4 ஆவது சர்வதேச வீரராக டெஸ்ட் போட்டிகளில் மாபெரும் சாதனையை நிகழ்த்தி அசத்திய – ரவீந்திர ஜடேஜா

Jadeja
- Advertisement -

இந்தியா மற்றும் தென்னாப்பிரிக்க அணிகளுக்கு இடையேயான 2 போட்டிகள் கொண்ட டெஸ்ட் கிரிக்கெட் தொடரின் முதலாவது போட்டியானது நேற்று நவம்பர் 14-ஆம் தேதி கொல்கத்தா நகரில் உள்ள ஈடன் கார்டன்ஸ் மைதானத்தில் துவங்கியது. அதன்படி நடைபெற்று வரும் இந்த ஆட்டத்தில் டாஸ் வென்று முதலில் பேட்டிங் செய்த தென்னாப்பிரிக்க அணியானது தங்களது முதல் இன்னிங்சில் 159 ரன்களுக்கு சுருண்டது.

4 ஆவது வீரராக ரவீந்திர ஜடேஜா நிகழ்த்திய சாதனை :

அதனை தொடர்ந்து தங்களது முதல் இன்னிங்க்ஸை விளையாடி வரும் இந்திய அணியானது இன்றைய இரண்டாம் நாள் உணவு இடைவேளை வரை நான்கு விக்கெட்டுகளை இழந்து 138 ரன்களை குவித்துள்ளது. இந்திய அணி சார்பாக அதிகபட்சமாக கே.எல் ராகுல் 39 ரன்களையும், வாஷிங்டன் சுந்தர் 29 ரன்களையும் குவித்துள்ளனர்.

- Advertisement -

இந்த போட்டியின் போது இந்திய அணி சார்பாக ஆறாவது வீரராக களமிறங்கி விளையாடி வரும் ரவீந்திர ஜடேஜா 15 பந்துகளை சந்தித்து 1 பவுண்டரியுடன் 11 ரன்களை எடுத்து ஆட்டமிழக்காமல் களத்தில் உள்ளார். அவர் அடித்த இந்த 11 ரன்கள் மூலம் சர்வதேச டெஸ்ட் கிரிக்கெட் போட்டிகளில் நான்காவது சர்வதேச வீரராக ஒரு மாபெரும் சாதனையை நிகழ்த்தியுள்ளார்.

அதாவது இன்றைய போட்டியில் அவர் 10 ரன்களை எட்டும் போது சர்வதேச டெஸ்ட் போட்டிகளில் 4000 ரன்களை பூர்த்தி செய்துள்ளார். இதன்மூலம் 19 ஆவது இந்திய வீரராக கே.எல் ராகுலுக்கு அடுத்து டெஸ்ட் போட்டிகளில் 4000 ரன்களை பூர்த்தி செய்து அசத்தியுள்ளார்.

- Advertisement -

அதோடு ஏற்கனவே அவர் 87 டெஸ்ட் போட்டிகளில் விளையாடி 338 விக்கெட்டுகளை வீழ்த்தியுள்ள வேலையில் சர்வதேச டெஸ்ட் போட்டிகளில் 4000 ரன்கள் மற்றும் 300 விக்கெட்டுகளை எடுத்த நான்காவது சர்வதேச வீரர் என்ற சாதனையை அவர் நிகழ்த்தியுள்ளார்.

இதையும் படிங்க : இதை நான் கொஞ்சம் கூட எதிர்பாக்கல.. சாய் சுதர்சன் விடயத்தில் நிர்வாகம் செய்தது பெரிய தப்பு – அணில் கும்ப்ளே கருத்து

இவருக்கு முன்னதாக இயான் போத்தம், டேனியல் வெட்டோரி, கபில் தேவ் போன்ற ஜாம்பவான்கள் வீரர்கள் இந்த சாதனையை நிகழ்த்திருக்கும் வேளையில் இந்த பட்டியலில் இரண்டாவது இந்திய வீரராக ரவீந்திர ஜடேஜா இந்த சாதனை பட்டியலில் இணைந்துள்ளது குறிப்பிடத்தக்கது.

Advertisement