முதல் சிஎஸ்கே அணிக்காக விளையாடிய ஜடேஜா 2018, 2021, 2023 கோப்பைகளை தோனி தலைமையில் வெல்ல முக்கிய பங்காற்றினார். குறிப்பாக 2023 ஐபிஎல் தொடரின் இறுதிப்போட்டியில் கடைசி நேரத்தில் கைமீறிய வெற்றியை அவர் பெற்றுக் கொடுத்ததை மறக்க முடியாது. அதனால் தல தோனிக்கு அடுத்தபடியாக சிஎஸ்கே அணியின் தளபதி என்று கொண்டாடப்பட்டு வந்த ஜடேஜா தற்போது திடீரென ராஜஸ்தானுக்கு சென்றுள்ளது நிறைய ரசிகர்களை சோகத்தில் ஆழ்த்தியுள்ளது.

- Advertisement -

கடினமான முடிவு:

இந்நிலையில் இம்முடிவு சிஎஸ்கே அணி மற்றும் 36 வயதாகும் ஜடேஜா ஆகியோரின் வருங்காலத்தைக் கருத்தில் கொண்டு எடுக்கப்பட்டுள்ளதாக தலைமை நிர்வாக இயக்குனர் காசி விஸ்வநாதன் தெரிவித்துள்ளார். இம்முடிவுக்கு ரவீந்திர ஜடேஜா முழு மனதுடன் சம்மதம் தெரிவித்ததாகவும் அவர் கூறியுள்ளார். அந்த வேதனையான முடிவு பற்றி அவர் பேசியது பின்வருமாறு.

“கடந்த பல வருடங்களில் சிஎஸ்கே அணியின் வெற்றிகளுக்கு பொறுப்பாக இருந்த ஜடேஜாவை விடுவது மிகவும் கடினமான முடிவாகும். அதை அணி நிர்வாகம் எடுத்துள்ளது. இது சிஎஸ்கே நிர்வாகம் எடுக்க வேண்டிய கடினமான முடிவுகளில் ஒன்றாகும். அதே சமயம் தற்போது சிஎஸ்கே அணி வருங்காலத்தை நோக்கிய மாற்றத்தில் இருப்பதால் இந்த கடினமான முடிவை நிர்வாகம் எடுக்க வேண்டியுள்ளது”

- Advertisement -

விஸ்வநாதன் விளக்கம்:

“அதற்கு முன்பாக வீரர்களிடம் அது பற்றி பேசுவது முக்கியம். அவர்களுடைய சம்மதத்துக்குப் பின்பே நாங்கள் முடிவை எடுத்துள்ளோம். ஜடேஜாவிடம் பேசும் போது அவரும் தமக்கான வாய்ப்புகள் பற்றி தெளிவாக இருந்தார். ஏனெனில் அவரும் வெள்ளைப்பந்து கிரிக்கெட்டில் தம்முடைய கேரியரின் இறுதிக்கட்டத்தை நோக்கிச் செல்கிறார். அதனால் நாமும் சென்னையிலிருந்து இடைவெளி எடுக்கலாம் என்று அவர் கருதினார்”

இதையும் படிங்க: 4 ஆவது சர்வதேச வீரராக டெஸ்ட் போட்டிகளில் மாபெரும் சாதனையை நிகழ்த்தி அசத்திய – ரவீந்திர ஜடேஜா

“எங்கள் அணியில் குறிப்பிட்ட வீரர்கள் கேரியரின் இறுதியில் உள்ளார்கள். அதனால் சிஎஸ்கே அணியை புதிதாக கட்டமைக்க வேண்டிய சூழ்நிலையில் உள்ள எங்களுக்கு மினி ஏலத்தில் சிறந்த இந்திய பேட்ஸ்மேனை (சாம்சன்) வாங்கும் வாய்ப்பு கிடைக்காது. அதனாலேயே இம்முடிவு எடுக்கப்பட்டுள்ளது. இதற்காக ரசிகர்கள் மிகுந்த ஏமாற்றத்துடன் இருப்பார்கள். ஏனெனில் அவர்கள் ஏற்கனவே நிறைய மெசேஜ் அனுப்பினார்கள். இருப்பினும் வருங்காலத்தைக் கருத்தில் கொண்டு மாற்றம் தேவை என்று நாங்கள் கருதினோம். இதனால் சிஎஸ்கே அணியின் வருங்கால வெற்றிகள் மற்றும் செயல்திறன் தொடரும் என்று நம்புகிறோம்” எனக் கூறினார்.

Advertisement